Monday, March 9, 2015

மதிமுக இணையதள ஏவுகணை மின்னல் அவர்களுடன்...

மதிமுக-வின் மறுமலர்ச்சி இணையதள அணி செயலாளர், இணையத்தின் ஈட்டி, ஊரெல்லாம் உலாவி, மக்கள் தலைவனின் உழைப்பினை படம்பிடிக்கும் பரஞ்சோதி சகோதரர் திரு.மின்னல் முகம்மது அலி அவர்களிடத்தில் தொடர்பு கொண்டேன். ஓமன் மதிமுக இணையதள அணி-ஐ பற்றி வினவினேன். நமது கழகத்தின் கொள்கைகளை பரப்பி வருகிறோம். எங்கள் பணிகள், தமிழகத்தின் தானை தலைவன், ஆதாயம் தேடாத ஆகாயம், தமிழகத்தை காக்கும் அரண் எங்கள் தரணி போற்றும் தலைவன், மதிமுகவின் பொதுச்செயலாளர் தலைவர் திரு. வைகோ அவர்களின் செவிகளுக்கு எட்டட்டும் என்று வினவினேன். 

ஏற்கனவே தங்கள் முகநூலில் ஓமன் மதிமுக இணிஅயதள அணி பற்றிய தகவல் அனுப்பியிருக்கிறேன், தாங்கள் பார்த்தீர்களா என நினைவுபடுத்தினேன். பார்த்தேன் என பதிலளித்தார். தலைவரின் ஒப்புதலோடு அடங்கா பணிகள் ஆயிரம் செய்யவேண்டியிருக்கிறது. ஓமன் மதிமுக இணையதள அணி-யை தங்கள் முக நூலிலும், அதன் பக்கத்திலும் விளம்பரமாக செய்யவேண்டும் என கூறினேன். அப்படி விளம்பரம் செய்யும் மாத்திரத்திலே கழக கொள்கைகளை, அன்றாடம் தலைவரின் நற்செயல்களை இணையத்தின் மூலம் உலகெங்கும் பரப்ப எங்களுக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்றேன். அதற்கு பதிலளித்த சகோதரர் மின்னல், சற்றும் தயங்காமல், தலைவரின் ஒப்புதலோடு கண்டிப்பாக செய்கிறேன் என்றார். 

எனவே நண்பர்களே தலைவரின் ஒப்புதல் கிடைக்கும், தயங்காமல் பணியாற்றுவோம், மறுமலர்ச்சியை உருவாக்கி, 2016 ஐ மறுமலர்ச்சியின் ஆண்டாக மாற்றி, மறுமலர்ச்சி தலைவனை அரியணையில் அமர வைப்போம்.

நமது முகநூல் மற்றும் இணையம் பற்றிய தகவல்களுக்கு...
https://www.facebook.com/mdmkoman
http://www.mdmkoman.blogspot.com

மதிமுக இணையதள அணி - ஓமன்

மறுமலர்ச்சி மைக்கேல்.
https://www.facebook.com/MarumalarchiMicheal
http://www.marumalarchimicheal.blogspot.com

No comments:

Post a Comment