மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திண்டுக்கல்லில் இன்று 03-03-2019 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கும் முன் பல்லாயிரக்கணக்கான திமுக தோழர்கள் இருவண்ண கொடிகளை கையில் ஏந்தி கூட்டணியின் வெற்றிவேந்தர் வைகோ வாழ்க என்று விண்முட்ட வாழ்த்து முழக்கம் எழுப்பினார்கள் .
செங்கொடி ஏந்திய கம்யூனிஸ்டு தோழர்கள் வெல்லட்டும் வெல்லட்டும் எங்கள் வைகோ வெல்லட்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள் .
கூட்ட நெரிசலில் மெல்ல நகர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குள் மெல்லிய சிரிப்போடு உள்ளே நுழைந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதில் திமுக எம் எல் ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய வைகோ அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை இங்கிருந்தே தொடங்குவதாக அறிவித்தார்.
No comments:
Post a Comment