Saturday, July 18, 2020

தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் கூட்டம்!


வளைகுடா மற்றும் சிங்கபூரில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று 17-07-2020 இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகளான, செயலாளர்கள், அவைத் தலைவர், பொருளாளர் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

கழக பொதுச் செயலாளர் அன்புத் தலைவர் வைகோ MP அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு இறுதியுரை நிகழ்த்தினார். துணைபொதுச் செயலாளர் மல்லை.சி..சத்யா, மகளிர் அணி செயலாளர் அக்கா மருத்துவர் ரொஹையா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
.
கழக பணிகள் கொரொனா காலத்திலும் தொய்வின்றி நடைபெறும்விதமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம், மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் என இணையவழி கூட்டங்களை நடத்தி வருகிறார் அன்பு தலைவர் வைகோ அவர்கள்.

இணையத்திற்கும் அங்கிகாரம் வழங்கும்விதமாக, கழக துணை நிலை அமைப்பான தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் நேற்றைய zoom செயலி மூலமான இணைய கூட்டத்தில் பஹ்ரைன், அமீரகம், சிங்கப்பூர், குவைத், கத்தார், ஓமான், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் அமைப்புகளின் செயலாளர், பொருளாளர், அவைத்தலைவர் உள்ளிட்ட 42 பேர் பங்கேற்றார்கள்.

தாங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள அமைப்புகளின் பணிகளை செயலாளர்கள் விளக்கி உரையாற்றினார்கள். நிகழ்வில் நிறைவாக கழக பொதுச் செயலாளர் அவர்கள் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் பணிகளை பாராட்டி உரையாற்றியது அவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்திருக்கிறது.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பாக ஓமானில் கழகம் செய்த பணிகளை எடுத்துரைத்தும், எதிர்கால செயல்திட்டம் பற்றியும், மதிமுக மாநாடு பற்றியும், தலைவர் ட்விட்டர் வலைதளத்தில் இணையவேண்டுமென்று கூறியும், ஒமான் சலாலாவில் பாதிக்கப்பட்ட 2 தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் நாடு திரும்புவார்கள் எனவும் தலைவரிடத்தில் கூறி சிற்றுரை நிகழ்த்தினேன். அன்புத் தலைவர் வைகோ அவர்கள், வெகுவாக பாராட்டி, கழக துணை நிலை அமைப்பின் பெயரை சரியாக கேட்டு தமிழர் மறுமலர்ச்சி பேரவை என எழுதி 2017 ல் துபாயில் வைத்து சொல்லிய பெயரை சரிபார்த்துக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் வளைகுடா அமைப்புகளைன் சார்பாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

1. கொரோனா நோயினால் வாழ்விழந்து தவிக்கும் ஏழை மக்களின் துயர் துடைக்க நாள்தோறும் வீதியிலிறங்கி தன்னலம் கருதாது நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவர் வைகோ அவர்கள் குறிப்பிடுவது போல செஞ்சிலுவை சங்கமாக இயங்கி மாற்றாரும் வியக்கும் வண்ணம் இயக்கத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு கழக கண்மணிகளுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.

2. சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் , பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கை சி.பி.சி..டி. விசாரித்து
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் இந்த லாக்-அப் படுகொலை வழக்கை விசாரணை நடத்தி வரும் சி.பி.சி..டி. .ஜி. சங்கர் மற்றும் சி.பி.சி..டி. காவல்துறை அதிகாரிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிப்பதுடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

3. வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் விமான சேவை போதுமானதாக இல்லை கத்தார், சவூதி, அமீரகம் போன்ற வளைகுடா
நாடுகளில் சுமார் எட்டாயிரம் தமிழர்கள் வேலையிழந்து ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களை விமான கட்டணமின்றி தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கோரிக்கை வைத்து உலக தமிழர்களின் குரலாக வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள் , இந்த விசயத்தில் மெத்தனம் காட்டாமல் தமிழக அரசும் இந்திய அரசும் உடனே துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு கைது
செய்யப்பட்டவர்கள்
சென்னை மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு, சென்னை மாநகருக்குள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சொந்தப் பிணையில் இவர்களை விடுவிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டன.
ஆனால், இவ்வாறு பிணை வழங்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலிருந்து மீண்டும் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
விசா விதிமுறை மீறலுக்காக போதுமான தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்கள் வழக்கை முடித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதன் பின்னரும் இந்த வெளிநாட்டினரை கொரோனா பரவியுள்ள புழல் சிறையில் அடைத்து வைத்த எடப்பாடி அரசு நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறி உள்ளது என்று தலைவர் வைகோ கண்டனத்தை பதிவு செய்தார்கள் .
தொடர்ந்து தலைவர் வைகோ அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டவாறு வெளிநாட்டு பயணிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு
தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் . தலைவர் வைகோ அவர்களின் இந்த
மனிதநேய பணிக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிக்கிறது.

5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
தற்போது பா... அரசு தேர்தல் நடத்தும் விதிமுறை 2019 மற்றும் தேர்தல் நடத்தும் விதிமுறை 2020 ஆகியவற்றை சட்டதிருத்தமாக கொண்டுவந்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80 லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி தராது . அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்வதற்கு வயது வரம்பை 65 என்று குறைத்து இருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். எனவே மத்திய அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திகிறது.

6.கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அண்மைக் காலமாக .தி.மு.. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, July 17, 2020

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு! வைகோ கண்டனம்!

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப்போனேன்.

நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த அநியாயச் செயலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் – பார்
அவர்தாம் பெரியார்

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பெரியார்!

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனெஸ்கோ அமைப்பு 27.06.1973 அன்று புத்துலகச் சிற்பி என்றும், தொலைநோக்குச் சிந்தனையாளர்; தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; மூட நம்பிக்கை; அறியாமை; அர்த்தமற்ற சம்பரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்து, பெரியார் அவர்களை உலகத் தலைவராக உயர்த்தி வைத்தது.

1919 ஆம் ஆண்டிலேயே தாம் வகித்துவந்த பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டவர் பெரியார். உத்தமர் காந்தியடிகள் ஈரோட்டில் பெரியாரின் மாளிகைக்கே வந்து தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்பும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மது ஒழிப்புப் போராட்டத்திற்கு தனது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியவர்களையும் இணைத்துக்கொண்டு போராடி, காந்தியாரின் பாராட்டுகளையும் பெற்றவர் பெரியார்.

காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் தந்தை பெரியார் அவர்கள் செய்திட்ட அரும்பணிகளின் காரணமாக தமிழ் மொழியும், தமிழ் மக்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் உன்னதமான நிலையை எட்ட முடிந்தது.

பெரியாரின் பெருமைகளை உணர்ந்துகொண்டதனால்தான் இந்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. தமிழக அரசையே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக்கினார் பேரறிஞர் அண்ணா. “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுமே பெரியாரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். பெரியாரின் புகழ் சிதறல்கள்” என்று பெருமைபட பேசினார் அண்ணா.

சமூக நீதி, மதநல்லிணக்கம், பெண் உரிமை, மதச்சார்பற்ற தன்மை, சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் ஆகிய முற்போக்குக் கொள்கைகளுக்கு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து, இந்தியத் துணைக் கண்டத்திற்கே தமிழகம் வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு தந்தை பெரியார் அவர்களின் ஓய்வறியாத உழைப்புதான் காரணம் என்பதை அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு பல வகைகளிலும் பெருமையும், சிறப்பும், புகழும் கொண்ட தந்தை பெரியார் அவர்களின் சிலை தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இனியும் இப்படிப்பட்ட வன்செயல்கள் நடைபெறாமல் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், அனைத்துத் தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் ஆகியவைகளை காப்பாற்றிடவும் பொறுப்புணர்ச்சியுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 17-07-2020 தெரிவித்துள்ளார்.

Wednesday, July 15, 2020

காமராஜர் 118 ஆவது பிறந்தநாள்! வைகோ மலர் மரியாதை!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 15-7-2020 மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன்; நகைக் கடன் அளிப்பதை உறுதி செய்க! வைகோ வலியுறுத்தல்!

கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஜூன் 24, 2020 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் அதற்கான அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் -1947 இன் கீழ் கூட்டுறவு வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. இந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது, இரத்து செய்வது, வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ரிசர்வ் வங்கி வசம்தான் இருந்து வருகின்றன. ஆனால், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அதிகாரம் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

இந்நிலையில்தான் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் 1482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் 58 மல்டி கோ-ஆப்ரேடிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. நகரக் கூட்டுறவு வங்கிகளில் இந்தியா முழுவதும் சுமார் 8.6 கோடி மக்களின் 4.48 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. முதலீட்டார்களின் தொகைக்கு உத்தரவாதம் இருக்கிறது என்று மத்திய அரசு கூறினாலும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருக்கும்போதே பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி பல நிறுவனங்கள் ஏப்பமிட்டதை நினைக்கும்போது கூட்டுறவு வங்கிகளின் கதி என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

நகரக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 96 ஆயிரம் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுபோகப்படுகின்றன.

வேளாண்மைத் தொழிலுக்கு ஆதாரமாகவும், வேளாண் பணிகள் தொய்வின்றி நடைபெற்று, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆற்றும் சேவைகள் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

இந்த வங்கிகள்தான் சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைக் கடன்களை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலுக்கு வழங்குகின்றன. வேளாண் பயிர்க் கடன்கள் வழங்குவதுதான் இவற்றின் முக்கியப் பணியாகும். இதில் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளர்களுக்கு 10 ஏக்கர் வரை கூட்டுப் பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் இதர பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.

கடன் அளவு இதற்கு மேல் சென்றால் சொத்துக்கள் அல்லது நகைகள் அடமானம் வைத்து அதன் மீது கடன் வழங்கப்படுகின்றது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், இதர வேளாண் தேவைகளான பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், விவசாயம் அல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்கி வருகின்றன.

கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி விகிதத்தையும் குறைத்து கூட்டுறவு வங்கிகள் சேவை செய்கின்றன.

தற்போது ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டதால், முதல் படியாக நகைக் கடன்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் தொழிலுக்கு கடன் பெற முடியாமல் கந்து வட்டிக் கும்பலிடம் விவசாயிகள் சிக்கிவிடும் துயரச் சூழல்தான் உருவாகும். தமிழகத்தில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகைக் கடன்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் செய்தி அனுப்பி இருப்பதன் மூலம் ரிசர்வ் வங்கியின் உத்தரவு நடைமுறைக்கு வந்துவிட்டதை அறிய முடிகிறது.

மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுசென்றது மட்டுமல்ல, நகைக் கடன் வழங்குவதை நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது. கூட்டுறவு வங்கிகள் சுயேட்சையாக இயங்கவும், மக்களுக்கு எளிதில் வேளாண் கடன், பயிர்க் கடன், நiக் கடன் உள்ளிட்ட கடன்கள் கிடைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 15-7-2020 தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம்! வைகோ கண்டனம்!

கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு, சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமை 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று ஜூலை 7 ஆம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை குறைக்கப்படும் பாடங்கள் குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றில், 10 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் “ஜனநாயகம், பன்முகத்தன்மை” போன்ற பாடப் பிரிவுகளும், 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் “கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை” ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. இதனைக் கண்டித்து ஜூலை 8 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

தற்போது சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டு உள்ளன. அதில் “தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி” போன்ற பாடங்களும், தகேட்டுக் கொள்கிறேன் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் பாடமும் நீக்கப்பட்டு உள்ளன.

மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.

சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் வரலாறு உள்ளிட்ட பாடங்களையும் உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் பா.ஜ.க. அரசால் திட்டமிட்டே நீக்கப்பட்டு உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சுக்குநூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பாடத் திட்டத்தை 30 விழுக்காடு குறைக்கிறோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்தின் வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 15-7-2020  தெரிவித்துள்ளார்.

Tuesday, July 14, 2020

முறைககேடுகளுக்கு வழிவகுக்கும் தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை!

கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.

தற்போது பா.ஜ.க. அரசு ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகியவற்றை கொண்டுவந்துள்ளது.

இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80 லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்யுமா? என்பது கேள்விக் குறி.

இந்தியாவில் தற்போதுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தங்கள் 1961-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசு தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்தால், தேர்தல் ஆணையம் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 60சி பிரிவின்கீழ் அதில் தலையிட அதிகாரம் உண்டு.

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்வதற்கு வயது வரம்பை 65 என்று குறைத்து இருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். இந்த வயது வரம்பின் மூலம் சுமார் 10 விழுக்காடு வாக்காளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்பவர்களாகவும் மாறும் நிலை உருவாகும். இதனால் தேர்தல் செலவினங்களும் அதிகரிக்கும்.

மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, 65 வயதுக்கு மேல் என்று வாக்காளர்கள் பதிவு செய்தால், பதிவு செய்யும் அலுவலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைதான் இருக்கும். இதனால் அஞ்சல் வாக்குச் சீட்டு அளிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இன்னொரு திருத்தத்தின் மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்ற சான்றிதழ் பெற்றவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் அஞ்சல் வாக்குச் சீட்டைப் பதிவு செய்யலாம் என்பதும் பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.

தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.

எனவே மத்திய அரசு நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 14-7-2020 தெரிவித்துள்ளார்.

Monday, July 13, 2020

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக! வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக்கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்தனர். அதன்பேரில், தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்தார்கள். 324 மாணவர்கள், திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியவர்களையும் மீட்டுக்கொண்டு வருவதற்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உடனடியாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

அதேபோல், ஈரான் நாட்டில் சிக்கி இருந்த 720 மீனவர்களை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போதே வலியுறுத்தினேன். அமைச்சரிடம் வலியுறுத்தினேன். தொடர்ந்து அறிக்கைகள் கொடுத்து வந்தேன். அவர்களுள் 673 பேர், கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்து விட்டனர். 

கப்பலில் இடம் இல்லை என்பதால், 47 மீனவர்கள் அங்கேயே விடப்பட்டனர். கப்பலை நம்பி, நிறுவனத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். எனவே, அவர்களை மீண்டும் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள நிறுவனம் மறுத்து விட்டது. அதனால், உணவுக்கும், தங்கும் இடத்திற்கும் வழி இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். இனி கப்பல் ஏற்பாடு செய்ய வழி இல்லை. எனவே, விமானத்தில் ஊருக்குச் செல்லுங்கள் என்று சொல்கின்றார்கள். விமானக் கட்டணம் செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. எனவே, அவர்களை மீட்டுக் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 13-07-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, July 11, 2020

அழகு முத்துகோன் சிலைக்கு மதிமுக புகழஞ்சலி!

சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் இரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருஉருச் சிலைக்கு மறுமலர்ச்சி திமு கழகத்தின் சார்பில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் இன்று 11-7-2020 காலையில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தாயகத்தில் நாவலருக்கு புகழஞ்சலி!

பேரறிஞர் அண்ணா அவர்களால் நடமாடும் பல்கலைக் கழகமே, தம்பி வா தலைமை ஏற்க வா!எ ன்று அழைக்கப்பட்டவர் நாவலர் இரா நெடுஞ்செழியன் அவர்கள்.

தந்தை பெரியாரின் தமிழ்மொழி சீர்திருத்தத்தை எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது சட்டமாக்குவதற்கு உறுதுணையாக இருந்தவர் நாவலர் அவர்கள்

அவர்களின் நூற்றாண்டு புகழ் வணக்கம் நிகழ்ச்சி மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் இன்று 11-7-2020 நடைபெற்றது.

கழக துணை பொதுச் செயலாளர் மல்லை‌ சத்யா, மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்‌.

நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு - வைகோ புகழ் வணக்கம்!

திராவிட இயக்க முதுபெரும் தலைவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு,  இன்று 11.07.2020 காலை நாவலர் திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது அண்ணா நகர் இல்லத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

Friday, July 10, 2020

திருச்சி விவசாயத்தைப் பாதிக்கின்ற கழிவுநீர் தொட்டிகளை, மாற்று இடத்தில் கட்டுக! வைகோ அறிக்கை!

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில், கழிவுநீர் அகற்றுவதற்காக, நிலத்திற்கு உள்ளே குழாய்கள் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, ரூ 59 கோடி செலவில், ஒரு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. 

கீழகல்கண்டார் கோட்டை, 63 ஆவது வட்டத்தில், கழிவு நீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான தொட்டிகள் கட்டுகின்றார்கள்.

அதற்காக, சோழர்கள் காலத்தில் இருந்து விவசாயிகள் பயன்பெற்று வருகின்ற, அழகுநாச்சியார் கோவில் நிலத்துடன் 50 மீட்டர் இடைவெளியில் உள்ள, 1927 ஆம் ஆண்டு முதல் வருவாய் பதிவு ஏடுகளில் சர்வே எண் 81 இல் உள்ள, 3.5 ஏக்கர் களத்துமேடு முழுமையும், சட்டத்திற்குப் புறம்பான முறையில் மாநகராட்சி கைப்பற்றி இருக்கின்றது.

இந்த நத்தம் களத்துமேட்டில்தான், அழகுநாச்சியார் கோவில் ஆலயத் திருவிழா, ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகின்றது. மக்கள் குவிந்து இருப்பர்.

அந்தப் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, இந்தக் களத்துமேட்டுக்குத்தான் கொண்டு வந்து பதர் நீக்குகின்றனர். வாழைத்தார்களைத் தலையில் சுமந்து கொண்டு வந்து, இந்தக் களத்துமேட்டில்தான் வைத்து, அதன்பிறகு வண்டிகளில் ஏற்றி சந்தைக்குக் கொண்டு செல்கின்றனர்.

காவிரி உய்யகொண்டான் கால்வாய் பாசனத்தால், இந்தப் பகுதியில் 600 ஏக்கரில் விவசாயம் செழுமையாக நடைபெற்று வருகின்றது. ஆலத்தூர், எல்லக்குடி, மலைக்கோவில், திருவெறும்பூர்,  கூத்தைப்பார், வேங்கூர், நடராசபுரம், அரசங்குடி மேலும் கல்லணை வரை, சுமார் 1000 ஏக்கருக்கும் மேல் விவசாயப் பணிகள் நடைபெறுகின்றன.

இப்போது கட்டுகின்ற கழிவுநீர் மறுசுழற்சித் தொட்டியின் தேவைக்காக, ஆழ்துளைக் கிணறு அமைத்து நீர் உறிஞ்சுவதால், இந்தப் பகுதியில் உள்ள 2500 வீடுகளில் உள்ள உறைகிணறுகளில் உள்ள நீர் வறண்டு விடும்.

 அவ்வாறு சுழற்சி செய்கையில் வெளியேறும் கழிவு நீர், 37000 கேஎல்டி அளவு நீரை, உய்யகொண்டான் கால்வாயில்தான் விடப்போகின்றார்கள். ஆனால், அதை மரம் வளர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். நெல், வாழைக்கு பயன்படுத்தக்கூடாது என்று, சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

உய்யகொண்டான் கால்வாய் தண்ணீர், திருவெறும்பூர், கூத்தைப்பார், அரசங்குடி, நடராசபுரம் கண்மாய்களையும் நிரப்புகின்றது. எனவே, விவசாயிகள் மட்டும் அல்லாமல், ஆடு, மாடு, மனிதர்களும் பயன்படுத்தும் நிலை உள்ளது.

எனவே, கழிவு நீரை சுழற்சி செய்து, பாசன வாய்க்காலில் விட்டால், சுற்றுச்சூழல் கெடும், விவசாயமும் கெடும்.

சுற்றுச்சூழல் சிவப்பு மண்டல வரிசையில், பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி கடிதம் வழங்கி உள்ளனர்.

1. அருகில் உள்ள வசிப்பு இடங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகள், எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.

2. ஒருநாளில் சுழற்சி செய்யும் கழிவு நீர், (37000 கேஎல்டி) விவசாய நிலம் மற்றும் பாசன வாய்க்காலில் விடக்கூடாது.

கழிவு நீர் சேகரிப்பு, மறுசுழற்சி தொட்டிகள் கட்டுவதற்கு, மாநகராட்சி வசம் போதுமான நூற்றுக்கணக்கான ஏக்கர் புன்செய் நிலம், பயன்பாடு இல்லாமல் உள்ளது.

எனவே, கீழகல்கண்டார்கோட்டை அழகு நாச்சியார் அம்மன் கோவில் அருகில் உள்ள களத்துமேட்டில் தொட்டிகளைக் கட்டக்கூடாது என, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 2500 வீடுகளில் வசிக்கின்ற மக்களும் எதிர்க்கின்றனர். இப்பகுதியில் உள்ள, அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்க்கின்றார்கள். 

பொதுமக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 200 காவலர்களைக் கொண்டு வந்து நிறுத்தி, யாரும் அருகில் செல்ல முடியாத வகையில் தடுத்து, வேகவேகமாகக் கட்டுகின்றார்கள்.

மேலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமலேயே கட்டுமானப் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். அதன்பிறகுதான், அவசரம் அவசரமாக அனுமதி பெற்று இருக்கின்றார்கள். 

எனவே, கழிவு நீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சித் தொட்டிகளை, மாநகராட்சி வசம் உள்ள,இடத்தில் கட்டுவதற்கு ஆவன செய்யுமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 10-7-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, July 9, 2020

மாவட்டச் செயல்வீரர்கள் காணொளி சந்திப்பு! வைகோ பங்கேற்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் கடந்த ஜூன் 25 அன்று, காணொளி சந்திப்பு வழியாக நான்கு மணி நேரம் நடைபெற்றது. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், ஜூலை 6 திங்கள் கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் காணொளி சந்திப்பு, 9 மணி நேரம் நடைபெற்றது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்று, கருத்துகளைக் கூறினார்கள். 

மேற்கண்ட இரு கூட்டங்களிலும் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநிலம் முழுமையும், அனைத்து மாவட்டக் கழகங்களின் கூட்டங்களையும் காணொளி வழியாக நடத்துவது என்றும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அனைத்து சந்திப்புகளிலும் பங்கு ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, ஜூலை 7 செவ்வாய் அன்று, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்யம், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக் குழு, அணிகளின் செயலாளர்கள் கூட்டம் 8 மணி  நேரம் நடைபெற்றது. 60 பேர் பங்கேற்றுப் பேசினர்.

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்கும், மாவட்டச் செயல்வீரர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் காணொளி சந்திப்புகள் கீழ்காணும் நாள்களில் மாலை 4 மணி முதல் நடைபெறும்.

ஜூலை 12 திங்கள் தென்காசி மாவட்டம்
13 செவ்வாய் திருவள்ளூர் மாவட்டம்
14 புதன் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
18 சனி மாணவர் அணி
19 ஞாயிறு இளைஞர் அணி

மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 9-7-2020  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 8, 2020

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு; இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு! வைகோ கண்டனம்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருக்கிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் செய்தி வெளியிட்டார். மேலும் சி.பி.எஸ்.இ. இயக்குநரும் 2020-21 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் குறைப்புத் தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளார்.

சி.பி.எஸ்.இ. 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை (ளுநரடயசளைஅ) ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.

மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? (Why do we need Local Governments?), இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி (Growth of Local Government in India)” ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது.

பாடத் திட்டம் குறைப்பு எனும் பெயரில் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே இந்துத்துவ சனாதன சக்திகள் கோரி வருகின்றன.

கடந்த 2014 இல் அதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

தற்போது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்கின்ற சனாதன சித்தாந்தத்தைச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது.

இந்நிலையில்தான் பாடத்திட்டத்தில்கூட ‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தையே இடம் பெறக் கூடாது என்ற பாசிச சிந்தனை பா.ஜ.க. அரசுக்கு வந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் குவித்து வைத்துக் கொண்டு ‘ஒற்றையாட்சி’ எதேச்சதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. 

மாணவர்களின் நெஞ்சத்திலும், நஞ்சு கலக்கும் வகையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை நீக்கி இருக்கிறது.

இந்தியாவில் மக்களாட்சி அபாயகட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகளாகும்.

பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும்.

கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சி.பி.எஸ்.இ. பாடங்களைக் குறைக்க வேண்டுமேயொழிய, பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளைப் புகுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 08-07-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, July 7, 2020

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும். வைகோ வலியுறுத்தல்!

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நேர்ந்த இடத்திலேயே பணிபுரிந்த பத்மநாபன், அருண்குமார், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், ராமநாதன், நாகராஜ் ஆகிய 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சென்னையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் துணை முதன்மைப் பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் இரவிச்சந்திரன், வைத்தியநாதன், ஜோதிராமலிங்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான செல்வராஜ், இளங்கோவன், ஆனந்தபத்மநாபன் ஆகிய 7 பேரும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களில் மேலும் நான்கு பேர் மிகவும் கவலைக்கு இடமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஜூன் 1 ஆம் தேதி என்.எல்.சி. நிறுவனத்தில் நடந்துள்ள இந்தக் கோர விபத்தில் இதுவரையில் 13 தொழிலாளர்கள் உயிர் இழந்து உள்ளதும், மேலும் சிலர் உயிருக்குப் போராடி வரும் தகவலும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தொழிலக விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.30 இலட்சம் கருணைத் தொகை அளிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆனால் இந்தக் கருணைத் தொகை ரூ.30 இலட்சத்தில் தொழிலக விபத்து நேரிட்டால் வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவையும் தமிழக அரசு அறிவித்த 3 இலட்சம் ரூபாயும் அடங்கும் என்று என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்து இருப்பது ஏற்கவே முடியாத அக்கிரமம் ஆகும். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

என்.எல்.சி. நிர்வாகம் பாதுகாப்பு விதிகளை மீறியதாலும், பராமரிப்புப் பணிகளின் அலட்சியத்தாலும் தொடர் விபத்துகள் ஏற்பட்டபோதும் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அனல்மின் நிலையத்தை இயக்கியதுதான் தொழிலாளர்கள் உயிர் பலியானதற்கு முதன்மைக் காரணம் ஆகும்.

தொழிலக விபத்தில் உயிரிழப்பவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை என்பது சட்டபூர்வ உரிமையாகும். 

இந்நிலையில், உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 இலட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். தொழிலக விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தனியாக அளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை ரூ. 3 இலட்சத்தையும் சேர்த்து வழங்க வேண்டும்.

கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தாலும், உயிர் இழப்புக்கு எதுவும் ஈடு செய்ய முடியாது என்பதை என்.எல்.சி. நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் உயிரிழந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனம் நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 7-7-2020 தெரிவித்துள்ளார்.

மன்னர் மன்னன் மறைவு! வைகோ இரங்கல்!

புட்சிக் கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் பாசப் புதல்வரும், தமிழ் அறிஞருமான மன்னர் மன்னன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு, ஆறாத துயரம் கொண்டேன்.

கவிஞர் மன்னர் மன்னன் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலைக்காக திராவிடர் இயக்கம் நடத்திய செயல்பாடுகளிலும் இணைந்து தொடர்ந்து குரல் கொடுத்தவர்; போராடியவர்.

புரட்சிக் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் என்ற அரிய நூலினை வெளியிட்டு, மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையினை மிகச் சிறப்பாகச் செய்தவர் மன்னர் மன்னன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி, தமிழ்மொழியின் சிறப்புகளை தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை மேதினிக்கு எடுத்து விளக்கிய சீர்மிகு எழுத்தாளர்.

புதுச்சேரி, சென்னை வானொலி நிலையங்களில்,  ஆசிரியராகப் பணி ஆற்றினார். தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி ஆகிய விருதுகளால் சிறப்பிக்கப்பட்டார்.

கோபதி என்ற பெயருடைய மன்னர் மன்னன் 14 வயது இளைஞராக இருந்தபோது, கவிஞர் தமிழ்ஒளி அவர்களுடன் இணைந்து நடத்திய ‘முரசு’ இதழில் மொழி உணர்வும், இன உணர்வும் ஊட்டக்கூடிய கட்டுரைகளைத் தீட்டினார். அதற்கு அரசு நெருக்கடி தந்து, கைது நடவடிக்கை வரை வந்தவுடன், மன்னர் மன்னன் என்ற புனைப் பெயரில் இவர் தொடர்ந்து எழுதினார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து நின்று நெடிய புகழை அளித்துக்கொண்டு இருக்கின்றது.

கவிஞர் மன்னர் மன்னன் அவர்கள் என் மீது அளவற்ற அன்பு கொண்டவர். சென்னையிலும், புதுடெல்லியிலும் நான் இருந்தபோது இல்லம் தேடி வந்து மகிழ்ச்சியுடன் அளவளாவி பாசத்தை பரிமாறிக் கொண்ட இனிய பண்பாளர்.

அவரது மறைவிற்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவரது மறைவால் துயருற்று இருக்கக்கூடிய மன்னர் மன்னன் அவர்களின் அன்புச் செல்வங்களாக செல்வம், தென்னவன், பாரதி, அமுதவல்லி ஆகியோருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், தமிழ் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் அன்பான ஆறுதலை இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 7-7-2020 தெரிவித்துள்ளார்.

Monday, July 6, 2020

இணையம் மூலம் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று  06.07.2020 திங்கள் கிழமை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஜூன் 19 ஆம் தேதி இரவில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த மனித உரிமை மீறல் நிகழ்வு, தந்தை -மகன் படுகொலை நாட்டையே உலுக்கியது. தமிழக காவல்துறையின் மீது மக்கள் கடும் கோபமும், நம்பிக்கையின்மையும் கொண்டனர்.

இந்தக் காவல்நிலைய ‘லாக்-அப்’  படுகொலையைத் தாமாக முன்வந்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மாண்புமிகு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மிகச் சரியான முறையில் இந்த வழக்கைக் கையாண்டது. அடுத்தடுத்து நீதியரசர்கள் பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்ரவதை செய்து படுகொலைக்கு ஆளான கொடுமைக்குக் காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு இருக்கின்றது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக அரசு, இக்கொடூரப் படுகொலையை மூடி மறைத்திட முனைந்து நின்ற நேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தக்க நேரத்தில்தலையிட்டு, நீதியை நிலைநாட்ட உறுதியுடன் உத்தரவுகளைப் பிறப்பித்தது. மக்கள் மனதில் நீதித்துறை மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்தின் துரித நடவடிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வரவேற்பு தெரிவிப்பதுடன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு பாராட்டுகளை உரித்தாக்குகிறது.

தீர்மானம் 2:

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு  இந்திய தண்டனைச் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ்  அந்த வழக்குகளை கொலை வழக்காக மாற்றியது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் ‘லாக்-அப்’ படுகொலை வழக்கை விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைbத் தெரிவிப்பதுடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

உலக நாடுகளை நிலைகுலையச் செய்து வரும் கொரோனா தீநுண்மி தொற்றுப் பரவலால் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி நிலவரப்படி 6.48 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 18655 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7001 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1450 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1033 பேர் கொரோனாவிற்கு பலி ஆகி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 4 ஆம் தேதி வரையில் 13 இலட்சத்து 6884 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

கொரோனா பரிசோதனை மையங்கள் 94 ஆக அதிகரித்து இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சென்னையைப் போலவே மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கான பி.சி.ஆர். கருவிகள் தமிழக அரசின் அறிவிப்பின்படி, தற்போது கையிருப்பில் உள்ள 5 இலட்சம் கருவிகள் போதுமானவை அல்ல. தொற்றைப் பரவலாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் 13 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர், பொது மக்களின் பயணத்திற்கும், போக்குவரத்திற்கும் இன்றியமையாத சேவையாற்றி வரும் இரயில்வே துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு இத்துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு பல்வேறு கூறுகளாக இத்துறையை மத்திய பா.ஜ.க. அரசு சிதைத்து சீர்குலைத்து வருகிறது. இதன் முதல்படியாக 109 வழித்தடங்களில் 151 நவீன இரயில்கள் இயக்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முனைந்துள்ளது.

நாடு முழுமையும் பல்வேறு வழித்தடங்களில் தனியார் இரயில்களை இயக்க மும்பை -2, டெல்லி -2, சண்டிகர், சென்னை, செகந்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர், திருச்சி - சென்னை, கன்னியாகுமரி - சென்னை, சென்னை - புதுடெல்லி, சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக இரயில்வேத்துறை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இரயிலவேத்துறை தனியார் மயமானால், இரயில்வே பயணக் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி தாறுமாறாக பல மடங்கு உயரும். இரயில் பயணிகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உருவாகும். சேவைத் துறை என்பது மாற்றப்பட்டு, இரயில்வே வர்த்தகத் துறையாக மாறினால், மக்களுக்கு பெரும் சுமையாக ஆகிவிடும். எனவே இரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களைப் புகுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக குழாய்களைப் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கெயில் நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் அதே நிலங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனமும் எண்ணெய் குழாய் பதிக்க முனைந்து இருப்பது விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிடும் என்தால் 7 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஐ.டி.பி.எல். நிறுவனம் அளவீடு செய்யும் பணியை தொடங்கியபோது விவசாயிகள் அதைத் தடுத்து நிறுத்தி அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இத்திட்டக் குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா 35 அடிக்கு எந்த விவசாயப் பணியும் செய்யக் கூடாது. ஆழ்துளைக் கிணறு, பிற கிணறுகளை அமைக்கக் கூடாது. ஆழமாக வேர் விடும் மரம் நடக்கூடாது. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. பாசனப் பணிக்காக குழாய் அல்லது ரப்பர் டியூப் உள்ளிட்ட எதையும் எண்ணெய்க் குழாயைக் கடந்து செல்லக்கூடாது என்றெல்லாம் ஐ.டி.பி.எல். நிறுவனம் விதிகளை வகுத்துள்ளது.

மேலும் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் இடங்களில் அவற்றில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இச்சட்டத்தில் 2012 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்துவிட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும்.

விவசாயிகளின் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனம், தமிழக அரசின் துணையுடன் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன் கீழ் 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 1300 ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக்கொள்ள குறிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இருமுறை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விவசாயப் பணிகளைக்கூட தொடர்ந்து நிறைவேற்ற வழியின்றி விவசாயிகள் முடங்கி இருப்பது மட்டுமின்றி, குடும்ப வருவாய் இழப்புக்கும் ஆளாகி வரும் சூழலில், ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லா நிலையை நன்கு தெரிந்துகொண்டே பெயருக்குக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடித்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6-7-2020  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல்!

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக குழாய்களைப் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கெயில் நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் அதே நிலங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனமும் எண்ணெய் குழாய் பதிக்க முனைந்து இருப்பது விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிடும் என்தால் 7 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஐ.டி.பி.எல். நிறுவனம் அளவீடு செய்யும் பணியை தொடங்கியபோது விவசாயிகள் அதைத் தடுத்து நிறுத்தி அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இத்திட்டக் குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா 35 அடிக்கு எந்த விவசாயப் பணியும் செய்யக் கூடாது. ஆழ்துளைக் கிணறு, பிற கிணறுகளை அமைக்கக் கூடாது. ஆழமாக வேர் விடும் மரம் நடக்கூடாது. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. பாசனப் பணிக்காக குழாய் அல்லது ரப்பர் டியூப் உள்ளிட்ட எதையும் எண்ணெய்க் குழாயைக் கடந்து செல்லக்கூடாது என்றெல்லாம் ஐ.டி.பி.எல். நிறுவனம் விதிகளை வகுத்துள்ளது.

மேலும் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் இடங்களில் அவற்றில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இச்சட்டத்தில் 2012 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்துவிட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும்.

விவசாயிகளின் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனம், தமிழக அரசின் துணையுடன் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன் கீழ் 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 1300 ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக்கொள்ள குறிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இருமுறை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விவசாயப் பணிகளைக்கூட தொடர்ந்து நிறைவேற்ற வழியின்றி விவசாயிகள் முடங்கி இருப்பது மட்டுமின்றி, குடும்ப வருவாய் இழப்புக்கும் ஆளாகி வரும் சூழலில், ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லா நிலையை நன்கு தெரிந்துகொண்டே பெயருக்குக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடித்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 6-7-2020 தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தமிழர்களை தாயகம் மீட்டு வரவும், தமிழர் நலன் காக்க தனி அமைச்சகம் உருவாக்கவும், போராட்டம் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற வைகோ.எம்பி அவர்களுக்கு ஒமான் தமிழர்கள் நன்றி அறிவிப்பு!


ஜூன் 2020 இறுதியில், வைகோ.எம்பி அவர்களுக்கு ஓமானில் அநேக தொழிலாளர்கள், வேலை இழந்தும், மருத்துவத்திற்காகவும், குடும்ப சூழலாலும், சொந்த ஊர் செல்ல வானூர்தி இல்லாததால் அவதியுற்றனர்.

வந்தே பாரத் திட்டம் மூலம் வானூர்தி இல்லாமலும், தன்னார்வலர்கள் மூலம் அரிதாக ஏற்பாடு செய்யப்படும் சாட்டார்டு வானூர்திகளுக்கு கூட, கடைசி நேரங்களில், பல நிபந்தனைகளை விதித்து, வானூர்திகள் ரத்தாகும் நிலைக்கு தள்ளியது தமிழக அரசு.

ஊருக்கு செல்ல பயண சீட்டு எடுத்தபின்னர் விமானத்திற்காக, நூற்றுக்கணக்கான கிமீ தொலைவிலுள்ள மக்கள் முந்தின நாள் இரவே விமான நிலையம் வந்து, பின்னரே விமானங்கள் ரத்து செய்ததை அறிந்து திரும்பி செல்ல இயலாமலும், அதில் பல கர்பிணி பெண்கள். வானூர்தி ரத்தாததால் மஸ்கட்டிலே தங்க வசதியில்லாமல் அவதியுற்றதையும் தெரியப்படுத்தியிருந்தோம்.

ஆகவே தமிழக அரசு இந்திய அரசு விமானங்களை அதிகமாக இயக்க அனுமதி வழங்க வேண்டுமென்றும், தனியார் சாட்டர் விமானங்களையும் எந்த நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதித்து ஏழை தொழிலாளர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு தலைவர் வைகோ.எம்பி அவர்கள் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களை மீட்டு தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுமாறு ஒமான்  தமிழர்கள் சார்பாக வேண்டுகோள் வைத்திருந்தோம்.

தலைவர் வைகோ அவர்கள் ஒமான்  தமிழர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, பாதிப்புகளை அறிந்து உணர்ந்து ஒமான்  மட்டுமல்லாது மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே போல மக்கள் சிரமப்டுவதை தகவகல் சேகரித்து வெளிநாட்டு தமிழர்களை உடனே தாயகம் கொண்டு வர வேண்டுமென்று நேற்று 05-07-2020 போராட்டத்தில் ஈடுபட்டதோடு அனைத்து மக்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வைகோ.எம்பி வலியுறுத்தியுளார்.

கொரொனா கோவிட் 19 தொற்றின் மத்தியிலும் சாமானியர்களுக்காக சமூக இடைவெளியுடன் பதாகைகளை ஏந்தி வெளிநாட்டு தமிழர்களை மீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தியதன் மூலம் என்றுமே சாமானியர்களுக்காகவும், நாதியற்றவர்களுக்காகவும், திக்கற்றவர்களின் துயர கண்ணீர் துடைக்கும் தலைவராகவும் வைகோ எம்பி அவர்கள் விளங்குகிறார்.

வைகோ.எம்பி அவர்கள் என்றுமே சாமானியனின் தேவைகளை அறிந்து செவை செய்பவராகவே விளங்குவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். தமிழர்கள் எங்கெல்லாம் துயரப்படுகிறார்களோ வைகோ .எம்பி அவர்களின் குரல்தான் முதலில் ஒலிக்கிறதை அறிகிறோம். தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்த தலைவர் வைகோ.எம்பி அவர்களுக்கு ஒமான்  தமிழர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
06-07-2020

Sunday, July 5, 2020

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு இன்று (05.07.2020) காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோரிக்கை முழக்கங்களை வைகோ எழுப்பினார். மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணி உள்ளிட்ட 40 தோழர்கள் உடன் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினர். 

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது.

கொரோனா தாக்குதலால், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டார்கள். அன்றாட உணவுக்கு வழி இன்றித் தவிக்கின்றார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை. ஏற்கனவே வசிக்கின்ற அறைகளில் பல தோழர்களுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களது நிலையை எண்ணி, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். 

தங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து, புறப்பட்டு வர இருந்த வான் ஊர்திகளையும், கடைசி நேரத்தில் இந்திய அரசு நிறுத்திவிட்டது. 

கேரள அரசு, தங்கள் மாநிலத்தவரை மீட்டு வருகின்ற பணிகளை வெற்றிகரமாகச் செய்து வருகின்றது. அதேபோல், பல மாநில அரசுகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக அரசு வான் ஊர்திகள் வந்து இறங்குவதற்கு ஒப்புதல் தரவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குப் போதுமான வான் ஊர்திகளை நடுவண் அரசு அறிவிக்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை, நடத்துகின்றோம். 

அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழக அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 5-7-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 4, 2020

அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்பதற்கான அறப்போரில் பங்கேற்பீர்! வைகோ அழைப்பு!

உலகின் பல நாடுகளில், இலட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பிழைப்புக்காக, தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, ஆண்டுக்கணக்கில் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா முடக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து விட்டனர். விமானங்கள் பறக்கத் தடை விதித்ததால், நாடு திரும்பவும்  முடியவில்லை. எனவே, அவர்கள் அடுத்த வேளை உணவுக்கும் வழி, இன்றி, அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நாள்களைக் கடத்தி வருகின்றனர். பல வேளை பட்டினிதான். 

நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் இல்லை. கொரோனா பாதிப்பு இருந்தால், அவர்களைத் தனிமைப்படுத்தவும் வசதிகள் இல்லை. மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை. நெருக்கடியான அறைகளில் அடைந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் உயிர் அச்சத்துடன் நாள்களைக் கடத்தி வருகின்றனர். தற்கொலைகள் பெருகி இருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும், பத்துக்கும் மேற்பட்ட உடல்களைக் கொண்டு வருவதற்காக நான் முயற்சிகள் மேற்கொண்டேன். நான்கைந்து உடல்கள் வந்திருக்கின்றன. துபாயில் இயற்கை எய்திய, தென்காசி மாவட்டம் ரெட்டியபட்டி பிரதாப்குமார் , அபுதாபியில் இயற்கை எய்திய, பெரம்பலூர் மாவட்டம் பேரளி மதுரை வீரன் ஆகியோரது உடல்கள் நேற்று முன்தினம் வந்து சேர்ந்தன. இதனால், அயல்நாடுகளில் வசிப்பவர்களின் மனைவி,, பிள்ளைகள் மிகுந்த கலக்கத்துடன் இருக்கின்றனர். 

அயல்நாடுகளில் இருந்து கேரளத்திற்கு வருகின்ற வான் ஊர்திகளில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என, கேரள மாநில அரசு அறிவித்து விட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வான் ஊர்திகளே வேண்டாம் என, தமிழ்நாடு அரசு தடைவிதித்து விட்டது. இதனால், அயல்நாடு வாழ் தமிழர்கள்,  தாங்க முடியாத வேதனை அடைந்துள்ளனர். மகப்பேறுக்காக வர வேண்டிய பெண்கள், பயணம் செய்ய வேண்டிய காலகட்டம் கடந்த நிலையில், உற்றார் உறவினர் துணை இன்றி, சிக்கிக் கொண்டுள்ளனர். 

எனவே, அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே வான் ஊர்திகள் ஏற்பாடு செய்ய வேண்டும்;. பல ஆண்டுகளாகப் பாடுபட்டு உழைத்து, இந்தியாவுக்கு அயல்நாட்டுச் செலாவணி ஈட்டித் தந்த தொழிலாளர்களை, இந்த நெருக்கடி காலத்தில், கட்டணம் இன்றி அழைத்து வர வேண்டும்; தமிழ்நாட்டில் அவர்களுக்கான குவாரண்டைன் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க, தமிழக அரசில் தனி அமைச்சம் உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (05.07.2020) காலை பத்து மணிக்கு, தமிழக மக்கள் அனைவரும், தங்கள் இல்ல வாயிலில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி, முழக்கங்களை எழுப்ப வேண்டும்; சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும்.

இந்தப் போராட்டத்தில்,  அமைப்பு, கட்சி, இயக்கம், சாதி, மத,  வேறுபாடுகள் இன்றி, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுக் கடமை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 04-06-2020 தெரிவித்துள்ளார்.

Friday, July 3, 2020

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்-தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 06.07.2020 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கழக அவைத் தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது.

ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்யம், தணிக்கைக் குழு உறுப்பினர்கள், கழக அணிகளின் செயலாளர்கள் கூட்டம் 07.07.2020 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி*க்கு கழக அவைத் தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 03-07-2020 வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, July 2, 2020

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்க! பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் வைகோ வேண்டுகோள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஜூலை 1 அன்று எழுதி உள்ள கடிதம். 

பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கின்ற, சிறு,குறு,நடுத்தரத் தொழில்களை மீட்பதற்கும், புதிய கடன் வழங்குவதற்கும், 13 மே 2020 அன்று, இந்திய அரசு அறிவித்து இருக்கின்ற உதவிகள், ஆயத்த ஆடைத் தொழில் நிறுவனங்களுக்கு, புதிய நம்பிக்கையைக் கொடுத்து இருக்கின்றது.

எனினும், நெருக்கடி காலக் கடன் குறித்து, ஆயத்த ஆடைகள் தொழில் முனைவோர் தெரிவித்து இருக்கின்ற சில கருத்துகளை, தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். 

2020 பிப்ரவரி 29 ஆம் நாள் அன்று, 25 கோடிக்குக் குறைவான கடன் நிலுவையும், 2019/20 ஆம் ஆண்டில் 100 கோடிக்குக் குறைந்த வணிக வரவு செலவு செய்யும் நிறுவனங்கள், புதிய கடன் உதவி பெறத் தகுதி பெற்றவை என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

2020 ஜூன் 26 ஆம் நாள், நடுவண் அரசின் சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சித் துறை வெளியிட்டு இருக்கின்ற சுற்று அறிக்கையில், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருள் அல்லது சேவைகளை,  நிறுவனங்களின் ஆண்டு வணிக வரவு செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளது. 

அதன்படி, 25 கோடி கடன்,  2019/20 ஆம் ஆண்டில் 100 கோடி வணிக வரவு செலவு என்ற வரையறை பொருந்தாது. அதிலும் குறிப்பாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அறிவித்து இருக்கின்ற நெருக்கடி காலக் கடன்கள் பெறுவதற்கான வரையறைகளின்படி, புதிய உதவித் தொகை, கடன் வசதிகளைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும். 

இதன் மூலம், ஆயத்த ஆடைகள் தொழிலையும், அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். 

ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்து இருக்கின்றார்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
02.07.2020

1 July 2020

Dear Shri Narendra Modi ji,

Vanakkam. 

The Apparel Industry has been very positive and hopeful that the announcements made on 13th May, 2020 for relief and credit support related to businesses, 
especially, MSMEs would help in meeting the financial needs of the MSMEs under the present circumstances and translate on the ground.

However, I would like to highlight a concern that has been received from some of the Apparel exporters. 

This is with regard to the announcement on the Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) which aims to provide 100% guarantee coverage for the GECL,
which shall be a pre-approved sanction limit of up to 20% of the loan outstanding as on 29th February, 2020
to eligible borrowers in the form of additional working capital term loan facility (in case of banks and Financial institutions),
and additional term loan facility (in case of NBFCs) from all Member Lending Institutions (MLIs)
to eligible Business Enterprises/ Micro, Small and Medium Enterprise (MSME) borrowers in view of COVID 19 crisis, as a Special Scheme. 

In Chapter 7 of Eligible borrowers in operational guidelines of ECLGS it is mentioned that
"All Business Enterprises/MSME borrower accounts with combined outstanding loan across all MLIs of up to Rs. 25 crore as on 29.2.2020,
and annual turnover of up to Rs.100 crore for FY 2019-20 are eligible for the scheme.
MLIs are expected to check with credit bureau the overall outstanding of the borrower to assess the eligibility of the borrower".

Ministry of Micro, Small and Medium Enterprises vide its notification dated 26th June, 2020,
has clarified that Exports of goods or services or both shall be excluded while calculating the turnover of any enterprise whether Micro, Small or Medium.

It is requested that this relaxation is also reflected in the criteria for applying for ECLGS.
Accordingly, the annual turnover criteria of upto Rs.100 crore for FY 2019-20 may be removed, specially for apparel exporters. 

In view of the above, their demands:

1. The eligibility criteria for applying the ECLGS may be amended with no annual turnover limit (Currently Rs.100 Cr. ) for exporters.
2. The eligibility criteria i.e. All Business Enterprises /MSME borrower accounts with combined outstanding loans across all MLIs of up to Rs. 25 crore
    as on 29.2.2020 should also be amended and enhanced to Rs. 100 cr. combined outstanding loands. 

The Apparel Industry is indeed deeply obliged for the steps taken to facilitate the industry and look forward to the
proposed amendment in the Eligibility Criteria to provide the intended and much needed support to the borrowing units. 

I am positive that these measures will help in mitigating the suffering of the Apparel Industry and the millions of our workers, for which I shall remain obliged to you. 

With warm regards,

Yours sincerely,

Vaiko
Member of Parliament 
(Rajya Sabha)

Wednesday, July 1, 2020

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்துக! வைகோ அறிக்கை!

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று இதே இரண்டாவது அனல்மின் நிலயத்தில் 6ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு இதே போல கொதிகலன் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.என்.சி. இந்தியா நிறுவனம் நவரத்னா சிறப்பைப் பெற்று, இயங்கி வருகிறது. அனல்மின் நிலையங்களில் ஏற்படும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு நடத்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.

அனல்மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்கவும், உரிய கண்காணிப்பு தேவை என்பதையும் இதுபோன்று தொடர்ந்து நடக்கின்ற விபத்துகள் உணர்த்துகின்றன.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் நண்பர் மாண்புமிகு பியூஷ்கோயல் அவர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறேன்.

உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 25 இலட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்குவதோடு, அவர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழிலாளர் நலனுக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 01-07-2020 தெரிவித்துள்ளார்.