மதிமுகவின் மாநில மாணவரணி துணை அமைப்பாளராக, மக்கள் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர், திரு.வைகோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் திரு.ஆசைதம்பி அவா்களை அலைபேசியில் தொடர்புகொண்டு ஓமன் மதிமுக இணையதள அணி சாா்பாக பேசுகிறேன் என்று நலம் விசாரித்து வாழ்த்து சொன்னவுடனே, என் வாழ்த்துக்களை பெற்றுகொண்டார். பின்னர் என்னையும் நலம் விசாரித்து என் சொந்த ஊரையும் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். ஓமன் நாட்டிலிருந்து அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள் என பெருமிதம் கொண்டார். கழகத்தின் பணி சிறப்பாக நடக்கட்டும் என்று தெரிவித்தேன், கண்டிப்பாக என நன்றியையும் தெரிவித்தார். நண்பர்களே இதுதான் மதிமுக படையணியினரின் சிறப்பு.
சகோதரர் ஆசைத்தம்பி அவர்கள் கழகப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி, பல புது உத்திகளை புகுத்தி, மறுமலர்ச்சி தி.மு கழகத்தை வளர்ச்சி பாதையில் நடத்தி செல்ல வேண்டுகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment