மதிமுக பொதுச்செயலாளர் தலைவா் வைகோ அவர்கள் சமூக சேவகா் மேத்தா பட்கா் அவர்களை ரயில் நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர் பிரச்சாரம் தொடங்கும் இடத்திற்கு வருகை புரிந்த வைகோ மற்றும் மேதா பட்கர் அவர்களுக்கு தொண்டர்கள் மாலையிட்டும் பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
பின்னர் தலைவா் வைகோ மற்றும் சமூக சேவகா் மேத்தா பட்கா் அவர்களின் பத்திாிக்கையாளா் சந்திப்பு நடந்தது.
பிரச்சாரத்தில் எங்களை வாழவிடுங்கள் என்ற பதாகையோடு மழலைகள் அடிக்கும் உச்சி வெயிலிலும் அதை தாங்கி பிடித்திருந்தது ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தியது.
தேவா் திருமகனாருக்கு தலைவா் வைகோ அவா்கள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார், மேதா பட்கரும் உடனிருந்தார்.
மதுரை புறநகா் மாவட்ட செயலாளா் அண்ணன் சரவணன் அவா்கள்தலைமையில் தலைவா் வைகோ அவா்களுக்கு உசிலம்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. தலைவா் வைகோ அவா்கள் நியூட்ரினோ வினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார். சமூக சேவகா் மேதா பட்கா் உரையும் நியூட்ரினோவை எதிர்ப்பதாகவே அமைந்திருந்தது. அவரும் நியூட்ரினோவினால் மனிதம் பாழ்படும் என்பதை சுட்டிகாட்டினார். பின்னர் மதுரை புறநகா் மாவட்ட செயலாளா் அண்ணன் சரவணன் அவா்கள் உரையாற்றினார்.
நியூட்ரினோ விழிப்புணா்வு நாடகம் சிறுவர்களால் அரங்கேறியது. நாடகத்தில் நடித்த சிறுவனுக்கு தலைவா் வைகோ அவா்களும் மேதா பட்கா் அவா்களும் பாராட்டு தெரிவித்து ஊக்குவித்தனர்.
பிரசாரம் ஊர் ஊராக நடைபெற்று கொண்டிருக்கிறது. மாலை 5.30 மணிக்கு தேவாரத்தில் பொதுகூட்டம் நடைபெறும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment