ஓய்வில்லா உழைப்பாளி, தமிழகத்தின் விடியல், புரட்சி புயல் வைகோ அவர்களின் ஈடு இணையில்லா தொண்டன், மதிமுக வாழ்நாள் உறுப்பினர் திரு.ஜாகுபர் அலி அவர்கள் ஓமன் நாட்டிலே, டுக்கும் என்னும் இடத்திலே பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கிறார். அயராத பணி சுமைக்கிடையிலும் இணையத்தில் தலைவர் வைகோவின் பதிவுகளை தேடிய பொழுது, ஓமன் நாட்டிலும் மதிமுக பரப்புரை நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்த மாத்திரத்திலே தொடர்பு கொண்டார். அப்போது அவரது தமிழின உணர்வு அளவிட முடியாதது. இப்படிபட்ட உணர்வு, தலைவர் வைகோ அவர்கள் வழி நடத்துகின்ற மதிமுக-வின் தொண்டர்களை தவிர யாருக்கும் கிடையாது. சகோதரர் திரு.ஜாகுபர் அலி அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு, அவரை போன்ற உணர்வு உள்ளவர்கள் காக்கின்ற இயக்கத்தை மென் மேலும் கட்டிக்காக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment