தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் ஒன்றான காவிரி நதியின் குறுக்கே, மேகதாது, ராசி மணல் ஆகிய இரு இடங்களில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக மக்களின் தலையாய கடமை ஆகும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் அணைகள் கட்ட முற்படும் கர்நாடக அரசைத் தடுக்க வேண்டிய நரேந்திர மோடியின் மத்திய அரசு, தமிழகத்துக்கு வஞ்சகமாகத் துரோகம் விளைவிக்கும் போக்கு நீடிக்கின்றது.
எனவே, காவிரிக்குக் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதைத் தடுக்க, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு 28 ஆம் தேதி தமிழகத்தில் நடத்த இருக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தருவதுடன், தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள், வணிகப் பெருமக்கள், தொழிலாளர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த போராட்டத்தை தமிழக அரசும் ஆதரித்து, நீர் வள பாசனத்துறை அமைச்சர் அவர்கள் ஆதரவான அறிக்கை விடவேண்டுமென கேட்டு கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment