Thursday, June 22, 2017

மதிமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் இமாம் பெருமிதம்! வைகோ நெகிழ்ச்சி!

மறுமலர்ச்சி திமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் இம்பீரியல் உணவக ஹாலில் 21-06-2017 ல் நடந்தது.

அதில் பேசிய இஸ்லாம் மதத்தை சேர்ந்த இமாம் அவர்கள் பேசும்போது, சிறையில் இருந்தாலும் இந்த இப்தார் விருந்து தடைபடக் கூடாது என்ற எண்ணம் உடைய வைகோ அவர்களின் எண்ணத்திற்காகவே இங்கு கட்சிகளை தாண்டி நம்மவர்களை வரவைத்து உள்ளது என்று பேசினார்.

மேலும், அவர் மீது இனம் புரியாத ஒரு பாசம் உண்டு, அவரது பண்பு உன்னதமானது என தன் உரையில் தெரிவித்தார்.


சிறப்புரையாற்றிய வைகோ அவர்கள், இஸ்லாம் மார்க்கம் உண்ணவிரதம் பற்றிய செய்திகளை பேசினார். 

புழல் சிறையில் அடைபட்டவர்களில் ஏகபட்டபேர் நிரபராதிகள். ஆள் கிடைக்காமல் இவர்களை பிடித்து வைத்துள்ளார்கள்.

அந்த சிறைவாசிகளுக்கு 2500 பேருக்கும் முராத்புஹாரி ஏற்ப்பாட்டில், அரிமா சங்கத்தினர்கள் வழங்கினார்கள்.

52 நாட்கள் சிறையிலிருந்து வரும்போது அங்குள்ள முஸ்லிம் சிறைவாசிகள் நாங்கள் 30 நாட்கள் நோன்பு வைக்கிறோம். உங்களால் முடிந்தால் எதாவது அனுப்பி வையுங்கள் என்று கேட்டார்கள்.

10 நாள் நோன்புக்குரிய பொருட்களை புழல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய தோழர் களுக்கு அனுப்பி வைத்தோம் என்றார்.

தொடர்ந்து பேசும்போது, உணவு பழக்க வழக்கங்கள் அவரவர் உரிமை. விருப்பப்படும் உணவை சாப்பிடுவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

இந்த திருநாளிலே இவ்வளவு மக்களை சந்தித்ததற்கும், உங்களை சந்தித்ததற்கும் உங்கள் அனைவருடைய திருமுகங்களை காண்பதற்கும் வாய்ப்பளித்த முராத் புஹாரி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து அனைவருக்கும் ரமதான் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment