Thursday, June 22, 2017

மதிமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் இமாம் பெருமிதம்! வைகோ நெகிழ்ச்சி!

மறுமலர்ச்சி திமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் இம்பீரியல் உணவக ஹாலில் 21-06-2017 ல் நடந்தது.

அதில் பேசிய இஸ்லாம் மதத்தை சேர்ந்த இமாம் அவர்கள் பேசும்போது, சிறையில் இருந்தாலும் இந்த இப்தார் விருந்து தடைபடக் கூடாது என்ற எண்ணம் உடைய வைகோ அவர்களின் எண்ணத்திற்காகவே இங்கு கட்சிகளை தாண்டி நம்மவர்களை வரவைத்து உள்ளது என்று பேசினார்.

மேலும், அவர் மீது இனம் புரியாத ஒரு பாசம் உண்டு, அவரது பண்பு உன்னதமானது என தன் உரையில் தெரிவித்தார்.


சிறப்புரையாற்றிய வைகோ அவர்கள், இஸ்லாம் மார்க்கம் உண்ணவிரதம் பற்றிய செய்திகளை பேசினார். 

புழல் சிறையில் அடைபட்டவர்களில் ஏகபட்டபேர் நிரபராதிகள். ஆள் கிடைக்காமல் இவர்களை பிடித்து வைத்துள்ளார்கள்.

அந்த சிறைவாசிகளுக்கு 2500 பேருக்கும் முராத்புஹாரி ஏற்ப்பாட்டில், அரிமா சங்கத்தினர்கள் வழங்கினார்கள்.

52 நாட்கள் சிறையிலிருந்து வரும்போது அங்குள்ள முஸ்லிம் சிறைவாசிகள் நாங்கள் 30 நாட்கள் நோன்பு வைக்கிறோம். உங்களால் முடிந்தால் எதாவது அனுப்பி வையுங்கள் என்று கேட்டார்கள்.

10 நாள் நோன்புக்குரிய பொருட்களை புழல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய தோழர் களுக்கு அனுப்பி வைத்தோம் என்றார்.

தொடர்ந்து பேசும்போது, உணவு பழக்க வழக்கங்கள் அவரவர் உரிமை. விருப்பப்படும் உணவை சாப்பிடுவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

இந்த திருநாளிலே இவ்வளவு மக்களை சந்தித்ததற்கும், உங்களை சந்தித்ததற்கும் உங்கள் அனைவருடைய திருமுகங்களை காண்பதற்கும் வாய்ப்பளித்த முராத் புஹாரி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து அனைவருக்கும் ரமதான் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, June 21, 2017

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திராவை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் ஆலோசனை படி, திருவள்ளுவர் மாவட்ட செயலாளர் டிஆர்ஆர்.செங்குட்டுவன் அவர்களின் ஏற்பாட்டில், திருவண்ணாமலை, வேலூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்து, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசை கண்டுத்து இன்று காலை 10 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு காந்திசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்.

நன்கு மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, June 20, 2017

விருத்தாசலம் (வ) ஒன்றிய செயலாளர் சா.பாண்டியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

கடலூர்(வ) மாவட்டம் விருத்தாசலம் (வ) ஒன்றிய செயலாளர் சா.பாண்டியன் அவர்களின் புதல்வன் சுதாகர் மற்றும் பாரதி ஆகியோரின் திருமண வரவேற்பு நேற்று 19-06-2017 அன்று நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, June 18, 2017

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவல் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கும் எழுதியுள்ள கடிதம்

அஸ்ஸாம் மாநில முதல்வர் அன்புள்ள திரு சர்வானந்த சோனோவல் அவர்களுக்கு, வணக்கம். 

கீழ்காணும் ஒரு விண்ணப்பத்தைத் தங்கள் கவனத்திற்கு முன்வைக்கின்றேன்.

அஸ்ஸாம்-மேகாலயா தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரியான (2006 பிரிவு) டாக்டர் என். இராஜமார்த்தாண்டன், அஸ்ஸாம் மாநில குற்றப் புலனாய்வுத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் தேமாஜி மாவட்டம், சிலாபத்தர் நகரத்தில், கடந்த மார்ச் 6 ஆம் நாள் நிகழ்ந்த வன்முறைகள் குறித்துப் புலனாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.

நிகில் பாரத் பெங்காலி உத்பஸ்து சமான்னய சமிதி (நிப்பஸ்) என்ற, வங்கதேசத்தில் இருந்து வந்த, வங்க மொழி பேசும் இந்துக்கள் அமைப்பு ஒன்று, தங்களுக்கு இந்தியக் குடி உரிமை கோரி ஒரு பேரணியை ஏற்பாடு செய்து இருந்தனர். அப்போது, அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்க அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர். அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிப்பஸ் அமைப்பினர் சில தகவல்களைக் கேட்டு விண்ணப்பித்ததன் அடிப்படையில், டாக்டர் ராஜமார்த்தாண்டன், அஸ்ஸாம் மாநிலக் காவல்துறை, அந்தப் போராட்டம் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் சில தகவல்களை அளித்து இருக்கின்றார். இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஏப்ரல் 7 ஆம் நாள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 12 ஆம் நாள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனக்குத் தெரிந்த அளவில், தமிழகத்தின் பழம்பெருமை மிக்க கோவில் நகரமான மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜமார்த்தாண்டன் ஒரு நேர்மையான அதிகாரி என்பதுடன், 2015, 2016 ஆம் ஆண்டுகளில் சிறப்பாகப் பணி ஆற்றியமைக்காக அரசு விருதும் பெற்றுள்ளார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம் அதிகாரியின் எதிர்காலத்தைக் கனிவுடன் கருத்தில் கொண்டு, அவரது பணி இடை நீக்கத்தை இரத்துச் செய்து பாதுகாத்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க நன்றியுடன்,
வைகோ 

இவ்வாறு தமது கடிதத்தில் 17.06.2017 அன்று குறிப்பிட்டுள்ளார்.

Dear Shri Sarbananda Sonowal ji,

Vanakkam.

May I draw your kind attention to the following genuine representation.

Dr N. Rajamarthandan, a 2006 badge IPS officer of the Assam-Meghalaya Cadre, a senior Superintendent of Police in the State Criminal Investigation Department (CID), who was heading the Special Investigation Team (SIT) to probe about the riot took place 6.3.2017 at Silapathar Town, Dhemaji District, Assam.

It is reported that a rally was organised by a Bngali Hindu outfit, Nikhil Bharat Bengali Udbastu Samannay Samity (NIBBUS), an organisation of migrant Bengali Hindus to putforth their demand for citizenship and other related issues regarding them.

It is stated that an apparent provocation, the office of All Assam Student’s Union (AASU) was attacked by the demonstrators.

The members of the NIBBUS were arrested and put behind the bars. 

Dr. N. Rajamarthandan was heading the Special Investigation Team, formed by the State Government, to probe into the March 6th attack on AASU at Silapathar Town. It is understood that Dr. Rajamarthandan, also the Public Information Officer of CID, furnished information from a report compiled by the State Police on the Silapathar incident to NIBBUS, receiving a request on Right to Information Act.


Dr. N. Rajamarthandan was suspended and arrested on 7th April and detained in the Jail and he was released on bail on 12th June.

According to my knowledge and information, Dr. N. Rajamarthandan hails from Tamilnadu, a village nearby the Temple City Madurai, is an exemplary honest officer who has received a grading of outstanding officer in last two consecutive APAR (i.e. 9.2/10 and 9.5/10 for the years 2015 and 2016 respectively.

He belongs to the oppressed Dalit community.

I would request you to kindly take a sympathetic view to revoke the suspension and protect this young honest officer’s future, for which I shall be highly obliged.

Yours sincerely,
(Vaiko)


Hon’ble Sarbananda Sonowal,
Chief Minister,
Government of Assam,
Guwahati



ஓமன் மதிமுக இணையதள அணி

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சுக்கு வைகோ கண்டனம்!

கோவை - காந்திபுரத்தில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்குதலில் அலுவலக ஜன்னல் மற்றும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரின் ஒரு பகுதியும் சேதம் அடைந்துள்ளன.

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.பி. பவனில் நுழைந்து இந்துத்துவா கும்பல் ஒன்று கடந்த வாரத்தில் தாக்குதல் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டது.

அதுபோல தற்போது தமிழகத்தில் கோவையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக் குழு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 17-06-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஈழத்துக்கு ஆதரவாக வைகோ பேசிய வழக்கு ஜூன் 21 க்கு ஒத்திவைப்பு!

கடந்த 15.07.2009 அன்று சென்னை, இராணி சீதை ஹாலில் ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டிக்கத் தக்கது என்று அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு ஜூன் 17-ஆம் தேதி சனிக்கிழமை (17.06.2017) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அந்த விசாரணையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கு விசாரணை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

இப்தார் நிகழ்ச்சி நடத்திய அமீரக மறுமலர்ச்சிப் பேரவை!

அமீரக மறுமலர்ச்சிப் பேரவையின் சார்பில் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி 16.6.2017 வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில் அன்னபூர்ணா ஹோட்டல் உள் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 25 ஏழைத் தொழிலாளர்களுக்கு ரமலான் பரிசு வழங்கப்பட்டது. திரு.ஸ்டாலின் பீட்டர் மற்றும் திரு.இசக்கி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க,

திரு.D.தேவராஜ், திரு.பாலமுருகன், திரு வில்லிச்சேரி.பாலமுருகன் ,திரு. N.C.துரை, திரு. L.லெனின் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

திரு.K.ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரையாற்ற, திரு. T.சேவியர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு மக்கள் தலைவர் வைகோ அவர்கள் ஆற்றிய தொண்டுகளும், பங்களித்த அறப்போராட்டங்களும் எனும் தலைப்பில் திரு. கார்த்திகேயன் அவர்களும், ரமலானின் சிறப்புகள் என்னும் தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவாளர் திரு.நாசர் அலி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சகோதரர் பிலால் அலியார் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி துபாய் மண்டலச் செயலாளர் திரு. யூசுப் அவர்களும்,அக்கட்சி சகோதரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிமுக தோழர்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தகவல்: சாஜகான்

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, June 14, 2017

இலக்கிய அணி அமைப்பாளர் இல்ல திருமண விழாவில் வைகோ வாழ்த்து!

தஞ்சையில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மாரிமுத்து அவர்களின் அருந்தவப்புதல்வன் மணிவண்ணன்_குமுதா ஆகியோரின் திருமணம் இன்று 14-06-2017 நடந்தது. 

இந்த திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி, மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல! வைகோ அறிக்கை!

வங்கிகளின் வாராக் கடன் குறித்து வங்கித் தலைவர்களுடன் ஜூன் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். அவ்விதம் தள்ளுபடி செய்வதற்கhன தொகையை மாநிலங்கள் தங்களது உள் வள ஆதாரங்கள் மூலம் திரட்ட வேண்டும். மத்திய அரசு நிதி உதவி அளிக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு, மாநிலங்களுக்கு உதவ முடியாது என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ள கருத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பருவ மழை பொய்த்து, கடும் வறட்சியால் வேளாண்மைத் தொழில் முற்றாக நலிந்துவிடும் அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கடன் சுமையைத் தாங்க முடியாமல் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 200 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை முன்வைத்து மராட்டியம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் கடந்த பத்து நாட்களாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு கhணாத வறட்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரூ.39595 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1748.28 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வறட்சி நிவாரணப் பணிகளுக்கோ போதுமானது அல்ல. இந்நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு உதவ முடியாது என்று கை விரித்து விட்டது நியாயமானது அல்ல.

மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வரி வருவாய் 32 விழுக்கhடு அளவிலிருந்து 42 விழுக்கhடு அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நிதி ஆயோக் வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி மக்கள் தொகை, வனப் பரப்பு மற்றும் வருமான அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று தமிழகத்திற்கு 13 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி ஒதுக்கீட்டின் அளவு 4.969 விழுக்கhட்டிலிருந்து, 14 ஆவது நிதிக்குழு பரிந்துரையில் 4.023 விழுக்கhடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய வரிவருவாய் பகிர்ந்தளிக்கப்படுதில் பாரபட்சம் கhணப்படுகிறது.

வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.6 இலட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டதால் வாராக் கடனை வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகhரங்கள் அளித்து மத்திய அரசு இயற்றி உள்ள சட்டத்திற்கு கடந்த மே 2017 இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக அருண் ஜெட்லி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தொழில் அதிபர்களும், பெரு நிறுவனங்களும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூலிக்க முடியாததால், மத்திய அரசு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, வெளிநாடு சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் வங்கிக் கடனை வசூலிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுவதும், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களின் நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்றைய 14-06-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, June 13, 2017

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தலைமைக் கழக அறிவிப்பு


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று கhலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.06.2017


என மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, June 12, 2017

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத் அவர்களின் புதல்வன் தோப்பன் மற்றும் இந்துஜா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 11-06-2017 நடந்தது. 

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி