தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை, பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ளன.இதுகுறித்து, விவசாயிகள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். வேளாண்துறை அதிகாரிகள் நேற்று வருகை தந்து ஆய்வு செய்தனர். இவை, பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல; அச்சப்படத் தேவை இல்லை என்று கூறி உள்ளனர்.
இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அவர்களுடன் பேசினார். ஆட்சியர் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், தமிழக அரசின் விவசாயத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
பிடிபட்ட வெட்டுக்கிளிகளை எடுத்துக்கொண்டு விவசாயிகள், இன்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 02-06-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment