Wednesday, August 5, 2020

ஒமானில் மறைந்த வெங்கட்ராமன் அவர்கள் உடல் சோஹாரில் தகனம்!

ஒமான் புரைமியில்‌ பாசமிகு அண்ணன் வெங்கட்ராமன் அவர்கள் 03-08-2020 கொரொனா கோவிட் 19 பாதிப்பால் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளித்தது. 

அவரது உடலை தாயகம் கலிங்கப்பட்டி கொண்டு செல்ல ஒமான் அரசின் அனுமதி கிடைக்காததால், குடும்பத்தார் ஒப்புதலுடன் வெங்கட்ராமன் அவர்களது, இறுதி சடங்கு ஒமான் சோஹாரில் இந்து மஹாஜன் சபா மூலம், இந்து முறைப்படி, புது வேட்டி, சட்டை, மலர் வளையம், தங்க காசு, பட்டாடை மற்றும் சில பொருட்கள் வைத்து, அவரது உடல் 05-08-2020 இந்திய நேரப்படி மாலை 4.45 க்கு தகனம் செய்யப்பட்டது.  

அண்ணன் புகழ் ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையில் நிலைத்து நிற்கும். புகழஞ்சலியை செலுத்துகிறோம். 

மறுமலர்ச்சி மைக்கேல் 
செயலாளர் 
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment