மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் களங்களைச் சந்திக்கும் அணுகுமுறை, கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்த விவாதங்கள் அனைத்தும் மார்ச் 6 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் சென்னை மாநகர், அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் நடைபெற இருக்கும் 27 ஆவது பொதுக்குழுவில் வடிவமைக்கப்பட இருக்கின்றன. முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழைக் கொண்டுவருவதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு சங்கொலி சந்தா கட்டிய ஆதாரத்தையும் காண்பித்து பொதுக்குழுவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறவேண்டும்.
கழக வரலாற்றில் நடைபெற இருக்கும் 27 ஆவது பொதுக்குழு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் 02-03-2019 அன்று அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment