மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் கடந்த ஜூன் 25 அன்று, காணொளி சந்திப்பு வழியாக நான்கு மணி நேரம் நடைபெற்றது. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், ஜூலை 6 திங்கள் கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் காணொளி சந்திப்பு, 9 மணி நேரம் நடைபெற்றது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்று, கருத்துகளைக் கூறினார்கள்.
மேற்கண்ட இரு கூட்டங்களிலும் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலம் முழுமையும், அனைத்து மாவட்டக் கழகங்களின் கூட்டங்களையும் காணொளி வழியாக நடத்துவது என்றும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அனைத்து சந்திப்புகளிலும் பங்கு ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஜூலை 7 செவ்வாய் அன்று, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்யம், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக் குழு, அணிகளின் செயலாளர்கள் கூட்டம் 8 மணி நேரம் நடைபெற்றது. 60 பேர் பங்கேற்றுப் பேசினர்.
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்கும், மாவட்டச் செயல்வீரர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் காணொளி சந்திப்புகள் கீழ்காணும் நாள்களில் மாலை 4 மணி முதல் நடைபெறும்.
ஜூலை 12 திங்கள் தென்காசி மாவட்டம்
13 செவ்வாய் திருவள்ளூர் மாவட்டம்
14 புதன் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
18 சனி மாணவர் அணி
19 ஞாயிறு இளைஞர் அணி
மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 9-7-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment