திருப்பூரில் நடைபெறவிருக்கும் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடைபெறுவதையொட்டி திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆவடி பாபு ரெட்டியார் மஹாலில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஒன்றிய,நகர,பேரூர்,கிளை,வட்ட செயலாளர்கள்,அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சிறப்பான பங்களிப்பை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.மேலும் தந்தைப் பெரியார் பிறந்த நாளையும் சிறப்பாக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.
இதில் திருவள்ளூர் மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தீர்மானக் குழு செயலாளர் அண்ணன் ஆவடி இரா.அந்தரிதாஸ்,கழக மாநில கொள்கை விளக்க அணி துணைச்செயலாளர் கனல் காசிநாதன்,மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் கலை சேகர்,பொருளாளர் அட்கோ மணி,அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டி.சி.ஆர்,சட்டத் திருத்தக்குழு செயலாளர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சிறப்பாக ஆவடி நகர செயலாளர் இனயதுல்லா செய்திருந்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment