தேனி மாவட்டத்தில் நடந்த நாசகார நியூட்ரினோ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சமூக சேவகர் போராளி மேதா பட்கர் மற்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு அதன் தீமைகளை மக்களிடம் எடுத்து கூறினர். இதில் மே17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் தேவாரத்தில் மாலை நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், மதிமுக கழக தொண்டர்கள் என பல்லாயிரகணக்கானோர் கலந்துகொண்டனர். மேதா பட்கர் விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். பின்னர் பொதுமக்கள் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தின் நிறைவுபகுதியில், சமூக போராளி மேதா பட்கர்-க்கு நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நினைவு பரிசு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ-வின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது.
படத்தில் இருக்கும் இந்த அற்புதம் நிறைந்த பசுமையான மலையை குடைந்துதான் நாசகார நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment