ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டு, அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு பெற்றதாக, தமிழக முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்து உள்ளார்; மேலும், 11 ஆம் வகுப்புத் தேர்வுகளும் இரத்துச் செய்யப்படும், 12 ஆம் வகுப்புத் தேர்வுக்கு, வருகைப் பதிவு ஏடும், கால்ஆண்டு, அரைஆண்டு தேர்வு மதிப்பெண்களுள் 80 விழுக்காடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருப்பது, எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தருகின்றது.
கொரோனா தொற்று நோயைக் காரணம் காட்டி, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஏப்ரல் 7 முதன்முதலில் நான் அறிக்கை கொடுத்து இருந்தேன்.
அதுகுறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், “வைகோ இவ்விதம் அறிக்கை கொடுத்து இருக்கின்றார்” என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
மீண்டும் மே 13 ஆம் தேதி அன்று, தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அறிக்கை கொடுத்தேன்,
மூன்றாவது முறையாக, ஜூன் 8 ஆம் தேதி அறிக்கை கொடுத்து, தேர்வுகளை ரத்துச் செய்யக் கோரி வலியுறுத்தி இருந்தேன் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நாளை நடத்துவதாக அறிவித்த அறப்போராட்டமும், இதற்கு ஒரு காரணம் என்பதில் மகிழ்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 9-6-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment