ஆந்திர மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட 20 குடும்பத்தினருக்கு ஆதரவும் பாதுகாப்பும்" பொதுக்கூட்டம் இன்று (26.06.2015) போளூரில் நடைபெற்றது. அதில் தலைவர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஆந்திர ஶ்ரீவாரு சேசாலம் வனப்பகுதியில் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பதைக் கண்டித்து முதன் முதலில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போர் என்று அறிவித்தார். பின்பு காவல் துறை அறிவிப்பு காரணமாக வேலூரில் கைது செய்யப்பட்டு வேலூர் மாநாகராட்சி அலுவலகம் அருகில் உள்ள டி.பி.தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார் தொண்டர்களுடன்.
அண்ணன் வேல்முருகன் தலைவராக இருக்கும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் உடல் நிலை ஒத்துழைக்காத போதும் கலந்து கொண்டு உணர்ச்சிப் பிழம்பாக முழங்கினார். அதன் பின்பு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் பிரதமரை சந்திக்கும் குழுவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதியை அனுப்ப அழைத்த பொழுது 20 தமிழர்கள் விடயத்தையும் கோரிக்கை மனுவில் இணைக்குமாறு கூறியவர் தலைவர்.
அதன் பின்பு மனித உரிமைகளுக்கான குடிமக்கள் காப்பகம் சார்பில் நடைபெற்ற உண்மை நிலை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்ற பொழுது அதில் கலந்து கொண்டு 20 தமிழர்கள் குடும்பங்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நிதியுதவி செய்து அற்புதமான உரை வழங்கினார். தொடர்ச்சியாக குடிமக்கள் காப்பகம் சார்பில் திருவண்ணாமலை போளூர் அண்ணா சிலை அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உண்மையில் தலைவர் பிறவிப் போராளி. இவரைப் போன்ற ஒரு போராளி இனி தமிழ்நாட்டில் தோன்றவும் முடியாது. தலைவர் அரசியல் வானில் ஆச்சரியம்.
செய்தி சேகரிப்பு: தீபன் முகநூல்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment