தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி மதிமுக செயலாளர் வைகோ உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நியூட்ரினோ ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர், நிலம், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தப்பகுதியை சுற்றியுள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் வைகோ தெரிவித்திருந்தார். மேலும், வனவிலங்குகள், விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த ஆய்வு மையத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறும் வரை ஆய்வுப்பகளை தொடரக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment