1965 களில் திராவிட முன்னேற்ற கழகத்தை தென் பாண்டி மண்டலத்தில் வேரூன்ற வைத்த தலைவர் வைகோ அவர்களுக்கு நம்பிக்கையாகவும் வலது கரமாகவும் சங்கரன்கோவில் நகர மன்றத்தின் தந்தையாகவும் இருந்து வந்த திரு பழனிச்சாமி பி.காம், அவர்களின் மனைவியும், எம் லட்சிய தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ M.P அவர்களுடைய தனி செயலர் அருணகிரி அவர்களின் தாயாரும் ஆகிய பெருவாழ்வு வாழ்ந்த திருமதி
மங்கையர்கரசி பழநிசாமி (86) அவர்கள் 15-10-2020 அன்று இயற்கை எய்தினார்.
அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் நகரம், வடகாசி அம்மன் கோவில் தெருவில் உள்ள அன்னார் இல்லத்தில் வைத்து 15-10-2020 நடைபெற்றது.
மறைவு செய்தி கேட்டு தலைவர் வைகோ அவர்களுடைய சகோதரர் ரவிச்சந்திரன் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
உடன் மாநகர் மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணாச்சி உவரி டைமண்ட் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.ரமேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ப.கல்லத்தியான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், தலைவரின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சுதாபாலசுப்ரமணியன், உள்ளிட்ட நிர்வாகிகளும் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
மாநில மாணவர் அணி துணை செயலாளர் முகவை.இரா.சங்கர், தலைவர் வைகோ அவர்களின் நிழற்படக் கலைஞர் போட்டோ ராஜா, கழகத்தின் வெளியீட்டு மாநில துணைச்செயலாளர் விக்டர் எபினேசர், கழகத்தின் குறுந்தட்டு விற்பனையாளர் அக்பர் அலி, மற்றும் நடுவை சொ. முருகன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று, தென்காசி மாவட்ட மறுமலர்ச்சி
திமுக சார்பில் தி.மு.இராசேந்திரன் அவர்கள் மாலை சூட்டி புகழ் வணக்கம் செலுத்தினார். அவருடன் நகரச்செயலாளர் ச.ஆறுமுகச்சாமி, இரத்னகுமார், அரங்கநாதன், பூக்கடை பொன்னுசாமி, ஆட்டோ தொழிற்சங்க தலைவர் நைனார் முகம்மது, ச.இலட்சுமி நாராயணன், முப்பிடாதி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment