Wednesday, June 1, 2022

தலைவர் வைகோ அவர்களுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

இன்று 31.05.2022 காலை அண்ணாநகர் இல்லத்தில் நம் இயக்க தந்தை தலைவர் வைகோ எம்.பி.., அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார்.
   
உடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோரும் தலைவர் வைகோ அவர்களிடம்  வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.
   
சமகால அரசியல் வரலாற்றில் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் மிக மூத்த அரசியல் தலைவராகவும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகவும், லட்சியங்களுக்காகவும்  சமரசம் செய்து கொள்ளாமல், தமிழ் மண்ணிற்காகவும் தமிழக மக்களுக்காகவும் உரிமை மீட்பு போராளியாக இருக்கும் அண்ணன் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

உடன் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சு.ஜீவன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழக குமார், வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் டி.சி. ராஜேந்திரன்
தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத்தலைவர் க.இளவழகன்,சைதை பகுதி செயலாளர் எஸ்.வி.குமார், அண்ணா நகர் பகுதி செயலாளர் இராம. அழகேசன், அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர் எம்.கே.சுரேஷ், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் காட்வின் அஜூ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அவெஞ்ஜெர் ஜெய்,  பகுதி துணைச் செயலாளர் எஸ்.லயனல், மாணவரணி துணை அமைப்பாளர் வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
31.05.2022

#Vaiko #DuraiVaiko #MDMK #anbumaniramadoss #PMK

No comments:

Post a Comment