குமரிமாவட்டம் குளச்சல் அண்ணா சிலை அருகில் மதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா 23-06-2018 சனி மாலை நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மதிமுக மாநில மகளிரணி அமைப்பாளர் மருத்துவர் ரோஹையா ஷேக் முகம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
23-06-2018 மதியமே நாகர்கோயில் வந்த மருத்துவர் ரோஹையா ஷேக் முகம்மது அவர்களை குமரிமாவட்ட மதிமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.
தொடர்ந்து நாகர்கோயில் நகர கழகத்தின் சார்பாக நாகர்கோவில் நகரில் முதல் வெள்ளிவிழா கொடிகம்பத்தை மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் Rohaiyaah Sheik Mohammed அவர்கள் கொடி ஏற்றி வைத்து பெயர் பொறிக்கப்பட்ட பளிங்கு பலகையை திறந்து வைத்து சிறப்பித்தார்.
மாலையில் குளச்சல் நகர பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் குளச்சல் நகர செயலாளர் ஸ்டார்வின் தம்புராஜ், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், துணை செயலாளர் ஆனந்த ராஜ், அவைதலைவர், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய நகர செயலாளர்கள், குமரி மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்ட மதிமுக
No comments:
Post a Comment