Saturday, April 9, 2016

இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியீட்டு விழாவில் வரலாற்று ஆசிரியர் செ.திவான் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

வரலாற்று ஆசிரியர் செ.திவான் எழுதிய இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியீட்டு விழா 09-04-2016 மாலையில் எழும்பூர் இம்பீரியல் வளாகம், சிராஜ் அரங்கம், சென்னையில் நடைபெற்றது. 

கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்க "இசை முரசு நாகூர் E.M. ஹனிபா" நூலை வைகோ அவர்கள் வெளியீட்டார், இதில்  இரா .முத்தரசன் , ஜி. ராமகிருஷ்ணன் , ஆளூர் ஷாநவாஸ் , தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே திருமாவளவனும் கலந்துகொண்டார்.

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் புத்தக ஆசிரியரான வரலாற்று ஆசிரியர் செ.திவான் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

நேற்று விடுதலை, நாளை மாமண்டூர் மாநாடு-மதிமுக வேங்கை ஜகுபர் அலி!

மதிமுகவின் கடை கோடி தொண்டனில் உண்மை தொண்டன் ஜகுபர் அலி அவர்கள் மதிமுக கொடியை வீட்டின் மேல் பகுதியில் கட்டினார், வீட்டு சுவரின் மதிமுக கொடி வண்ணத்தில் வரைந்திருந்தார். மதிமுக கொடி தாங்கிய உடையை மகள்களுக்கு அணிய கொடுத்தார் என்பதற்காக பாசிச ஜெயலலிதாவின் காவல்துறை ஜகுபர் அலி அவர்களை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் 07-04-2016 அன்று இரவு கைது செய்து 08-04-2016 அன்று காலை விடுதலை செய்தது.

அவரை கைது செய்ததற்கு ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் வாழும் கழக கண்மணிகளும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். 

மேலும் ஜகுபர் அலி அவர்களுக்கு அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அதை ஜகுபர் அலி அவர்களும் தெரிவித்தார். நண்பர்களும் ஜகுபர் அலிக்கு அழைத்து பேசியதாகவும் தெரிவித்தார்கள்.

அப்படிபட்ட வேங்கை எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஜகுபர் அலி அவர்கள் நேற்றைய விடுதலையை தொடர்ந்து நாளை மாமண்டூரில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா தேர்தல் சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். குடும்பத்தினர் அவருக்கு முன்னறிவிக்காமல், ஆச்சரியமூட்டும் வகையில் புத்தாடை எடுத்து கொடுத்து வெற்றிக்காக உழைத்திட வழி அனுப்பி வைக்கிறார்கள். லட்சியங்களை வென்றெடுக்கும் கூட்டத்திற்கு, தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்க போகும் தேர்தல் சிறப்பு கூட்டத்திற்கு செல்கிறார். எந்த தலைவனை 23 வருடங்களுக்கு மேலாக நெஞ்சில் பூஜிக்கிறாரோ அவரை காண செல்கிறார். மதிமுக கொடி தாங்கிய வேட்டி, துண்டு அணிந்து செல்கிறார்.

ஜெயலலிதாவின் காவல்துறை அவரை மாமண்டூரில் கைது செய்ய துணியுமா? புலியின் கோட்டைக்குள் நுழைந்து லட்சகணக்கான தொண்டர்களின் உடையில் இருக்கும் கழக கொடியை மறைக்க முடியுமா? புயலின் பாய்ச்சலுக்கும் புலிகளின் உறுமலுக்கும் எதிர் திசையில் கூட செல்லதான் முடியுமா?

நாளை உலகமே வியக்கும்படியான தமிழக அரசியலில் தேர்தல் சிறப்பு மாநாடு. மே 16 ல் வெற்றி என்னும் தேர்வை எழுதும் நாளுக்கான கட்டியம் கூறும் மாநாடு. மே 19 வெற்றி சான்றிதளை பெறப்போகும் மாநாடு.

அடிமைகள் கூட்டத்தையும், திருடர்கள் கூட்டத்தையும் அரசியலில் இருந்து அகற்ற அலைகடலென திரண்டு வாருங்கள் தோழர்களே. வெற்றி சரித்திரம் படைப்போம். பம்பரமாய் சுழன்று வெற்றி முரசு கொட்டுவோம். 

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. தொகுதி பங்கீடு முடிவு!

மக்கள் நலக் கூட்டணி தேமுதிக கூட்டணியில் இதுவரை 5 கட்சிகள் இருந்தன. இதுவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்ததையொட்டி இன்று உறுதியானதால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தமாகா அலுவலகத்தில் வாசனை சந்தித்து ஆக்கபூர்வமாக உறுதி செய்தனர்.

பின்னர் வாசனை அழைத்துக்கொண்டு தேமுதிக அலுவலகத்திற்கு சென்றனர். அபோது தெமுதிக தலைவரிடமும் பேசி 6 கட்சி தலைவர்களும் தொகுதி பங்கீடு செய்து கையெழுத்திட்டனனர். 

இந்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தொகுதி பங்கீடு விபரத்தை ஒருங்கிணைப்பாளர் வைகோ வெளியிட்டார். 

தொகுதி பங்கீடு விபரம்:
தேமுதிக -104, மதிமுக - 29, தமாகா - 26, சிபிஎம் - 25, சிபிஐ - 25, விசிக - 25

ஓமன் மதிமுக இணையதள அணி

மாண்டூர் மாநாட்டுக்கு தொப்பி தயார். மகிழ்ந்த தலைவர்கள்!

தேர்தல் சிறப்பு மாநாடு மாமண்டூரில் நடக்கிறது. இதில் மாநாட்டுக்காக 5 கட்சி தலைவர்கள் அடங்கிய தொபி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொப்பியை பார்த்து அணிவித்து மகிழ்கிறார் தலைவர் வைகோ மற்றும் திருமாவளவன் அவர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மாமண்டூரில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் சிறப்பு மாநாடு!

தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க அமைந்திருக்கும் நமது வெற்றிக்கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் வருகின்ற 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே ஆண்டார் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாமண்டூரில் “தேர்தல் சிறப்பு மாநாடு” நடைபெறவுள்ளது. 

அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திரு.வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக,திரு. ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் சி.பி.ஐ(எம்), திரு.தொல்.திருமாவளவன், தலைவர் வி.சி.க, திரு.இரா.முத்தரசன் மாநில செயலாளர் சி.பி.ஐ, ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றுகிறார்கள். முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்கள்.

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் அனைத்து கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நாட்டு நலனில் அக்கறைகொண்ட நல்லவர்களோடும் அணிதிரண்டு வந்து, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடந்திடும் வகையில் அலைகடலென திரண்டு ஆர்ப்பரித்து வாரீர்! மாநாட்டை வெற்றி பெற செய்வீர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஜி.கே.வாசன் சந்திப்பு!

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று மாலை 3 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களைச் சந்திக்கிறார்கள்.

அதன்பிறகு மாலை 4.30 மணிக்கு தேமுதிக அலுவலகம் சென்று கேப்டன் விஜயகாந்த் அவர்களைச் சந்திக்கிறார்கள்.


ஓமன் மதிமுக இணையதள அணி

வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம்-கூட்டணி தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு!

13.04.2016 புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம், சென்னை ஆழ்வார்பேட்டை  நாரதகானா சபாவில் நடைபெற இருக்கிறது. 

சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்த நாடகத்திற்கு,  சிறப்பு விருந்தினர்களாக, விஜயகாந்த், ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் வைகோ அவர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். 

கழக கண்மணிகளும், கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியிடுகிறார் வைகோ!

வரலாற்று ஆசிரியர் செ.திவான் எழுதிய இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியீட்டு விழா 09.04.2016 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை எழும்பூர் இம்பீரியல் வளாகம், சிராஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.

மக்கள் நலக் கூட்டணி தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வைகோ நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி