மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்ற இமயம் குழுமத்தின் நடுநிலை தமிழ் நாளேட்டின் சந்தா தொகையளிக்கும் விழா இனிதே நடைபெற்றது.
திருப்பூர் ராமசாமி கவுண்டர் முத்தம்மாள் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தலைவரே சந்தா சேகரிப்பின் நிலைமையை எடுத்து கூறி சந்தா அளித்தவர்களின் தொகையையும் பெற்றுகொண்டார்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் தலைவரின் தளபதிகளில் ஒருவரான அருமை சகோதரர் R.T.மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக யாராவது சந்தா செலுத்த விரும்பினால், எங்களை தாராளமாக தொடர்பு கொண்டு எங்கள் மூலமாக சந்தா செலுத்தலாம் என கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.
அலைபேசி இலக்கம்;+96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment