Thursday, June 25, 2015

”வைகோ” ஆண்ட்ராய்டு செயலியை வைகோ துவக்கி வைத்தார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்காக ‘Vaiko’ என்ற பிரத்யேக ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செல்போன் செயலி (application) உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று 25.06.2015 மாலையில் தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பொத்தானை அழுத்தி தொடக்கி வைத்தார்.

இதன் மூலம் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிக்கைகள், அன்றாட நிகழ்வுகள், புகைப்படங்கள், ஒளிக்காட்சிகள் உடனுக்குடன் பதிவேற்றப்படும். ‘Vaiko’ என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து அன்றாட கழக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 

பொதுச்செயலாளர் வைகோ குறித்த பொது தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் அறிந்திட கீழே கொடுக்கப்பட்ட link- click செய்து செயலியை தங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ளலாம்https://t.co/SF7k4LGcCV. இது 4.55 mb அளவுடைய சிறிய அளவிலான செயலியாகும். Smart Phone களில் PLAY STORE ல் VAIKO என டைப் அடித்து அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மாணவர்களிடம் வைகோ அவர்கள் பேசும்போது, இளமை பருவத்தில் மாணவர்களுடன் இணைந்து தான் ஆற்றிய பணிகளையும், கழக நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டதுடன், தற்போது மாணவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளதையும் பாராட்டி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, மாணவர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள் சேஷன், ப.த.ஆசைத்தம்பி, மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநிலச் செயலாளர் பா.சசிக்குமார், மத்திய சென்னை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மு.மாயன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த முயர்ச்சிக்கு காரணமான மறுமலர்ச்சி மாணவர் மன்றம் மாநில செயலாளர் பொறியாளர் வழக்குரைஞருக்கு படித்துக்கொண்டிருக்கும் அருமை தம்பி பா.சசிகுமார் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  இதற்காக அரும்பாடுபட்ட அனைத்து மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் கண்மணிகளுக்கும் ஓமன் இணையதள அணி வாழ்த்துதலையும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இணையத்தில் பல சாதனைகளை செய்து தலைவர் வைகோவையும் கழகத்தையும் உலக அளவில் எடுத்து செல்லவும், இணையத்தின் மூலம் களமாடி வருகிற சட்டசபை தேர்தலில் மதிமுக வின் பலத்தை  நிரூபிக்கவும் வாழ்த்துகிறோம். 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment