விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூலை 27 ஆம் நாள் காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா நகர் இல்லத்தில் முன்பு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சிமன்றக்குழுச் செயலாளரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, துரை வையாபுரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment