தமிழ்த் தாயின் தலைமகன், தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 வது நினைவுநாள் 03-02-2021 அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் துயில் கொண்டிருக்கும் பேரறிஞர் அண்ணா சமாதிக்கு திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் வைகோ எம்பி அவர்களின் தலைமையில் மதிமுக துணை பொதுச் செயலாளர்கள், பொருளாளர், மாநில அணிகளின் செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment