அமீரக மறுமலர்ச்சிப் பேரவையின் சார்பில் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி 16.6.2017 வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில் அன்னபூர்ணா ஹோட்டல் உள் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 25 ஏழைத் தொழிலாளர்களுக்கு ரமலான் பரிசு வழங்கப்பட்டது. திரு.ஸ்டாலின் பீட்டர் மற்றும் திரு.இசக்கி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க,
திரு.D.தேவராஜ், திரு.பாலமுருகன், திரு வில்லிச்சேரி.பாலமுருகன் ,திரு. N.C.துரை, திரு. L.லெனின் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
திரு.K.ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரையாற்ற, திரு. T.சேவியர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இஸ்லாமிய சமுதாயத்திற்கு மக்கள் தலைவர் வைகோ அவர்கள் ஆற்றிய தொண்டுகளும், பங்களித்த அறப்போராட்டங்களும் எனும் தலைப்பில் திரு. கார்த்திகேயன் அவர்களும், ரமலானின் சிறப்புகள் என்னும் தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவாளர் திரு.நாசர் அலி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சகோதரர் பிலால் அலியார் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி துபாய் மண்டலச் செயலாளர் திரு. யூசுப் அவர்களும்,அக்கட்சி சகோதரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதிமுக தோழர்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment