புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர். இது மக்கள் விரோத நடவடிக்கையை காட்டுகிறது.சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்
தாக்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சியில், பாஜகவின் வானதி சீனீவாசன் பேசினார். அவர் பேசும்போதுதான் கீழ் திரையில் தாக்கப்பட்ட செய்தி ஓடிகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் திராவிட கட்சிகளால் தமிழ்நாடு நாசமாகிவிட்டது என்பதை கேட்டறிந்த கழக தோழர்கள் கொதிப்படைந்துள்ளனர். அவர்கள் திராவிட கட்சிகள் என்று சொல்லாமல் அதிமுக, திமுக என்று சொல்ல வேண்டுமெனவும் எச்சரித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்க்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் இந்துவா அமைப்புகள் கால் ஊன்ற முடியாது எனவும் வைகோ திண்டுக்கலில் பேட்டியளித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment