உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி சேதம் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை இன்று 28/06/2018 வியாழன் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தார்.
அப்போது குமரிமாவட்ட மதிமுகவினர் சார்பில் மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் தலைமையில் நகரசெயலாளர் ஜெரோம் ஜெயக்குமார் அவர்களின் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
உடன் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தராஜன், மாவட்ட பொருளாளர் பிச்சிமணி, மாநில மாணவரணி துணை செயலாளர் அண்ணன் ராஜ்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் அரிராமஜெயம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுமேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் அஸ்வின், பீர்முகம்மது, தொண்டரணி பயிற்சியாளர் காஜாமைதீன், மாநில MLF செயலாளர் சந்திரன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் நெல்சன், தோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நீலகண்டன், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் ராணிசெல்வின், தோவாளை ஒன்றிய செயலாளர் ராமய்யா ஆகியோர் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment