அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஆட்சி காலத்தில் அனைத்து தர மக்களையும் ஒற்றுமையோடு வழி நடத்தி பெரும்புகழை பெற்ற ஒப்பற்ற தலைவர். ஈழத்தில் வாழுகின்ற நம்முடைய தமிழ் மக்களுக்கு அரணாக விழங்கியவர். தலைவர் வைகோவை தன் சொந்த மகனை போல நடத்திய உத்தமர். வைகோ அவர்கள் தமிழீழ மக்களுக்காக, அவர்களின் பிரச்சனைகளுக்காக ஓடோடி வாஜ்பாய் அவர்களிடத்தில் செல்லும்போதெல்லாம் கரிசனையோடு தலைவர் கூறுவதை கேட்டு உதவி செய்யும் உருகிய மனம் படைத்த வள்ளல். வைகோ அவர்களின் மீது தனி மரியாதை கொண்டவர் என்பதால், வைகோ அவர்கள் டெல்லி செல்லும்போதெல்லாம், வாஜ்பாய் அவர்களை சந்தித்து நலம் விசாரிப்பார். அவர் பேச முடியாமலிருப்பது தலைவருக்கும் அவர் வழியில் நடக்கின்ற மதிமுக தொண்டர்களுக்கும் வேதனையே. இருந்தாலும் சிறப்பு மிக்க ஒரு உன்னதமான தலைவனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கிடைத்தது மகிழ்ச்சியே.... வாஜ்பாய் அவர்கள் பூரண நலத்துடன் வாழ எங்கள் வேண்டுதல்கள் இறைவனிடத்தில் எப்போது உண்டாகும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment