Monday, May 4, 2015

வாணியம்பாடி மதநல்லிணக்க பெருவிழா வைகோ தலைமையேற்பு!

மாவீரன் திப்பு சுல்தானின் 216 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் சார்பற்ற மாபெரும் மத நல்லிணக்க பெருவிழா மற்றும் வீரத்தாய் வேலுநாச்சியாரின் நாட்டிய நாடகம் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வில், வி.ஐ.டி பல்கலைகழக வேந்தர் மரியாதைக்குரிய ஜி.விஸ்வநாதன், மாவீரன் திப்பு சுல்தானின் கொள்ளு பேரன்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

முல்லை பெரியார் ஆய்வை மத்திய அரசு தடுக்க வேண்டும் வைகோ!

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள மாநில அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கு மோடி அரசு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவது குறித்து ஆராய மத்திய அரசின் தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்துள்ள தகவல் முன்பே வெளியானது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் சார்பில், பல்வேறு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வுகள் நடந்தன.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழுவின் அறிக்கை 2012 ஏப்ரல் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

“முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை; நில நடுக்கம் ஏற்பட்டாலும முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது” என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.

2014 மே 7 ஆம் தேதி அன்று அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியது. அத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடி என்ற அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,மத்திய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவும், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர், அணை பலமாக உள்ளதால் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று அறிவித்தது. தமிழக அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது.

ஆனால், கேரள அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறுஅணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2014 டிசம்பர் 3 ஆம் தேதி, கேரளாவின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், “முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே; அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று தனது முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. கேரள மாநில அரசு புதிய அணைக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதை மத்திய அரசு அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, May 3, 2015

மதுரை விமான நிலையத்தில் புலியும், சிறுத்தையும் நேருக்கு நேர்!

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அரசியல் எல்லைகளைக் கடந்து சுக துக்கங்களில் பங்கெடுப்பவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள். அதே போல அரசியல் நாகரீகத்தை தவறாது கடைபிடிப்பவர் வைகோ அவர்கள். இன்றைக்கு மதுரை விமான நிலையத்தில் தலைவர் வைகோ அவர்களும், திருமாவளவன் அவர்களும் எதேச்சையாக சந்தித்தனர். இந்த நேருக்கு நேரான சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

வாணியம்பாடி மத நல்லிணக்க பெருவிழா வைகோ பங்கேற்பு!

நாளை 04.05.2015 மாவீரன் திப்பு சுல்தானின் 216ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் சார்பற்ற மாபெரும் மத நல்லிணக்க பெருவிழா மற்றும் வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் மாலை 5. 00 மணிக்கு வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் நடைபெறும். இந்த மத நல்லிணக்க பெருவிழாவில் தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். கழக கண்மணிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டு அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

‎விருதுநகர் மதிமுக இரு சக்கர வாகன பேரணி!

‎விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தாமிரபரணி கூட்டு குடிநீர்‬ ‎திட்டத்தை நிறைவேற்றக் கோரி மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில் இன்று இருசக்கர பேரணி ஊர்வலம்‬ நடந்தது. இதில் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு இருசக்கர வாகன பேரணியை வெற்றிபெற செய்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

‎கோவில்பட்டியில் திருமண மண்டப திறப்பு விழாவில் வைகோ!

தூத்துக்குடி மாவட்டம்‬ ‪ கோவில்பட்டியில், தூத்துக்குடி மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் விநாயக ரமேஷ் அவர்களின் திருமண மண்டப திறப்பு விழாவில், ‎தமிழினத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் ‎வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்‬. இந்த வைபவத்தில் கழக முன்னோடிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

சாத்தூரில் மதிமுக மாபெரும் உண்ணாவிரதம்!

‎விருதுநகர் மாவட்டம்‬ ‪சாத்தூரில் தாமிரபரணி கூட்டு‬ குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதம் விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்றது. 

இந்த உண்ணாவிரத பந்தலில் கழகத்தின் முன்நாள் ஒன்றிய செயலாளர், ஆருயிர் சகோதரர் வென்கடேஷ் சம்பத் அவர்கள், கோபிநாத், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுக தொண்டர்படை துணை அமைப்பாளர் தாயகம் கிருஷ்ணமூர்த்தி இல்ல மண விழா மல்லை சத்யா பங்கேற்று வாழ்த்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் அண்ணன் தாயகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் சதீஸ்குமார் அவர்களின் திருமணம் அம்பத்தூர் B.ஸ்.V.மஹாலில் நடைபெற்றது.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது.

"இந்த இயக்கத்திற்கு வந்த பின்பு கோடீஸ்வர்ர்கள் எல்லாம் இலட்சாதிபதி ஆகிவிட்டனர்.தம்பி சதீஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தன்னலம் கருதாது உழைப்பவர்.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.காதல் திருமணமாக சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்று இருக்கின்றது." என்று மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்வில் திராவிடத் தென்றல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,கழகத்தின் வானம்பாடி அந்தரிதாஸ்,நெமிலிச்சேரி பாபு,வெற்றிச்செல்வம்,பூவை து.கந்தன், தாமோதரன், இரா.அருணாசலம், தாமோதரன், ஆட்டோராஜ் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

(செய்தி சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்)


மதிமுக இணையதள அணி - ஓமன்

Saturday, May 2, 2015

சென்னை தமிழர் நீதிப் பேரணியில் வைகோ எழுச்சி உரை!

தமிழக தலைவர்களில் சுயநலம் காட்டுபவர்கள் மத்தியில், பொதுநலத்திற்காக ஓய்வில்லாமல் பாடுபடும் மக்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்கள், 20 தமிழர்களின் நீதிக்காக சென்னையில் நடந்த நீதிப் பேரணிக்கான பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அதை இந்த காணொளியாக இணைத்துள்ளேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

உலக மகளிர் தின உரை தொகுப்பு நாளை இமயம் ரீவியில் வைகோ!

இமயம் தொலைக்காட்சியில் நாளை மற்றும் 10 ஆம் தியதி, தலைவர் வைகோ அவர்களின் உலக மகளிர் தினம் மற்றும் திண்டுக்கல் வேலுநாச்சியார் நாடக நிகழ்வுகளின் உரை தொகுப்பை காணத்தவறாதீர்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

20 தமிழர்களின் நீதிக்கு திரைப்பட கலை குடும்பம் போராடாதது ஏன்?

நடிகர் கமலகாசன் நடித்து நேற்று வெளியாகவிருந்த உத்தமவில்லன் திரைப்படமானது திடீரென்று திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த திரைக்குடும்பமே ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து கொம்பன் திரைப்பட பிரச்சினையை அடுத்து, கலைக்குடும்பத்தின் அனைத்து சங்கங்களும் கூடி அமர்ந்து 24 மணி நேரம் சிறு தூக்கம் கூட இல்லாமல் தொடர்ந்து பேசி உத்தமவில்லன் திரைப்படத்தை இன்று மதியம் முதல் திரையிட ஏற்பாடு செய்துள்ளார்கள். 

பணம் வசூலிக்கும் திரைப்படங்களுக்கெல்லாம் ஒற்றுமையாக இணைந்து தூக்கமில்லாமல் போராடும் கலைக்குடும்பம், ஆந்திர மாநிலத்தில், சித்தூர் பகுதியில், செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என பொய் குற்றச்சாட்டின் பேரில் பிடித்து கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட 20 அப்பாவி கூலித்தொழிலாளர்களின் நீதி வேண்டி தமிழகமே கொந்தளித்த போதும், பலமுனை போராட்டங்களை நடத்தியபோதும், சிறு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்?

அப்பாவி தமிழர்களுக்காக போராடினால் பணம் கிடைக்காது, திரைப்படத்துக்காக போராடினால், அப்பாவி ஏழைத்தமிழர்களிடத்திலிருந்து பணம் கிடைக்கும் என்ற சுய நலம் தானே உங்களிடத்தில் மேலோங்கி உள்ளது. பணத்திற்காக மட்டுமே ஒற்றுமையாக இணைந்து உறங்காமல் 24 மணி நேரம் தொடர்ந்து போராடும் நீங்கள், விலைமதிக்க முடியாத 20 தமிழர்களின் உயிருக்காக போராடவில்லையே? அனைத்து நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றாக இணைந்து ஊடகவியலாளர்களுக்கு பல் இழித்து பேட்டி மட்டும் கொடுக்குறீர்களே! இதை எண்ணும்போது சுயநலவாதிகளால்தானே கால சக்கரம் சுழலுகிறது என்று தெரிகிறது. 

பணத்திற்கு இருக்கும் மரியாதை, மனித உயிருக்கு கிடைப்பது எப்போதோ? 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

இமயம் குழுமத்தின் புதிய தினசரி நாளிதழ் "தினசெய்தி" வருகவே!

இமயம் குழுமத்தார் தொடங்கவிருக்கும் புதிய தினசரி நாளிதளுக்கான சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியானது, கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகையின் உரிமையாளர் இமயம் ஜெபராஜ் அவர்கள்  கலந்துகொண்டு பத்திரிகையின்  பெயர் " தினசெய்தி " என்று அறிவித்தார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் செந்திலதிபன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, May 1, 2015

வைகோவை வாழும் பெரியார் என கூறிய திகம்பர்னாத் பாண்டே!

இவர்தான் பெரியார்......
மாநிலங்களவைத் தலைவர் பொறுப்புவகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திகம்பர்னாந்த் பாண்டே, தலைவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.....

"காங்கிரஸ்காரர்கள் அந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், ஈரோடு சென்று, பெரியார் இல்லத்தில் தங்கி, பயிற்சி பெற்று வருவார்கள் என்று கேள்விபட்டு இருக்கின்றேன்... உங்களை பார்க்கும்போதெல்லாம், எனக்கு பெரியார் நினைவே வருகிறது... பெரியார் போலவே உங்கள் சுறு சுறுப்பும் பேச்சும் என்னை கவர்கிறது" என்று தலைவர் வைகோ அவர்களை பாராட்டி உள்ளார்....

திரு.பாண்டே அவைத்தலைவர் பொறுப்பு வகிக்கும் போதெல்லாம், தலைவர் பேசத் தொடங்கினால் பேச்சை முடியுங்கள் என்று கூறவே மாட்டார்... இன்னும் பேசுங்கள்... பேசுங்கள் என்று உற்சாகப்படுத்துவார்....

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா அவர்கள் சொல்லிய கருத்தை உணர்ந்த திரு.திகம்பர்னாத் பாண்டே அவர்களுக்கு நன்றி....

(செய்தி சேகரிப்பு : அம்மாபேட்டை கருணாகரன், நாடாளுமன்றத்தில் வைகோ புத்தகத்திலிருந்து...)

மதிமுக இணையதள அணி - ஓமன்

தாயகத்தில் மதிமுக தொழிற்சங்க கொடியேற்றி வைகோ உரை!

உழைக்கும் மக்களின் பெருவிழாவான ‘மே தின’ விழா, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் இன்று 2015, மே 1 வெள்ளிக்கிழமை காலை 10.45 மணி அளவில் தலைமைக் கழகம் ‘தாயக’த்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் கொடியினை ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினாா். பின்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பித்தாா்.

தொடர்ந்து தாயகத்தில் நடந்த மேதின நிகழ்ச்சியில் தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். உரையில் மே 6 மதிமுக வின் உதயதின விழாவிற்கு அழைப்பு விடுத்து உரை முடித்தார் தலைவர் வைகோ. இந்நிகழ்ச்சியில், கழக அவைத் தலைவரும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான திருப்பூர் சு.துரைசாமி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு செ.முத்து, மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கவுன்சில் செயலாளர்கள், முன்னணியின் இணைப்புச் சங்க நிர்வாகிகள்,பகுதிக்கழக - வட்டக் கழகங்களின் செயலாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மே 1 ஆம் தியதி தொழிலாளர் தினத்தையொட்டி இந்திய திருநாட்டின் அனைத்து அலுவலகங்களுக்கும், நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா மூலம் சட்டம் நிறைவேற்றி தொழிலாளர்களுக்கு விடுமுறை வாங்கி தந்தவர் நமது மறுமலர்ச்சி திமு கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நம் கழகத்திற்கும், கழகத்தினருக்கும் பெருமையே!

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

100 விருப்பங்களை கடந்து ஓமன் மதிமுக இணையதள அணி வீர நடை!

எமது அன்பு உடன்பிறப்புகளே! 

மதிமுக இணையதள அணி - ஓமன் முகநூல் பக்கமானது, தமிழகத்தின் தன்னிரகற்ற தலைவன், தமிழர்களுக்கு எங்கெல்லாம் குந்தகம் ஏற்படுகின்றதோ, அங்கெல்லாம் ஓடி சென்று பாதுகாக்கும் தமிழகத்தின் காவல் அரண், தமிழர்களுக்காக தமிழ்நாட்டிற்காக தனது வாழ்நாளையெல்லாம் செலவிட்டுகொண்டிருக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் மக்களுக்கான செவைகளை, மதிமுக வின் தமிழ்நட்டை காக்கும் கொள்கைகளை, உலக மக்களுக்கு இனையதளத்தினூடாக கொண்டு செல்லவே சிறு முயற்சியாக, தமிழகத்திலிருந்து அயல்நாட்டு அகதிகளாக பணி செய்யும் எங்களை போன்று அயல்நாட்டில் வாழும் நண்பர்களுக்காகவும், உலக மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த முகநூல் பக்கம். 

இந்த பக்கமானது விருப்பம் தெரிவித்த உங்களின் பேராதரவால் 100 விருப்பங்களை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது. எனவே இந்த முகநூல் பக்கத்தை share செய்து, உங்கள் நண்பர்களுக்கும் invite செய்யுங்கள். இந்த பக்கம் பலரது பார்வையில் பட்டால், தலைவரின் அன்றாட நிகழ்வுகள் மக்களின் மனதில் பதிய வாய்ப்பாக அமையும். அதன் மூலம் சிறு மாற்றத்தையாவது உருவாக்க முயற்ச்சிப்போம். எனவே இந்த பக்கத்தை யாரெல்லாம் விருப்பம் தெரிவித்திருக்கின்றீர்களோ, தாங்கள் எல்லோரும், தங்களுடைய நண்பர்களுக்கும் invite செய்து like செய்ய வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம்.

இவ்வளவு ஆதரவு தந்த மதிமுக வேங்கைகள், தங்களின் நண்பர்களுக்கும் பரவசெய்து ஆதரவு தருமாறு வேண்டி ஓமன் இணையதள அணி சார்பில் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

முகநூல் பக்கம் : https://www.facebook.com/mdmkoman/

வலைதளம் : http://mdmkoman.blogspot.com/

"முயர்ச்சியுடையார், இகழ்ச்சியடையார்" 

"முன்னேறி செல்வோம், 2016 ல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்"


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் வைகோ!

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், ரூபாய் மதிப்பு சரிவையும் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி இருக்கின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்தபோது வீழ்ச்சி விகிதத்திற்கு ஏற்ப மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கவில்லை.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலன் மக்களுக்கு போய் சேரவில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு உயர்த்தியது. 2014 நவம்பர் முதல் 2015 பிப்ரவரி வரை கலால் வரிகளை பெட்ரோலுக்கு ரூ 7.75ம், டீசலுக்கு ரூ 7.50ம் மத்திய அரசு உயர்த்தியது. பன்னாட்டு சந்தையில் இந்திய கொள்முதல் செய்யும் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 84.71 டாலராக இருந்தது. இதன் விலை தற்போது 59 டாலராக குறைந்திருக்கிறது.

பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பெட்ரோல் விலை 12 முறையும், டீசல் விலை 8 முறையும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் விலையில் ரூ 18.40ம், டீசல் விலையில் ரூ 15.47ம் குறைந்தது என்றாலும், மூன்று முறை அறிவிக்கப்பட்ட விலை உயர்வால் பெட்ரோல் விலை ரூ 7.96 ஆகவும், டீசல் விலை ரூ 6.07 ஆகவும் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

எனவே பா.ஜ.க அரசு பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏறபவே பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்வதாகக் கூறுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி ஏற்றம் தொடர்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேலும் விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனவே மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்