அன்பான தமிழ் உறவுகளே!
மே 1 ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த தமிழினத்தின் உரிமைக் குரலாக தமிழ் தினசரி ஏடு, நடுநிலை நாளேடாக வெளிவர இருக்கிறது. அனைத்து ஆயத்த பணிகளும் முடிவடைந்துவிட்டன. இந்த நாளேடானது முழுக்க முழுக்க இமயம் ஜெபராஜ் அவர்களால் தொடங்கபட்டு நடத்தபட இருக்கிறது. அந்த நாளேடானது நடுநிலை வகிப்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்டுகொண்டிருக்கும் நமது கழக செய்திகளும் முழுமையாக இடம்பெறும். இதனால் கழகத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் அனைத்து நற்காரியங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கபடும். தலைவரின் ஓயாத உழைப்பு தமிழக மக்களுக்கும் புரியும். இதற்கு தலைவர் வைகோ அவர்களும் ஆதரவு தர கழக தொண்டர்களை கோரியுள்ளார்கள். நாளேட்டின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.
இரண்டு இலட்சம் பிரதிகள் ஆயுள் சந்தா உறுப்பினர்கள் மூலம் விற்கபட, கழகப் அமைப்புகள் மூலம் சேர்த்திட திட்டம் வகுக்கப்பட்டு, நாடெங்கிலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஆண்டுச் சந்தாவாக ₹1900 பெறப்படும். பத்திரிகையானது வீடுகளுக்கு அதிகாலையிலே சென்றடையும். அதிகாலையிலே நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஒரு வரப்பிரசாதமாக அமையும். செய்திகளை கேட்பதை விட வாசிக்கும் போது அவை மனதில் ஆழமாக பதிந்துவிடுவதால் நமது அறிவுதிறன் கூடும். எனவே கழக இணையதள அணியின் தொண்டர்களே, மாணவ அமைப்புகளே, நீங்கள் முதலில் சந்தா செலுத்துங்கள். உங்கள் உறவினர்களை செலுத்திட அன்புடன் கேளுங்கள். உங்கள் நட்பு வட்டத்தை அவசியம் சந்தாதாரர் ஆக்குங்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக, ஆண்டு சந்தா செலுத்தி இந்த தினசரி நாளேட்டை பெற விரும்பினால், இந்த நாளேடானது தினசரி உங்கள் வீடுகளுக்கு சென்றடையும். நீங்கள் எங்களை அணுகும் பட்சத்தில், நீங்கள் செலுத்தும் ஆண்டு சந்தாவிற்கான ரசீது நாளேட்டின் அதிகாரபூர்வ அலுவலகத்தின் முத்திரையுடன் உங்கள் கரங்களில் வந்து சேர ஏற்பாடு செய்யப்படும் என பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம். தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி, மறுமலர்ச்சி மைக்கேல், அலைபேசி இலக்கம் +968-95484987. முகநூல் வாயிலாக தொடர்பு கொள்ள உங்கள் தகவல்களை எங்களுக்கு கீழ்கண்ட link-க்கு அனுப்பலாம்.

நீங்கள் படித்த பள்ளிகள், நூலகங்கள், தேநீர் அருந்திய கடைகள், உங்களுக்கு தொடர்புள்ள பொது இடங்களில் இந்த நடுநிலையான நாளேடும் உலா வரட்டும். செய்திகளை பரப்ப காரணமாயிருப்பதன் மூலம் உங்களுக்கும் ஒரு மன அமைதியும் ஏற்படும். நாளேட்டின் வரலாற்றில் அழியாத சின்னங்களாக உங்களை இந்த நாளேடும் வரலாறும் போற்றும்.
"முயற்சியெடுப்போம், முடித்து காட்டுவோம்"
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment