தமிழக மீனவர்களை சுட்டு கொல்வோம் என்று தந்தி தொலைக்காட்சியில் பேட்டியளித்த இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இந்திய வெளியுறவு மந்திரி சுஸ்மா சுவராஜ் இலங்கை சென்றதும் அவரிடம் வருத்தம் தெரிவித்ததாக தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சரே! பாகிஸ்தான் பிரதமர் இந்திய மீனவனை சுட்டுகொல்வோம் என பேட்டி அளித்திருந்தால், நீங்கள் பாகிஸ்தானுக்கு போயிருப்பீர்களா? இந்திய அரசுதான் கண்டனம் தெரிவிக்காமல் இருந்திருக்குமா? அப்படி ஏதும் மறுபடி பேசினால் போருக்கல்லவா ஆயத்தமாயிருப்பீர்கள்.
நட்பு நாடு என்று தம்பட்டம் அடிக்குறீர்களே! நண்பன் உங்கள் சகோதரர்களை சுட்டு கொல்வானா? நண்பனுக்கு தாரை வார்த்து கொடுத்த தமிழ் தாயகத்தை ஆண்ட மன்னனின் நிலமான கச்ச தீவை திரும்ப பெறாதது ஏன்? தமிழனை அடிமையாக்கி நெடுநாள் வாழலாம் என நினைக்காதீர்கள். 1965-ல் நடந்த மொழிப்போராட்டத்தை உங்களுக்கு நினைவு கூரவிரும்புகிறேன். அப்படி இன்னுமொரு போராட்டம் நடக்க இந்திய அரசு காரணமாயிருக்குமானால், தமிழ்நாடு அரசியல் சாசனம் உங்களால் தனியாக்கப்படும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துகொள்ள விரும்புகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment