இராமநாதபுரம், மதுரை ரோடடில் உள்ள எம்.ஜி. மஹாலில் வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடக நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.
இந்த வேலுநாச்சியார் நாடகத்தில் மக்கள் தலைவர் வைகோ, புலவர் செவந்தியப்பன், பொடா பூமிநாதன், மருத்துவர் சரவணன், அத்தா Sathik Ali, மற்றும் நாடக இயக்குனர் Sriram Sharma அவர்கள் மற்றும் பல மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
வேலுநாச்சியார் நாடகத்தில்.. வேலுநாச்சியார், சின்ன மருது, பெரியமருது...
தன் அரசி வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க மாட்டேன் என தன்னுயிர் நீத்து, இன்று கொல்லங்குடியில் வெட்டுடையாள் காளியம்மனாய் அருள் வழங்கும். உடையாளும், வேலுநாச்சியாரும், உடையாள் உயிர்நீத்த காட்சியும்...
இஸ்லாமிய பேரரசன் ஹைதர் அலி சகோதரியாக வேலுநாச்சியாரை ஏற்றுக்கொண்டு, படை உதவி செய்வதாக ஒப்புக்கொண்ட காட்சி..
ஒரு நவராத்திரி பொழுதில் தன் மேனி எங்கும் எண்ணை ஊற்றி, ஆங்கிலேயர் ஆயுத கிடங்கில் குதித்து அழித்த தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த குயிலி அம்மையார் தோன்றும் காட்சியும், வெள்ளையர்களுடன் நடக்கும் போரின் காட்சியும்...
சாதி, மதம் ஒற்றுமையை வலியுறுத்திய வேலுநாச்சியார் நாடகம் இனிதே நிறைவுறும் காட்சி....
No comments:
Post a Comment