16.10.2020 இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில், வாழும் கட்டபொம்மன் மதிப்புமிகு மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் சார்பில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.இரமேஷ், புதுக்கோட்டை செல்வம், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.கவினர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிருவாகிகள் உள்ளிட்ட மதிமுகவினர் நூற்றுக்கணக்கில் சீரான சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் விநாயக ராமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.
No comments:
Post a Comment