காவிரிப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மார்ச்11 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாய பெருமக்களும், கழக கண்மணிகளும் பெருமளவில் பங்கேற்க காவிரிப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வைகோ அழைக்கிறார். எனவே தமிழக மக்கள் அனைவரும், திரு.வைகோ அவர்களுடன் சேர்ந்து போராடி தமிழகத்தை காக்க அன்போடு வேண்டுகிறோம்.
முற்றுகை போராட்டத்திற்கு வருகை தரும் தோழர்கள், தங்குவதற்கு வசதியாக எழும்பூர் ரயில் நிலையம் எதிரில், ஆல்பர்ட் தியேட்டர் அருகில், ஹோட்டல் இம்பீரியல் - சிராஜ் திருமண மண்டபத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே தோழர்கள் இங்கே தங்கி இருந்து போராட்டத்திற்கு செல்ல அழைக்கப்படுகிறார்கள்.
அணி அணியாய் செல்வோம் ! ஆர்ப்பரித்து வாரீர் !!
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment