தேனியில் நடந்து முடிந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரத்தில் கிடைத்த சிறு நேரத்தில், மாவட்ட கழகத்தின் தொண்டர் திராவிட மணியின் அழகிய தேனீர் கடையில் தலைவர் வைகோ மற்றும் மேதா பட்கர் ஆகியோர் தேனீர் அருந்தினர். இந்த எளிமை எங்கள் தலைவனை தவிர யாருக்கு உண்டு திராவிட கழகத்தில். பொது நலத்திலே சுயநலமில்லாமல், தன் வாழ்நாளை அற்பணித்திருக்கின்றாரே... ஓய்வில்லாமல் போராடுகின்றாரே... மக்கள் நலனில் நம் பாதுகாப்பிற்காக, அவரே துன்பங்களை அனுபவிக்கின்றாரே... தமிழக மக்களே நாம் சிந்திக்க வேண்டாமா... அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தால், நியூட்ரினோ வருமா? காவிரி கிடைக்காமல் போகுமா? மீத்தேன் நம்மை அழிக்குமா?
அன்னை இந்திரா காந்தி சொன்னாரே! வைகோ என்ற ஒரு MP, என்னுடன் இருக்கும் 200 MP க்கு சமம் என்று. தமிழக மக்களே அது உங்களுக்கு புரியாமல் போய்விட்டதா. தமிழகத்தின் 40 MP-யும் மெளனமாக மேஜை தட்டி கொண்டிருக்க, வைகோ என்ற ஒரு மனிதன் போயிருந்தால், நாடாளுமன்றமே புலி வருவதை கண்டு அஞ்சி அடங்கி இருந்திருக்குமே... தமிழகத்திற்காக நாடாளுமன்றமே முன்வந்து, கேட்பதற்கு முன்னரே நற்திட்டங்களை அறிவித்திருக்குமே!...தமிழகத்தின் இவ்வளவு ஆபத்துக்களுக்கும் நாம் போராட தேவை இல்லாமல் இருந்திருக்குமே...
ஆனது ஆகட்டும், வருகின்ற 2016 தேர்தலிலாவது தமிழக மக்கள் தங்கள் புத்தியை கூர் தீட்டி, வைகோ என்னும் தமிழகத்தின் பொக்கிசத்தை அரியணையில் அமர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், வருங்கால உங்கள் சந்ததியினரும் நலமாக வாழ்வதற்கு நற்திட்டங்களை தீட்டி வருங்கால தமிழகத்தை கட்டி காப்பார். எனவே இப்போதே தயாராவோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment