இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா சென்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ரவீந்திரநாத் தாகூர் இல்லம் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளையும், அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
பின்னர், நேதாஜி பவனம் சென்று நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாலையில், பார்வார்டு பிளாக் கட்சி அலுவலகத்திற்கு சென்ற வைகோ அவர்கள் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அசோக் கோஷ் அவர்களைச் சந்தித்து, “ஈழத்தில் இனக்கொலை; இதயத்தல் இரத்தம்” என்ற ஆங்கில ஒளிப்படக் குறுத்தட்டை அளித்து, கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் குறுந்தட்டை போட்டுக் காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கிருந்த அக்கட்சியினருக்கும் குறுந்தட்டுகளை வழங்கினார்.
மார்ச் 23இல் டெல்லியில் நேதாஜி இயக்கம் சார்பில், நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிடக்கோரி நடைபெறும் கருத்தரங்க விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பார்வார்டு பிளாக் கட்சி சார்பாக சந்திராபோஸ் கலந்துகொள்வார் என்று அசோக் கோஷ் தெரிவித்தார்.
பின்னர், கொல்கத்தா மாநகரில் தேசபந்து சித்தரஞ்சன் சாலையில் உள்ள மிகப் பிரம்மாண்டமான முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment