Wednesday, June 1, 2022

ஈராக்கில் சிக்கிய இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது! வைகோ MP க்கு, அயல் உறவுத் துறை விளக்கம்!

அயல்உறவுத்துறை துணைச் செயலாளர் (Under Secretary) அருண்குமார், இன்று (01.06.2022) காலையில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் நாள், அயல் உறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு, நீங்கள் ஒரு கடிதம் எழுதி இருந்தீர்கள்.

தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், ஈராக் நாட்டின் கர்பலாவில் மேற்கொண்டுள்ள  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 7500 இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுள் 2000 பேர் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனம் நீட்டித்த போதிலும், ஈராக் நாடு விசா நீட்டிப்பு தரவில்லை.   அவர்களுடைய கடவுச் சீட்டுகளில், ‘Departure only’ என்ற முத்திரையைக் குத்தினர். 

இந்த முத்திரை இருந்தால், அதன்பிறகு, அவர்கள், துபாய், கத்தார் அல்லது வளைகுடாவில் வேறு நாடுகளுக்குச் செல்ல முடியாது.

எனவே, இதுகுறித்து ஈராக் அரசுடன் பேசி, பிரச்சினையைத் தீர்க்குமாறு தாங்கள் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள். 

இதுகுறித்து, அமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்கள். தொழிலாளர்களுடைய பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டு விட்டது; இனி அவர்கள் வளைகுடாவில் வேறு நாடுகளுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திமுக
சென்னை - 8
‘தாயகம்’
01.06.2022

#Vaiko #DuraiVaiko #MDMK

No comments:

Post a Comment