இந்திய பிரதமர் மோடி அவர்களின் குமரி வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டமிட்டபடி, குமரி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் கறுப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
ஏராளமான குமரி மற்றும் நெல்லை மாவட்ட தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.
இதில் 650 பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் பணகுடியில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment