Monday, March 23, 2015

யார் அந்த ஜெய பிரசாந்த்! வைகோவையே சுற்றி வந்தது ஏன்!

புரட்சி புயல், மக்கள் தலைவர், தாய் மண்ணை காக்க ஓய்வில்லாமல் தன்னுடல் வருத்தி போராடும் பெரு வானம், பிரதம மந்திரிகளை தன் கூரிய நாவின் மூலம் கேள்விக்கணைகளை தொடுத்து திணறடித்த வீர மகன், கலிங்கப்பட்டியின் செல்வ மகன், எங்கள் தலைவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் கருமை நிறத்தோற்றத்தில் 23 வயது துடிப்புமிக்க இளைஞன், மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுவதை காண முடியும். அந்த இளைஞனுக்கு இன்று பிறந்த நாள். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதோடு, நூறாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்

யார் இந்த இளைஞன்? அவர் ஏன் வைகோ போகுமிடமெல்லாம் அவரையே சுற்றி சுற்றி வருகிறார்?

2011 ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த அந்த கொடுமையான கலவரம் மதுரை வரை சங்கமமாயிருந்தது. அந்த நேரத்தில் வைகோ மதுரை சிந்தாமணி பகுதியில் பயணித்து கொன்டிருந்த போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு இளைஞன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டார். பதறிப்போனார் வைகோ. காவல்துறையின் சில கண்மூடிதனமான போலீஸ்காரர் சுட்டதில் புஜத்திலும், மார்பிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை, தலைவர் தாமே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மிகப்பெரிய மரணப்போராட்டத்திற்கு பிறகு உயிர் பிளைத்தான் அந்த இளைஞன்.

அதற்கு பின்னர், தலைவர் வைகோ எங்கு சென்றாலும் அவரை பிந்தொடர்ந்தான் அந்த இளைஞன். "என்னை சுற்றி சுற்றி வராதே" என கண்டித்தார். உயிர் கொடுத்தவரையே பற்றி கண பொழுதும் நினைத்துக்கொண்டிருந்ததால், கண்டித்தது கூட அந்த இளைஞன் காதுகளுக்கு விழவில்லை. உனக்கு எங்காவது நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்னை சுற்றி வராதே என்றும் தலைவர் சொல்லி பார்த்தார். வேலை எங்கு சென்றாலும் கிடைக்கும், இப்படி ஒரு தலைவன் கிடைப்பாரா என எண்ணினான் அந்த இளைஞன். உயிர் கொடுத்த கடவுளையே கண்ட பிறகு, வேலை எதற்கு என அதையும் நிராகரித்தான் பிடிவாதமாக. உயிர் பிச்சை கொடுத்த உங்களுடன் தான் இனி என் வாழ்க்கை அற்பணிப்பு என சாதாரணமாக வைகோவிடத்தில் சொல்லிவிட்டான் அந்த இளைஞன். என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை. பின் தொடர்ந்தான் செல்லுமிடமெல்லாம்...

நாட்கள் ஓடின, ஆண்டுகள் கடந்தன.... வைகோவை பின்தொடர்தலும் தொடர்ந்தது. ஈழத்திலே தமிழர்களை கொன்றுகுவித்த கொலைக்காரன் கொடியவன் ராஜபக்சே சாஞ்சிக்கு வருகிறான், அவனை எதிர்த்து போராடுகின்ற போர்களத்திலேயும் போர் வீரனாய் அந்த இளைஞனை அங்காயும் கண்டார் வைகோ... அந்த உண்ணாவிரத போராட்டத்திலே அதிசயம் நடந்தேறியது, சுற்றி சுற்றி வராதே என்று கண்டித்தும் தன்னையே சுற்றி சுற்றி வந்ததால், அவனின் கடமையுணர்வை கண்டவர், இனி இந்த இளைஞன் என்னுடைய உதவியாளனாக இருப்பான் என அறிவித்தார். யார் அந்த இளைஞன்? அந்த இளைஞன் தான்...

"ஜெய பிரசாந்த்"

மதுரையின் ஒரு சிறு கிராமத்தில் தானி ஓட்டும் தகப்பனார், வீட்டை மெருகேற்றிகொண்டிருக்கும் தாயாருக்கு மகனாய் பிறந்தார். தனக்கென ஒரு சகோதரியையும் கொண்டுள்ள இவர், கடைக்குட்டியாக பிறந்த செல்ல பிள்ளை ஆவார். இவர் மூன்றாண்டு தொழிற்கல்வி படிப்பை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையில் வெற்றிகரமாக முடித்திருந்தார். பின்னர் அலைப்பேசி வலையமைப்பு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் தான் பரமகுடி சம்பவம் நடந்தேறியது. உதவியாளர் ஆன பின்னர் தலைவரின் நிழலாகவே இருக்கிறார் அருமைத்தம்பி பிரசாந்த். நான் அழைக்கும் போதெல்லாம் வாய் நிறைந்த வார்த்தையோடே சொல்லுங்கண்ணே, எப்படி இருக்கீங்க என்று அன்பை பொழியும் குணம். வைகோவின் பாசறையில் வார்க்கபட்டுகொண்டிருக்கும் வருங்கால பட்டயம். விழி மூட நேரமில்லாமல் அசதியால் சோர்வடையும் தலைவன் ஆரோக்கியமாயிருக்க மருந்து குறிப்புகளையும் தாங்கி நடக்கும் சுமைதங்கி, போராட்டக்களத்தில் பல முறை கைது செய்யப்பட்டு மண்டப சிறைச்சாலைகளை மாணிக்க கோபுரங்களாக எண்ணி குதூகலித்ததுண்டு. தலைவரின் இன்ப துன்பங்களின் உதவியாளர். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்,

வைகோ என்ற சீறும் புலியின், கருமையான நிழலுருவம்தான்...
"கரும்புலி ஜெய பிரசாந்த்"

உயிர்கொடுத்த தலைவனை நெஞ்சிலே மாலையாக சுமக்கிறார். அப்படிப்பட்ட அருமைத்தம்பி பல்வேறு நற்பணிகளை வைகோவுடன் சேர்ந்தே அரங்கேற்றுகிறார். அவர் வாழ்நாளில் பெற்ற பாக்கியம் இப்படிபட்ட தலைவனுக்கு உதவியாளனானதுதான் என்ற பெருமை அவருக்கு எப்போதும் உண்டு.

கழகப்பணிகள் சிறப்பாக நடக்கட்டும், கரிகாலன் பிரபாகரன் கைகாட்டிய தலைவன் வைகோ அரியணையில் ஏறும் காலம் நெருங்கிவிட்டது. காத்திரு தம்பி பம்பரமாய் சுழலுவதற்கு....

மறுமலர்ச்சி மைக்கேல்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

தமிழனை புகழ்ந்த சிங்கப்பூரின் தந்தை மரணம்-கண்ணீர் அஞ்சலி!

இலங்கையின் தமிழீழ பகுதியில் இன்றும் நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை என கூறி தமிழருக்கு உதவியாக இருந்த, சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய 91 வயதாகும் லீ குவான் யூ அவர்கள் மரணமடைந்தார். ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

1990 ஆம் ஆண்டு வரையில் சுமார் 31 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்த லீ குவான் யூ, நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ சிகிச்சை பலனின்றி அதிகாலை 3.18 மணிக்கு மரணம் அடைந்தார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகத்தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் உயிரோடு இருந்த காலத்தில்தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தேறியது. 

அப்போது மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தான், அவனை, ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது. சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை.

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியம் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். 

பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.

யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். 

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்றபடி தான் இலங்கை அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள் தான் என லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் கேட்ட பேட்டிக்கு இவ்வாறு லீ குவான் யூ பதில்  கூறியிருந்தார். 

இப்படி தமிழர்களுக்கு துணிச்சலாக உதவி புரிந்தவரை, தமிழர்களாகிய நாம் இழந்து தவிக்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய தமிழர்களாகிய நாம் பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, March 22, 2015

தினசரி நாளேடு ஆண்டுச் சந்தா ₹1900.மே 1 முதல் வெளியீடு!

அன்பான தமிழ் உறவுகளே! 

ஏற்கனவே பதிவிட்டதை இன்னொருமுறை பதிவிடுகிறோம். விளம்பரம் மூலமே மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள் என்பது உண்மையாகிபோன நிலையில், நாங்களும் நடுநிலை ஏட்டிற்கு இதை விளம்பரமாகவே கருதுகிறோம். தோழர்களே இதை அனைவருக்கும் பகிருங்கள். பகிர்வதன் மூலம் மூலை முடுக்கெல்லாம இந்த செய்தி பரவட்டும். புதிய செய்தி தாள் நிறைய விற்கட்டும். வைகோ செயலை மக்கள் அறியட்டும். 

மே 1 ஆம் தேதி முதல் இந்த தினசரி ஏடு, நடுநிலை நாளேடாக வெளிவர இருக்கிறது. நாளேட்டின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த பத்திரிகையானது வீடுகளுக்கு அதிகாலையிலே சென்றடையும். அதிகாலையிலே நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஒரு வரப்பிரசாதமாக அமையும். 

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக, ஆண்டு சந்தா செலுத்தி இந்த தினசரி நாளேட்டை பெற விரும்பினால் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

அந்த பதிவினை பார்க்க தவறியவர்கள் இதை ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு தொடர்புகொள்ளலாம்.

மறுமலர்ச்சி மைக்கேல், அலைபேசி இலக்கம் +968-95484987. முகநூல் வாயிலாக தொடர்பு கொள்ள உங்கள் தகவல்களை எங்களுக்கு கீழ்கண்ட link-க்கு அனுப்பலாம்.

நீங்கள் படித்த பள்ளிகள், நூலகங்கள், தேநீர் அருந்திய கடைகள், உங்களுக்கு தொடர்புள்ள பொது இடங்களில் இந்த நடுநிலையான நாளேடும் உலா வரட்டும். செய்திகளை பரப்ப காரணமாயிருப்பதன் மூலம் உங்களுக்கும் ஒரு மன அமைதியும் ஏற்படும். நாளேட்டின் வரலாற்றில் அழியாத சின்னங்களாக உங்களை இந்த நாளேடும் வரலாறும் போற்றும். 

"முயற்சியெடுப்போம், முடித்து காட்டுவோம்"

மதிமுக இணையதள அணி - ஓமன்

Saturday, March 21, 2015

நேதாஜி பற்றிய கருத்தரங்கு - வைகோ டெல்லி பயணம்!

23-03-2015 அன்று டெல்லி தமிழ் சங்கத்தில் நேதாஜி இயக்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற நேதாஜி மகிமை பற்றிய கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, அதன் தலைவர் திரு.வைகோ அவர்கள் டெல்லி பயணமானார். இதில் முக்கிய இந்திய தலைவர்களும், முன்னாள் மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

திருப்பூா் மாணவரணி துணை அமைப்பாளர்களுக்கு வாழ்த்து!

திருப்பூா் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்களாக நியமிக்கபட்டுள்ள அன்பு சகோதரர் பெ.ஈஸ்வரமூா்த்தி கைப்பேசி இலக்கம் 9790449999 மற்றும் பொ.செந்தில்குமார் கைப்பேசி இலக்கம் 9976066774 அவா்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறோம். சகோதரர்கள் பல குழுக்களை அமைத்து கழக தோழர்களுடன் ஒற்றுமையாக பணியாற்றி தொண்டர்களின் ஆலோசனைகளையும் கேட்டு கழகப் பணிகளை சிறப்பிக்க வெண்டுகிறோம். கழக தொண்டர்கள் மற்றும் ஏனைய தலைவர்களும் சகோதரர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் செந்தில்குமார் அவர்களுடன் சேர்ந்து கழக பணியாற்ற அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, March 20, 2015

வைகோ எதிர்ப்பால், மீத்தேன் ரத்து நடவடிக்கை,அமைச்சர் அறிவிப்பு!

மனிதகுலத்தை வேரறுக்கும் மீத்தேனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடக்கத்திலிருந்தே எதிர்த்து பலதரப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதோடு, இதை கட்சி பாகுபாடின்றி செயல்படுத்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தையும் உருவாக்கி போராடி வருகிறார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் கூறியுள்ளது போராட்டம் வெற்றி பாதையில் போய்கொண்டிருப்பதையே காட்டுகிறது.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தினருக்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார்குடி ஏரியாவில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது. இந் நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நினைவூட்டப்பட்ட பிறகும் அந்நிறுவனம் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதற்கான காலம் 3.11.2013 அன்றோடு முடிந்துவிட்டது. ஒப்பந்தக்காரர் இந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை. ஒப்பந்த ஷரத்துகளின்படி காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

எனவே! மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் வைகோவை 2016 ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்த்தினால், அனைத்து தமிழக மக்களும் சுயமாக, நலமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக, அறிவுஜீவிகளாக வாழலாம் என்பது நிதர்சனம். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

வி.எஸ்.சம்பத் திருஉருவப் படத்தை வைகோ திறந்து வைத்தார்!

சமீபத்தில், மதிமுகவின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் தருமபுரி வி.எஸ்.சம்பத் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் திருஉருவப் படத்தை தர்மபுரியில் நடந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்தார். இதில் வி.எஸ்.சம்பத் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கழக தொண்டர்களும், தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் - வைகோ!

அஞ்சல் துறையை தனியார்மயம் ஆக்கக்கூடாது, கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைத்து கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும், இலாகா ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைத்திட பணி நிரந்தரம் வேண்டும் போன்ற கோரிக்கைளை முன்வைத்து, தமிழகத்தில் உள்ள 56 ஆயிரம் கிராமப்புற அஞ்சலகங்களில் பணியாற்றும் சுமார் 26 ஆயிரம் அஞ்சல் துறை பணியாளர்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் நடத்தி வரும் இப்போராட்டத்தில் இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தினால் தபால் பட்டுவாடா, பணவிடைகள் அனுப்புதல் மற்றும் சேகரிப்பு, அஞ்சலக சிறுசேமிப்புப் பணிகள், பொதுமக்களுக்கான சேவைகள், ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணி நிரந்தரம், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் நியாயமானவை ஆகும்.
கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள் என்று சொல்லப்படுகிறதேயொழிய அவர்களின் பணி, நகர்ப்புற அஞ்சலக பணியாளர்கள் போலவே வரையறுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கிராமிய அஞ்சல் ஊழியரும் தினமும் சராசரியாக 30 முதல் 60 கிலோ மீட்டார் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், பணி நேரத்தைவிட கூடுதலாக 6 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இருக்கின்றனர். ஆனால், கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் பெறும் ஊதியம் மொத்தம் ரூ. 7ஆயிரம்தான் என்பது வேதனைக்குரிய ஒன்று. ஆங்கிலேயர்கள் காலத்தில் மாத ஊதியமாக ரூ. 5, ரூ. 10 என்று பெற்றுக்கொண்டு, அஞ்சல் பணியை ஒரு கௌரவம் என்று கிராமப்புறங்களில் வசதி படைத்தோர் கருதினர்.
ஆனால், இப்போது கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இந்த சொற்ப ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால், 2014 பிப்ரவரியில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது. பணி நிரந்தரம், ஊதியக்குழு அமைத்தல் போன்றவற்றை ஏற்பதாகவும் கூறியதால், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தற்போதைய பா.ஜ.க. அரசு முந்தைய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தட்டிக்கழித்து வருவது மட்டுமின்றி, கிராமப்புற அஞ்சலகங்களை தனியார் மயம் ஆக்கும் முயற்சியிலும் முனைப்பு காட்டுகிறது.
சாதாரண எளிய மக்களுக்கு மகத்தான சேவை அளித்து வரும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராமல், அலைக்கழித்து வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Thursday, March 19, 2015

மறைந்த மதிமுக, வி.எஸ்.சம்பத் படத்திறப்பு விழா!

ம.தி.மு.க அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய பெரியவர், மறைந்த வி.எஸ்.சம்பத் அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி 20.03.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரியில் அமைந்துள்ள, கே.பி.ஜெ. தங்கமணி திருமண மண்டபத்தில் (வேல் பால் டிப்போ அருகில்) நடைபெறுகிறது. சம்பத் அவர்களின் திரு உருவப்படத்தை மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர், தலைவர் வைகோ அவர்கள் திறந்து வைத்து புகழ் அஞ்சலி  உரை நிகழ்த்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில், மதிமுகவின் அனைத்து மட்ட தலைவர்களும் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ஏப்ரல் 7 தஞ்சையில் மனிதச் சங்கிலி, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் அறப்போர்! கைகோர்க்க வாரீர்! வைகோ அழைக்கிறார்!

இது, தமிழக மக்களுக்கு அபாயங்கள் அச்சுறுத்தும் சோதனைக் காலம்!

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தை வாழ வைக்கும் உயிர் ஆதாரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுதான் காவிரி நதி ஆகும். பொங்கி வரும் பெருவெள்ளத்தை கல்லணை கட்டித் தேக்கி, சோழ மண்டலத்திற்குப் பெரும் செழுமை சேர்த்தான் கரிகால் பெருவளத்தான்.
உலக நாடுகள் வகுத்துள்ள ஹெல்சிங்கி விதிகளின்படி, காவிரி நதிநீர் உரிமை தமிழகத்தின் சட்டப்பூர்வமான ஆதிபத்திய உரிமை ஆகும். 1924 இல், அன்றைய மைசூர் அரசுடன் தமிழகம் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக எழுபதுகளில் கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே புதிய அணைகளைக் கட்டியபோதே, அதைத் தடுக்கும் கடமையில் அன்றைய காங்கிரÞ மத்திய அரசு தவறியது. இரு அரசுகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதால், உச்சநீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பையும் முற்றாக உதாசீனம் செய்து விட்டு, கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டூ, ராசிமணலில் இரண்டு புதிய அணைகளைக் கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் படுவேகமாகச் செய்து வருகிறது. இதில் மேகதாட்டூவில் மட்டும் 48 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். மைசூர் பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக என்று பொய்யுரைக்கும் கர்நாடக அரசு, நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக 11 இலட்சம் ஏக்கரில் பாசனத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு உள்ளது.
இந்த இரண்டு அணைகளும் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு மேட்டூருக்குத் தண்ணீர் வர வாய்ப்பே இருக்காது. பெருமழை காலத்தில் வெள்ளப்பெருக்கால் வரும் உபரி நீர் கூட மேட்டூருக்குக் கிடைக்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நாம் கற்பனை செய்ய முடியாத துன்பமும், அழிவும், தமிழகத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்களைத் தாக்கும். தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் குடிதண்ணீரும் பாசன நீரும் இன்றிப் பரிதவிக்கும். 5 கோடி மக்களுக்குக் குடிநீர் இன்றி, மூன்று கோடி விவசாயிகளுக்குப் பாசன நீர் இன்றிப் போகின்ற உத்பாதம் நிகழும்.
சோறுடைத்த சோழ வளநாடு பிச்சைப் பாத்திரம் ஏந்தும். தமிழகத்தின் எத்தியோப்பியாவாக காவிரி தீரம் மாறும். இத்தகைய ஒரு அபாயம், இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டதே இல்லை. இந்த ஆபத்தை நாம் தடுக்காவிடில் வருங்காலத் தலைமுறை நம்மை மன்னிக்காது. அணைகளைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கும் கர்நாடக அரசு, அதற்கு அடையாளமாக 25 கோடி ரூபாயை தொடக்க நிதியாக அறிவித்தும் விட்டது. தமிழகத்திற்குப் பெருங்கேடு செய்ய முனையும் கர்நாடக அரசைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ள நரேந்திர மோடியின் மத்திய அரசு அதற்கு மாறாக புதிய அணைகள் கட்ட மறைமுகமாக ஊக்குவிக்கிறது. அதனால்தான், மத்திய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில் டிசம்பர் மாதம் இரண்டு நாள்கள் நடைபெற்ற சதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவும் பங்கேற்றார்; சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்தே இக்கூட்டம் நடந்தது. நான் ஏற்கனவே கூறியது போல், பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் மத்திய அரசு, மிகப்பெரிய நயவஞ்சக நாடகம் நடத்துகிறது. புதிய அணைகள் கட்ட மத்திய அரசு இப்போது அனுமதி கொடுக்கவில்லை என்று ஒருபுறத்தில் கூறிக்கொண்டே மறுபுறத்தில் அணைகள் கட்டுவதை ஊக்குவித்து வருகிறது. புதிய அணைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விட்டன. கட்டுமான ஆயத்தங்கள் நடக்கின்றன. தமிழக மக்கள் மத்திய அமைச்சர்களின் வார்த்தைகளில் ஏமாந்து விடக் கூடாது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கும் நிலைமையைத் தடுக்க தமிழக மக்கள் கட்சி சாதி மத எல்லைகளைக் கடந்து, போர்க்குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசுக்கு அது எச்சரிக்கையாக அமைய வேண்டும். இதனைக் கருதித்தான் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் காவிரி தீர மக்களைச் சந்திக்கும் பயணமும், அறப்போராட்ட ஆலோசனைக் கூட்டங்களும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன.
பிப்ரவரி 18 ஆம் தேதி 14 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டமும், மார்ச் 11 ஆம் தேதி, தலைநகர் சென்னையில் மத்திய அரசின் சுங்க இல்ல முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்றன.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம் இழைக்கும் நரேந்திர மோடி அரசுக்குக் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவும், தஞ்சை சிவகங்கை மாவட்டங்களைப் பாழாக்க முனையும் மீத்தேன் நாசகாரத் திட்டத்தை விரட்டவும், நிலங்களைக் கையகப்படுத்த முனையும் மத்திய அரசின் அநீதியான மசோதாவை எதிர்க்கவும், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை மாநகரில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறும்.
கடந்த இரண்டு அறப்போர்களிலும் பங்கேற்ற அமைப்புகளும், விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் இந்த மனிதச் சங்கிலியில் கை கோர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

2015 மார்ச் மாத நாள்காட்டி!

Wednesday, March 18, 2015

நியூட்ரினோ எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் பார்வையற்றவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாராட்டை பெற்றார் வைகோ!

நியூட்ரினோ எதிர்ப்பு உண்ணாவிரதப் பந்தலில் இருந்த தலைவர் வைகோவை பார்வையற்ற பாசத்துக்குரியவர்களும், பள்ளி மாணவர்களும் சந்தித்து தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இத்தகைய பெருமை மக்கள் தலைவர் வைகோ ஒருவரையே சாரும்...

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதுரையில் வைகோ உண்ணா விரதம் தொடங்கினார்!

நாசகார நியூட்ரினோவை எதிர்த்து நேற்று தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ அவர்கள், இன்று (18.03.2015) மதுரை பழங்காநத்தம், நடராஜ் தியேட்டர் அருகில் காலை 9 மணிக்கு நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

க.கா.இரா.லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, கி.வே.பொன்னையன், இரா.சா.முகிலன், ச.சந்திரன், பூ.பா.இளையரசு, புதூர் மு.பூமிநாதன், டாக்டர் ப.சரவணன், எம்.டி.சின்னச்செல்லம், புலவர் செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், எஸ்.பெருமாள், வழக்கறிஞர் எஸ்.ஜோயல், பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகின்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, March 17, 2015

நியூட்ரினோவை எதிர்த்து வைகோ உண்ணாவிரத அறப்போர்!

நாசகார நியூட்ரினோவை எதிர்த்து, அதை தடை செய்யக்கோரி, 18.03.2015 அன்றூ காலை 9மணி அளவில், பழங்காநத்தம் - மதுரை நடராஜ் தியேட்டர் அருகில், தமிழ்நாட்டுக்காக தமிழர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஓய்வில்லாமல் உழைக்கும் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற இருக்கிறது. இதில் புதூர் மு.பூமிநாதன் - நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம், லெனின் ராஜப்பா, திருமுருகன்காந்தி - மே 17 இயக்கம், கி.வே.பொன்னையன், இராச.முகிலன், சந்திரன், இளையரசு மற்றும் பல தமிழ் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பெங்குபெறுகின்றனர். இந்த அறப்போராட்டத்தை ஆதரித்து பொதுமக்களும், விவசாய பெருங்குடி மக்களும, தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டு உண்ணாநிலை அறப்போராட்டத்தை வெற்றியடைய செய்யவெண்டுமென கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

நியூட்ரினோ விழிப்புணர்வை கேட்ட மக்கள் வெள்ளம்!

நாசகார நியூட்ரினோ வாயு திட்டத்திற்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மக்கள் தலைவா் வைகோ அவா்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. போகுமிடமெல்லாம் தலைவர் வைகோவை காண, அவரது பேச்சை கேட்க ஏராளமானோர் திரண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, March 16, 2015

நியூட்ரினோவை எதிர்த்து நாளை வைகோ பிரச்சாரப் பயணம்!

17.3.2015 செவ்வாய்க்கிழமை நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நியூட்ரினோ குறித்த பிரச்சாரப் பயணம் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இந்த பயணமானது, மாலை 4 மணிக்கு குண்டல்நாயக்கன்பட்டி தொடங்கி; 4.20 பாலார்பட்டி; 4.40 கூழையனூர்; 5 மணி குச்சனூர்; 5.20 மார்க்கையன்கோட்டை; 5.40 புலிகுத்தி; 6 மணி சிந்தலைச் சேரி; 6.20 பல்லவராயன்பட்டி; 6.40 பண்ணைப்புரம்; 7 மணி கோம்பை; இரவு 7.30 மணிக்கு உத்தமபாளையத்தில் நிறைவு பொதுக்கூட்டம் என முடிவடைகிறது. இதில் லெனின் ராஜப்பா, திருமுருகன்காந்தி, கி.வே.பொன்னையன், இராச.முகிலன், சந்திரன், இளையரசு - நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் மற்றும் பல்வேறு இயக்கத்தினை சார்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, March 15, 2015

கலிங்கப்பட்டி நிகழ்ச்சி தொகுப்பு இன்று இமயம் ரீவியில்!

இன்று இரவு 8.30 மணிக்கு இமயம் http://t.co/L0UvnAJ03d தொலைக்காட்சியில் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழா - தொகுப்பு காணத் தவறாதீர்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மசூதியை கொச்சைப்படுத்திய சு.சுவாமிக்கு கடுங்கண்டனம்!

இஸ்லாம் மக்கள் புனித தொழுகையை மசூதிகளில் நடத்துகின்றனர். அப்படிப்பட்ட புனிதமான மசூதிகளை ஆன்மீக தலங்கள் இல்லை எனவும், அது வெறும் கட்டடமே எனவும்! எப்போது வேண்டுமானாலும் இடித்து தரைமட்டமாக்கலாம் எனவும் பார்ப்பன அரசியல்வாதி பாஜகவின் கொள்கைதாங்கி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. 

இதில் பிரதமர் மோடி தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பேச்சு பாரத தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக இருக்கும். இதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசையே சாரும். மேலும் இது போன்று மதத்தின் பெயரால் பிதற்றுகிறவர்களை சிறப்பு வாய்ந்த மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அரசு ஆவன செய்யவெண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ராஜபக்சேவை, பிரதமர் மோடி சந்தித்தது கடும் கண்டனத்திற்குரியது!

தமிழின விடுதலைக்காக உயிர்கொடை செய்த விடுதலைபுலிகளின் மாவீரர்கள் மற்றும் அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த அரக்கன் ராஜபக்சேவை இந்திய பிரதமர் திரு.மோடி, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியா ஹவுஸ்-ல் நேற்று மாலை சந்தித்தார். இது அப்பட்டமான துரோகம். 

தமிழக தமிழகர்கள் திரு.மோடி இலங்கைக்கே போக கூடாது என்று போராட்டங்கள் நடத்துகின்ற நிலையில், அவர் ராஜபக்சே வை சந்தித்து உரையாடியிருப்பது தமிழர்களுக்கிடையே இன்னும் மனவருத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது. காங்கிரஸை விட பாஜக அரசு கூடுதலாக பச்சை துரோகத்தை தமிழருக்கெதிராக செய்துகொண்டிருக்கிறது. தமிழனை கருவறுக்க நினைக்கும் மோடி தமிழர்களின் வீடுகளில் சென்று பரிவு காட்டுவது போல நாடகமாடுகிறார். 

ராஜபக்சேவை சந்தித்து இருக்கிற மோடி இன்னமும் கூட்டு சேர்ந்து மீதமிள்ள தமிழர்களையும் கருவருக்க திட்டமிடுகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசுக்கு ஈழ தமிழர்களின் மீது அக்கரை இல்லையென்றாலும், உபகாரம் செய்வது போல உபத்திரவம் செய்யாமலிருக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம். தாங்கள் இலங்கையை ஆளுகின்ற சிங்களவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல், அமைதியை கடைபிடித்தாலே, தமிழீழ மக்களே போராடி தங்களுக்கான தாயகத்தை உலக நாடுகளின் உதவியுடன் பெற்று புலிக்கொடியை பட்டொளி வீச பறக்க விடுவார்கள். 

எனவே! ஈழத்தமிழர்களை வாழவிட, இனிமேலாவது இந்திய அரசானது சிங்களவனுக்கு துணைபோகாமல் அமைதி காக்க வெண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

மதிமுக இணையதள அணி -  ஓமன்

Saturday, March 14, 2015

ஓமன் மதிமுக இணையதள அணிக்கு சகோதரர் அறந்தை அலி நன்றி!

ஓமன் இணையதள அணி சார்பில் சகோதரர் அறந்தை அலியை கழகத்தை பற்றிய செய்தியினூடாக உற்சாக உணர்வை ஏற்படுத்திய காரணத்தால், நன்றி மடல் வனைந்துள்ளார். அது, உங்களின் பார்வைக்காக...
இது போன்ற கழக கண்மணிகள் இன்னும் ஏராளமாக மறுமலர்ச்சி கழகத்தில் மக்களுக்காக தொண்டாற்ற அழைக்கப்படுகிறார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மோடியின் இலங்கைப் பயணம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் கைது!

பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க, தமிழ்தேசிய விடுதலை இயக்கம், மனித நேய மக்கள் கட்சி, பெரியார் விடுதலை கழகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
இலங்கையுடன் இந்தியா எவ்வித உறவும் மேற்கொள்ளக்கூடாது என்றும், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை அதிபருக்கு எதிராகவும், மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்தும் அவர்கள் பலவித முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, சைதாப்பேட்டை s.p.s திருமணமண்டபத்தில் அடைத்து வைத்த போலீஸ் பின்னர் அவர்களை விடுவித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

அண்ணன் ஆசைத்தம்பியின் பெருமிதம்!

மதிமுகவின் மாநில மாணவரணி துணை அமைப்பாளராக, மக்கள் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர், திரு.வைகோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் திரு.ஆசைதம்பி அவா்களை அலைபேசியில் தொடர்புகொண்டு ஓமன் மதிமுக இணையதள அணி சாா்பாக பேசுகிறேன் என்று நலம் விசாரித்து வாழ்த்து சொன்னவுடனே, என் வாழ்த்துக்களை பெற்றுகொண்டார். பின்னர்  என்னையும் நலம் விசாரித்து என் சொந்த ஊரையும் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். ஓமன் நாட்டிலிருந்து அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள் என பெருமிதம் கொண்டார். கழகத்தின் பணி சிறப்பாக நடக்கட்டும் என்று தெரிவித்தேன், கண்டிப்பாக என நன்றியையும் தெரிவித்தார். நண்பர்களே இதுதான் மதிமுக படையணியினரின் சிறப்பு. 

சகோதரர் ஆசைத்தம்பி அவர்கள் கழகப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி, பல புது உத்திகளை புகுத்தி, மறுமலர்ச்சி தி.மு கழகத்தை வளர்ச்சி பாதையில் நடத்தி செல்ல வேண்டுகிறோம். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, March 13, 2015

ரவீந்திரநாத் தாகூர் இல்லம், நேதாஜி பவனில் வைகோ!

இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா சென்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ரவீந்திரநாத் தாகூர் இல்லம் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளையும், அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

பின்னர், நேதாஜி பவனம் சென்று நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாலையில், பார்வார்டு பிளாக் கட்சி அலுவலகத்திற்கு சென்ற வைகோ அவர்கள் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அசோக் கோஷ் அவர்களைச் சந்தித்து, “ஈழத்தில் இனக்கொலை; இதயத்தல் இரத்தம்” என்ற ஆங்கில ஒளிப்படக் குறுத்தட்டை அளித்து, கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் குறுந்தட்டை போட்டுக் காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கிருந்த அக்கட்சியினருக்கும் குறுந்தட்டுகளை வழங்கினார்.
மார்ச் 23இல் டெல்லியில் நேதாஜி இயக்கம் சார்பில், நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிடக்கோரி நடைபெறும் கருத்தரங்க விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பார்வார்டு பிளாக் கட்சி சார்பாக சந்திராபோஸ் கலந்துகொள்வார் என்று அசோக் கோஷ் தெரிவித்தார்.

பின்னர், கொல்கத்தா மாநகரில் தேசபந்து சித்தரஞ்சன் சாலையில் உள்ள மிகப் பிரம்மாண்டமான முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் வைகோவுடன் சந்திப்பு!

கொல்கத்தா நோவடெல் விடுதியில் தங்கியிருந்த மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை மேற்கு வங்க மாநில உயர்கல்வித்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பார்த்தா சட்டர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாநில மாணவர் அணித் தலைவர் அசோக் ருத்ரா ஆகிய இருவரும் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளருக்கு வாழ்த்து!

மதிமுகவின் மாநில மாணவரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் திரு.ஆசைதம்பி அவா்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சாா்பாக மனமாா்ந்த வாழ்த்துக்களை தொிவித்து கொள்கிறோம். கழகப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி பல புது உத்திகளை புகுத்தி வளர்ச்சி பாதையில் முன்னோக்கி நகர்த்தி, அவரும் பல உயாிய நிலைகளை அடைய வாழ்த்துக்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

3.15 க்கு சென்னை என்றால் 10 க்கு மதுரை சாத்தியமா?

குண்டு வைத்துவிட்டு சரண் அடைவது என்றால் பகலில் குண்டு வைக்க போகிறேன் என்று கூறிவிட்டு குண்டை வெடிக்க வைத்திருக்கலாமே??????? இந்த குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியாக மிக பெரும் அரசியல் சதி இருக்கின்றது. இதை மூடி மறைக்க அரசுகள் காவிகளுடன் இணைந்து செயல்படுகின்றதா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதின் மர்மம் தமிழ் தேசியத்துக்கான அச்சுறுத்தலே... அதிகாலை 3.15-க்கு சென்னையில் குண்டு வீசியவர், காலை 10 மணிக்கு மதுரையில் ஆஜரானது எப்படி  சாத்தியம்? இதன் பின்னணி என்ன?

மதிமுக இணையதள அணி - ஓமன்

Thursday, March 12, 2015

கூடலூர் மு.கரிகாலன் புது இல்ல புகு விழா வாழ்த்து!

சிங்கப்பூா் மறுமலா்ச்சி நண்பா், மதிப்பிற்குரிய சகோதரர் கூடலூர் மு.கரிகாலன் புது இல்ல புகு விழாவிற்கு முதலாக ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துதல்களை தெரிவிப்பதோடு புது மனையிலே மகிழ்ச்சி மேலோங்க, கலகலப்பு களைகட்ட, ஒற்றுமை தளைத்தோங்க, முன்னேற்றங்கள் மகுடம் சூடட்டும்.

இந்த இனிமையான விழாவிற்கு மதிமு கழகத்தின் மூத்த தளபதி மறுமலர்ச்சி தூண் புலவர் செந்திலதிபன் அவர்கள் வந்து வாழ்த்தியுள்ளதை முக நூல் மூலமாக கண்டு ஆனந்தமடைதேன். மட்டுமல்லாமல், கழகத்தின் இணையதள போராளிகள் வந்து வாழ்த்தியதையும் நினைத்து பார்க்கிறேன். மொத்தத்தில் புதுமனை மறுமலர்ச்சி நிறைந்ததாகவே காணப்பட்டிருக்கிறதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்