மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு தரக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (12.06.2020) உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில், தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுச் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
இது தொடர்பாக வைகோ அவர்கள், ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் தொடுத்து இருந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நேற்று (11.06.2020) அளித்த உத்தரவின் பேரில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 12-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment