Monday, March 4, 2019

மாவட்ட செயலாளர் உடல்நலன் விசாரித்த வைகோ!

இன்று (04.03.2019) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இரு சக்கர வாகன விபத்தில் காலில் அடிபட்டு கொளப்பாக்கத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வரும் காஞ்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஊனை. ஆர்.இ.பார்த்தீபன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

உயர்நிலைக்குழுக் கூட்டம், தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை (05.03.2019 செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

இணையதள தோழர் பம்மல் பிரவீன் திருமணத்தை நடத்தி வைத்தார் வைகோ!

மதிமுக இணையதள தோழரும் காஞ்சி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான பம்மல் பிரவீன் திருமணம் இன்று 04-03-2019 சென்னையில் நடந்தது. 

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். 

திருமண தம்பதியர் 75 அடி உயர கொடிக்கம்பத்தையும் மணமக்களுடன் சேர்ந்து ஏற்றி வைத்து திராவிட இயக்கம் வாழ்க, மணமக்கள் வாழ்க என கோசங்களை எழுப்பினார் தலைவர் வைகோ.

Sunday, March 3, 2019

திண்டுக்கல் தேர்தல் நிதியளிப்பு கூட்டம்!

மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திண்டுக்கல்லில் இன்று 03-03-2019 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கும் முன் பல்லாயிரக்கணக்கான திமுக தோழர்கள் இருவண்ண கொடிகளை கையில் ஏந்தி கூட்டணியின் வெற்றிவேந்தர் வைகோ வாழ்க என்று விண்முட்ட வாழ்த்து முழக்கம் எழுப்பினார்கள் .
செங்கொடி ஏந்திய கம்யூனிஸ்டு தோழர்கள் வெல்லட்டும் வெல்லட்டும் எங்கள் வைகோ வெல்லட்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள் .
கூட்ட நெரிசலில் மெல்ல நகர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குள் மெல்லிய சிரிப்போடு உள்ளே நுழைந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதில் திமுக எம் எல் ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய வைகோ அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை இங்கிருந்தே தொடங்குவதாக அறிவித்தார்.

வெங்கடேசன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

திண்டுக்கல்லில் இன்று 03-03-2019 காலையில் திரு வெங்கடேசன் அவர்கள் இல்ல திருமண விழா நடந்தது. இந்த மண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் துணைவியாருடன் கலந்துகொண்டார்.

இதில் மணமக்களுக்கு வாழ்த்து கூறி உரை வழங்கினார். ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saturday, March 2, 2019

சூழலியல் போராளி முகிலன் மீட்பு போராட்டம்!

சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில் ஏறியவரை காணாமலாக்கப்பட்டுள்ளார். அவரை கண்டுபிடிக்க மதிமுக உள்ளிட்ட பல அரசியல் இயக்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இன்று 02-03-2019 சென்னையில் முகிலனை மீட்க தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுக சார்பில் துணைச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

அவருடன் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

சென்னையில் மதிமுகவின் 27 ஆவது பொதுக்குழு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் களங்களைச் சந்திக்கும் அணுகுமுறை, கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்த விவாதங்கள் அனைத்தும் மார்ச் 6 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் சென்னை மாநகர், அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் நடைபெற இருக்கும் 27 ஆவது பொதுக்குழுவில் வடிவமைக்கப்பட இருக்கின்றன. முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழைக் கொண்டுவருவதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு சங்கொலி சந்தா கட்டிய ஆதாரத்தையும் காண்பித்து பொதுக்குழுவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறவேண்டும்.

கழக வரலாற்றில் நடைபெற இருக்கும் 27 ஆவது பொதுக்குழு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் 02-03-2019 அன்று அழைப்பு விடுத்துள்ளார்.

Friday, March 1, 2019

பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டிய வைகோ!

இந்திய பிரதமர் மோடி அவர்களின் குமரி வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டமிட்டபடி, குமரி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் கறுப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

ஏராளமான குமரி மற்றும் நெல்லை மாவட்ட தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் 650 பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் பணகுடியில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.