சென்னை சுங்க அலுவலக முற்றுகை போராட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தலைவா் வைகோ, கழக தொண்டா்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட 4000 க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து வாகனத்தில் ஏற்றி கொண்டு ஒரு மண்டபத்திற்கு சென்றார்கள்.
பின்னர் மண்டபத்தில் தொண்டர்கள் மத்தியில் தலைவர் வைகோ அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
எழுச்சியுரையாற்றிய பின்னர் தொண்டர்கள் மண்டபத்திலேயே தங்கி இருந்தனர். தலைவரும் தொண்டர்களோடு தொண்டர்களாக ஓய்வெடுத்தார். குளிா்சாதன அறையில் படுத்துக்கொண்டு அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் தலைவர்கள் மத்தியில் தன் ஓய்வைக்கூட தொண்டா்களுடன் எடுக்கும் எங்கள் தலைவா் ஒரு தமிழ் வரலாற்றின் சரித்திரமாக திகழ்கிறார்.
பின்னர் மாலையில் தலைவர் வைகோ உட்பட அனைவரும் மண்டபத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
தலைவரின் ஓயாத மக்கள் நலன் சார்ந்த போராட்டம் வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கவேண்டும். வெற்றி வாகை சூட வேண்டும். கடின உழைப்பே, அமோக வெற்றி.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment