அன்புள்ள திரு நரேந்திர மோடி அவர்களுக்கு,
வணக்கம். சௌதி அரேபியா, ஈஜிப்ட், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொண்டதைத் தொடர்ந்து, கிழக்கு லிபிய அரசும், மாலத்தீவு ஆகிய நாடுகளும் அதே முடிவை எடுத்துள்ளன.
யேமன் நாட்டில் நடைபெறும் போரில் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளில் இடம் பெற்று இருந்த கத்தார் படையினரை சௌதி அரேபியா விலக்கி விட்டது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடன் போக்குவரத்துத் தொடர்புகளை அறவே நிறுத்திக் கொண்டன. எனவே, வானூர்திக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
நிலைமை எல்லை மீறிச் செல்லுமானால், கத்தார் நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்துக் குடிமகன்களின் நலன்களையும் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகளைத் தூதரக உறவுகள் மூலம் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் அரசு மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் செயல்படும் என நம்புகின்றேன்.
நன்றி,
No comments:
Post a Comment