மேதினி போற்றும் மே நாள் என்று, மே முதல் நாளை, உழைப்பாளர் நாளாக உலகமே கொண்டாடி மகிழ்கின்றது.
Friday, April 30, 2021
வைகோ MP மே நாள் வாழ்த்து!
Thursday, April 29, 2021
திருச்செந்தூர் கோவிலில் இந்திக் கல்வெட்டா? வைகோ MP கண்டனம்!
Wednesday, April 28, 2021
திருச்சி பெல் ஆலையில் உயிர்க்காற்று ஆக்குக! வைகோ கோரிக்கை!
அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபின் மீட்டர், அதாவது 150 உருளைகள் உயிர்க்காற்று ஆக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலைநேரங்களில் குறைந்தது 400 உருளைகள் உயிர்க்காற்று ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது.
எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், உயிர்க்காற்று ஆக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.04.2021
Tuesday, April 27, 2021
திரைப்பட இயக்குனர் தாமிரா மரணம்! வைகோ MP இரங்கல்!
வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட நடுத்தர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சேக் தாவூது.
தாம் பிறந்த நெல்லைச் சீமையில் வற்றாது பாய்ந்து ஓடும் ஜீவ நதியாம் தாமிர பரணி நதி மீது கொண்ட பற்றுதலால் தம் பெயரை தாமிரா என மாற்றிக் கொண்டார்.
இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவர்.
முதன்முதலாக கல்கியில் இவர் எழுதிய அப்பா எனும் சிறுகதை அனைவர் மனதிலும் இடம் பிடித்தது.
ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என தமிழக வாரப்பத்திரிகைகளில் இவர் எழுதிய சிறுகதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.
தாமிராவின் கதை புனையும் ஆற்றலால் கவரப்பட்ட பாலச்சந்தர், தான் இயக்கிய “பொய்” படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார்.
படப்பிடிப்பிற்காக இத்திரைப்பட குழுவினர் அனைவரும் இலங்கை சென்றுவிட தாமிரா விற்கு கடவுச்சீட்டு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய்விடுமோ என வருந்திய நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாத நிலையில் என்னைத் தொடர்பு கொண்டார்.
அவருக்கு கடவுச்சீட்டு கிடைக்க நான் உடனடியாக ஏற்பாடு செய்த உதவியால் அவர் இலங்கை பயணமானார்.
பொய் படத்தின் வசனங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
தனது திறமையால் படிப்படியாக உயர்ந்த தாமிரா, தனது குருநாதர் பாலச்சந்தரையும இயக்குனர் சிகரம் பாராஜாவையும் வைத்து ரெட்டைச்சுழி எனும் திரைப்படத்தை இயக்கினார்.
அதன்பின் பாலச்சந்தரின் பட்டரையில் வளர்ந்த சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்துவரும் அன்புச் சகோதரர் சமுத்திரகனி அவர்களை நாயகனாகக் கொண்ட ஆண்தேவதை எனும் திரைப்படத்தை இயக்கினார்.
தொடர்ந்து குறும்படங்கள், வெப் சீரியல்கள் எடுத்து வந்தார்.
தமிழ் திரையுலகிற்கு தம் திறமையாலும் ஆற்றலாலும் இன்னும் பல சிறப்புக்களைச் சேர்க்க வேண்டிய தம்பி தாமிரா 52 வயதில் கொடிய கொரோனா தொற்றால் மறைந்த செய்தி மனதை வாட்டுகிறது.
அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்தும், நலம் விசாரித்தும் என்னிடம் அலைபேசியில் உரையாடும் தாமிராவின் குரலை இனி என்று கேட்பேன்?
தாமிராவை இழந்து அதிர்ச்சியில் திகைத்து நிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.04.2021
ஸ்டெர்லைட்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு! வைகோ MP அறிக்கை!
பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1997 இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில் நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட் மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
அந்த ரிட் மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. .இதற்கு இடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது.
தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது.
தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது. மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.04.2021
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ MP அவர்கள், இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கு, மின் அஞ்சல் வழியாக எழுதி இருக்கின்ற கடிதம் (27.4.2021): புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்; ஏன்?
1. இந்திய விடுதலையின்போது, கல்வி என்பது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலையின்போது, காங்கிரஸ் அரசு, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அப்போது, தமிழ்நாடு தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தி வந்தது. பிரதமர் இந்திரா காந்தியின் முடிவை, காங்கிரஸ் முதல்வர்கள் எதிர்க்கவில்லை. எனவே, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு, மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துக் கொண்டனர்.
2. அதன்பிறகு அமைந்த நடுவண் அரசுகளும், கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வந்தன. மாநில மொழிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, இந்தி மொழியை முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதனால், காலப்போக்கில் மாநில மொழிகள் படிப்படியாக அழிந்து விடும். பல ஆயிரம் ஆண்டுகளாக மாநில மக்கள் கடைப்பிடித்து வருகின்ற பண்பாடு, பழக்கவழக்கங்களை, இந்தி மொழித் திணிப்பு அழித்து விடும்.
எனவேதான், தமிழ்நாட்டு மக்கள் இந்தியை எதிர்த்து 1937 ஆம் ஆண்டு முதன்முதலில் அறப்போர் நடத்தினர். அதன்பிறகு, பல்வேறு காலகட்டங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ‘இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி’ என்று, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் புரட்சி வெடித்தது. கர்நாடகம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது.
அதன் விளைவாக, “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகின்ற வரையிலும், ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக நீடிக்கும்” என, பண்டித ஜவகர்லால் நேரு அறிவித்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள், “தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை....தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டும்தான் ஆட்சி மொழிகள்” என அறிவித்தார்கள்.
அதன்படி, இன்றுவரை தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை. அதன் விளைவாக, தமிழக மாணவர்கள் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்று, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சாதனை நிகழ்த்தி வருகின்றனர்.
3. உலகம் முழுமையும் இந்தியைப் பரப்புவதற்காக, இந்திய அரசு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருகின்றது. ஆனால், மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் இந்தி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார்கள். தமிழுக்கு இடம் இல்லை.
4. இதுவரை இந்தியைப் பரப்பியது போதாது என்று, புதிய கல்விக்கொள்கையின் வழியாக, சமற்கிருத மொழியைக் கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா கட்சி அரசு தொடங்கி இருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, இந்தியாவில் சமற்கிருதம் பேசுகின்றவர்கள் வெறும் 24000 பேர்தான். பேச்சுவழக்கில் இல்லாத, இறந்து போன ஒரு மொழியின் வளர்ச்சிக்காக, பல நூறு கோடி ரூபாய்கள் செலவில், பல பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்து இருக்கின்றார்கள். அதேவேளையில், பல கோடி மக்கள் பேசுகின்ற பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, மைதிலி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளின் வளர்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கவில்லை; நடுவண் பல்கலைக்கழகங்களையும் தொடங்கவில்லை.
5. இன்றைய நிலையில், கூகுள், பேஸ்புக் போன்ற வலைதளங்கள், ஒரு மொழியில் எழுதுகின்ற கருத்துகளை, உலகின் 200 க்கும் மேற்பட்ட மொழிகளில், சில நொடிகளில் மொழிபெயர்த்துத் தருகின்றன. அதேபோல, ஒருவர் பேசுவதையும், பல மொழிகளில் பெயர்த்துச் சொல்கின்றது. உள்ளங்கை அளவிலான சிறிய மொழிபெயர்ப்புக் கருவிகளின் துணையோடு, தமிழ்நாட்டு வணிகர்கள் சீனாவுக்குச் சென்று வணிகம் செய்து வருகின்றனர்.
எனவே, இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒருவர், தன் தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் படிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இந்தி, சமற்கிருத மொழிகளைப் படிக்க வேண்டிய தேவையும் அறவே இல்லை.
6. ஆங்கிலம் அயல்நாட்டு மொழி; அதைக் கற்க மாட்டோம் என்று இந்தி பேசும் மாநிலத்தவர்கள் சொன்னால், மாநில மொழிகளைப் பேசுகின்ற மக்களுக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான்.
7. தமிழ்நாடு மாநிலம், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே, இந்தியாவில் ஒரு மாற்றுக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி கண்டு இருக்கின்றது. அதன் விளைவாக, இன்று இந்தியாவில் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கின்றது. பல நூற்றாண்டுகளாக, சமூகத்தில் நிலவி வருகின்ற பாகுபாடுகளைக் களைந்து இருக்கின்றது. சமத்துவத்தை நிலைநாட்டி வருகின்றது.
8. இந்தியாவில் பள்ளிகளில் முதன்முதலாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியது. இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஏழு கிலோ மீட்டருக்கு ஒரு மேனிலைப்பள்ளியை அமைத்தது தமிழ்நாடு. அதேபோல, மாநில அரசு நடத்தி வருகின்ற கல்லூரிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம்.
9. அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வி வழங்கப்படுகின்றது. தமிழ் மொழியில் பயில்வோருக்கு, தேர்வுக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணமும் கிடையாது. மாறாக, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இட ஒதுக்கீட்டுக் கொள்கை முழுமையாகப் பின்பற்றப்படுகின்றது. பெண் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கின்றது. இன்று, ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.
10. புதிய கல்விக்கொள்கை, கல்வியை முழுக்க முழுக்க மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கின்றது. கூட்டு ஆட்சித் தத்துவத்தையும், அதிகாரப் பரவலையும் மறுக்கின்றது. மாநில அரசுகளிடம் இருந்து கல்வியை, முற்றுமுழுதாகப் பறித்துக் கொள்வதே, இக்கொள்கையின் நோக்கம் ஆகும். மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சிந்திக்கும் உரிமையை முடக்கி விடுகின்றது.
11. இன்று இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த ஆண்டில் மட்டும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
ஆனால், மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கின்ற வகையில், நடுவண் அரசு, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதனால், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேருவதற்குப் பெருந்தடையை ஏற்படுத்தி இருக்கின்றது.
மேனிலைக் கல்வி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பு எண்களின் அடிப்படையில்தான் அனைத்து உயர் கல்வியிலும் சேர்க்கை நடைபெற வேண்டும். மாறாக, அதற்கு ஒரு தனித்தேர்வு என்பது, தகுதி, திறமை என்று கூறி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கல்வி உரிமையை, முற்று முழுதாகப் பறித்து விடும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்ற பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை நடைபெறுகின்றது. ஏழைகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக ஆகி விடும்.
12. உலகில் எத்தனை நாடுகளில் மும்மொழிக் கொள்கை இருக்கின்றது? எங்கேயும் கிடையாது. அமெரிக்கர்கள், பிரெஞ்சு மொழியைப் பேச மாட்டார்கள். பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலம் பேசுவதையோ, கற்பதையோ அறவே விரும்புவது இல்லை.
13. சீனர்களும், ஜப்பானியர்களும் தங்கள் தாய்மொழியைத் தவிர, ஆங்கிலம் கூடக் கற்பது இல்லை. ஆனால், அந்த நாடுகள் இன்று உலக அளவில் வியத்தகு அறிவியல் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
14. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க, புதிய கல்விக் கொள்கையின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல, இந்தி பேசுகின்ற மாநிலங்களில், பெங்காலி, மராட்டி உள்ளிட்ட பிற மாநில மொழிகள் கற்பிக்க நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றதா? இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க மோசடியான திட்டம்.
15. அனைவருக்கும் தாய்மொழிக் கொள்கை என்று பேசுகின்றார்களே தவிர, உண்மையில், இந்தியைத் திணிக்கவும், அதற்கும் மேலாக இப்போது சமற்கிருதத்தைத் திணிக்கவும்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
16. 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மண்பாண்டம் செய்தல், மின்சார வேலைகள் உள்ளிட்ட ஒரு தொழிலை, அந்தத் தொழில் நடக்கின்ற இடங்களுக்கு சென்று பத்து நாட்கள் பயிற்சி பெற வேண்டும் என்பது, குலக்கல்வித் திட்டமே ஆகும்.
17. தற்போது நடைமுறையில் இருக்கின்ற 10+2 என்ற அமைப்பைச் சிதைத்து, 5,3,3,4 என்ற புதிய கல்வி அமைப்பைக் கொண்டு வருகின்றார்கள். அதனால், மாணவர்கள் இடைநிற்றல்தான் கூடுமே தவிர, கல்வியின் தரம் உயராது. இதுகுறித்து, மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை.
18. மாநில அரசுகளிடம் இருக்கின்ற கல்வியை, முற்று முழுதாகத் தனியார்மயம் ஆக்குகின்ற வகையில்தான் புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தாங்கள் ஈட்டுகின்ற இலாபத்தை, முதலீடாக மாற்ற வகை செய்கின்றது. கல்விக் கொள்ளை நடைபெற வழி வகுக்கின்றது.
19. 15 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து இருந்தாலும், அது உயர்கல்விக்கான தகுதி இல்லை என புதிய கல்விக்கொள்கை சொல்லுகின்றது. அதன்பிறகு, இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறுகின்ற மதிப்பு எண்களை வைத்துத்தான் கல்லூரியில் சேர்ப்பார்களாம். இது உயர்கல்விக்கு வழி வகுக்கின்றதா? அல்லது இலட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுத்து, அவர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றுகின்ற முயற்சியா?
எனவே, இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டவும், சாதி மதப் பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்ற, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் குழுக்கள் இயக்கி வருகின்ற, பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, தாங்கள் விரிவாக ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில், எதிர்ப்புக் கருத்தை வெளிப்படுத்துமாறு, அன்புடன் வேண்டுகின்றேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
VAIKO’s LETTER TO NON BJP CHIEF MINISTERS AND POLITICAL LEADERS.
27 APRIL 2021
Dear Sir/Madam,
I would like to bring to your kind notice, Why Tamilnadu is opposing the New
Education Policy (2020).
The Bharatiya Janata Party led Central Government is taking steps to implement the New Education Policy.
In the Constitution of India, the subject-Education- was in the State List.
During Emergency, the Congress Government brought it to the Concurrent List.
At that time, the Congress Party was in power in all the States, except in Tamilnadu. Therefore, the States which were under Congress Rule, did not oppose this move.
This move is against what was originally enshrined in the Constitution of India.
The Government which came to power in Centre, subsequent to emergency,
continued Education in the Concurrent List and thereby deprived the State Government of its rights.
The result was, the local languages were ignored and Hindi was given prominence.
It was feared, local languages which are mother tongues to crores and crores of people would die, if this system continued to prevail.
It was also feared, culture and tradition and language cherished by the local people in the States would be destroyed by imposition of Hindi.
This is the reason why people of Tamilnadu continuously protested against the
imposition of Hindi, right from 1937.
Realising that the Hindi imposition is detrimental to the culture, tradion and language of the States, the erudite Pandit Jawaharlal Nehru announced that English would also be the official language as long as the non-hindi speaking people desired.
However, the Hindi imposition continued and the Government announced Hindi to be the only official language.
It led to a revolution in 1965, not only in Tamilnadu, but also in states like Karnataka, Punjab, Bengal, Andhra Pradesh, Kerala etc.
The protest against Hindi by the people of Tamilnadu led to the defeat of Congress in 1967 General Election and the victory of DMK in the hustings. Perarignar Anna
became the Chief Minister and he declared that there would be no room for Hindi in Tamilnadu and only Tamil and English would be the official languages of the State.
But, the Tamilnadu Government is not against Dakshina Bharat Hindi Prachar Sabha and their classes and examinations in Hindi.
Since, Hindi was not imposed on students in Tamilnadu, they could focus their
attention on English which helped them to bag employment opportunities and reach high positions in USA and European Countries.
The Union Government is spending huge sums of money to spread Hindi worldwide. Even in countries where Tamils live in large numbers like Sri Lanka, Malaysia, Singapore, Gulf Countries, UK, USA, Hindi is being taught in Indian Embassies. But, there is no attempt made by the Union Government to teach Tamil or any other Indian language.
Now, in addition to Hindi, the BJP Government is taking steps to impose Sanskrit, a dead language under the garb of New Education Policy. It is relevant to point out, according to the 1971 census, the total number of people whose mother tongue is Sanskrit is 24000 only.
To promote a language spoken by so few, the Union Government has established Sanskrit Universities spending crores of money. But at the same time, languages like Bengali, Marathi, Tamil, Telugu, Kannada, Malayalam etc., which are spoken by
millions of people are ignored by the Union Government by non-allocation of adequate funds for their development.
In this digital era, sites like Google, Facebook translate contents into as many as 200 languages in a jiffy. Even the speech transcripts are translated utilising this technolocy. Tamil businessmen are trading in China and other countries using this technology.
So, in this 21st Century, it would not be wrong to say that there is no need for anyone to learn any other language than his own mother tongue.
Thus, there is no need to learn Hindi and Sanskrit too.
If English is a foreign language for Hindi speakers, then Hindi is a foreign language for the people who have their own regional languages as their mother tongue.
The Education Policy implemented and followed so far in Tamilnadu, has placed the State in zenith in many fields not only in this country but also in the world. It has removed diversities and brought commendable unity in the state.
Tamilnadu is the first State in India to implement Midday Meal Scheme for students.
Much before the Right to Education Act was implemented, Tamilnadu boasted a
Primary School for every one KM, a middle school in every 3 kms and a High School for every 7 Kms. It can rightly br proud of having Government Colleges, for Higher Education far more in number than in any other States.
Tamilnadu is the only State to have 50 medical colleges and 11 more medical colleges would be opened in this year.
But, the Union Govenment is mendling with the admission in these colleges with the introduction of NEET. It has blown away the dreams of many rural and poor students of becoming Doctors and serving rural India.
Admissions to all higher educations should be based on the scores of Higher
Secondary Class examinations. But, eligibility tests in the name of recognising talents are conducted, which deny opportunities and rights of the poor and oppressed classes as the ill-afford lakhs of rupees of money to coach themselves for such talents spotting examinations like NEET.
Professional Education thus becomes an evalascent dream forever.
In Government Schools in Tamilnadu, Tamil is the medium of instruction. There is no exam fee or any other fee for students who learn through Tamil media. There are scholarships for them. Reservation Policy is scrupulously followed. Women
education is in full swing. More girls are going to higher studies than boys.
When this is our performance in the field of Educaion, we feel that the Union
Government is trying to monopolise education. This is against the federal structure of the Constitution and Centralisation of authority.
The purpose of NEP, in our view, is to snatch away the initiative in Education of the State Government and dull the thinking capacity and creativity of the student, which according to us would flourish only if local parameters play.
The NEP speaks about three language policy. We wonder, how many countries in the world have accepted a three language policy!
The French won’t learn English and the English won’t learn French.
China and Japan don’t learn English. They learn the subjects in their mother tongue. Yet, all these people achieve remarkable accomplishments in the global arena.
The NEP speaks out allocation of money to the development of Hindi in non-hindi speaking states. But, it does not allocate funds for the development of regional
languages.
The NEP speaks about learning through mother tongue. But, it is only lip service. Its heart beats only for the imposition of Hindi and Sanskrit.
NEP further speaks about children below 13 years of age to learn some skills like carpentry, pottery etc., in working places at least for a month. It is an indirect
imposition of Manu Dharma Policy.
Where is the necessity to study these skills when they are early teens?
The NEP breaks the existing 10+2 system and suggests 5,3,3,4 systems.
This in our view, will promote discontinuation of Education by students.
It further aims to privatise the education sector which is now in the hands of State Governments.
This will help the private sector to make profits in the field of education.
The NEP speaks of entrance examinations by the National Examination Authority to enter in higher education, even after 15 years of schooling.
This we consider totally unnecessary as we feel it will stop lakhs of students from entering the colleges.
Therefore, I request you to kindly study in depth and come out with your considered opposition to the New Education Policy, adumberated by the Bharatiya Janata Party, egged on by the RSS and Sangh Parivar, which imposes Hindi and Sanskrit on other languages and thereby destorys them besides annihilating Social Justice by promoting differences on the basis of Caste, Community and Religion in India.
With regards,
Yours sincerely,
Vaiko
Member of Parliament
General Secretary
MDMK Party.
Monday, April 26, 2021
ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும்! வைகோ MP அறிக்கை!
Saturday, April 24, 2021
புதிய கல்விக் கொள்கை: தமிழில் இல்லை. வைகோ MP கண்டனம்!
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது! வைகோ அறிக்கை!
சீதாராம் எச்சூரி மகன் மறைவு! வைகோ MP இரங்கல்!
கொரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்துவது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு - வைகோ MP அறிக்கை!
பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிப்பு! வைகோ MP கடும் கண்டனம்!
Sunday, April 18, 2021
இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு! வைகோ கண்டனம்!
நடிகர் விவேக் மறைவுக்கு வைகோ எம்பி இரங்கல்!
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு வைகோ MP மரியாதை!
அண்ணா பல்கலைக்கழகப் பொறிஇயல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் - வைகோ எம்பி அறிக்கை!
அண்ணா பல்கலைக்கழகம், பொறிஇயல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை, கடந்த மார்ச் மாதம் இணைய வழியில் (ஆன்லைன்) நடத்தியது. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதினார்கள்.