Tuesday, November 29, 2016

சேலம் உருக்காலையைதனியாருக்குத் தாரை வார்க்காதீர்!வைகோ அறிக்கை!

மக்கள் அவையில் நேற்று உருக்குத்துறை இணை அமைச்சர் விஷ்ணு டியோ சாய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், சேலம் உருக்காலையை நவீனப்படுத்தவும், விரிவாக்கம் செய்திடவும், ரூபாய் 2200 கோடி முதலீடு செய்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நட்டத்திலேயே இயங்கி வருகின்றது. இதனால் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்க உருக்காலையின் பங்குகள் 51 விழுக்காட்டிற்கு மேல் தனியாருக்கு விற்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்து இருக்கின்றார்.

மத்திய கனரகத்துறை அமைச்சர் ஆனந்த் கீதே சென்னைக்கு வந்திருந்தபோது, சேலம் உருக்காலை தனியார் மயம் ஆகாது என்று சொன்னார். அதற்கு மாறாக, இப்போது சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அதிர்ச்சி அளிக்கின்றது.
1973 இல் சேலம் உருக்காலை, இந்திய உருக்காலை ஆணையத்தின் சார்பு நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 136 கோடி ரூபாய் முதலீட்டில், 32 ஆயிரம் டன் திறன்கொண்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்திக்கான உருட்டாலை திட்டத்திற்கு 1977 இல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
உலகச் சந்தையில் சேலம் உருக்காலை உற்பத்தி செய்யும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உருக்காலை தயாரிக்கும் தகடுகளை உலகின் 37 நாடுகள் வாங்குகின்றன. சேலம் உருக்காலை ரூபாய் 800 கோடி அந்நியச் செலாவணியும், எக்சைஸ் மற்றும் இறக்குமதி என்ற வகையில் ரூபாய் 1200 கோடியும் இதுவரை ஈட்டித் தந்துள்ளது.
1995 இல் வெப்ப உருட்டாலை அமைக்கப்பட்டு, மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் டன் முதல் 25 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்து உலகச்சாதனை படைத்துள்ளது.
ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்தியில் உலக அளவில் 12 பெரிய உற்பத்தி நிறுவனங்களில் சேலம் உருக்காலையும் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் ஆகும். பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா சிறப்புத் தகுதி பெற்ற சேலம் உருக்காலை பல்வேறு இடர்பாடுகளை சந்தித்த நிலைலும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவில் லாபம் ஈட்டி வந்தது.
உலக வங்கியின் மெக்கன்சி குழு பரிந்துரையின்படி துர்காபூர், சேலம், பத்ராவதி, வங்கத்தில் உள்ள இஸ்கோ போன்ற ஆலைகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் இருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க துடித்துக்கொண்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது ஆகும்.
மத்திய அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடு போன்ற காரணங்களால்தான் சேலம் உருக்காலை சீர்கேடு அடைந்தது என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், நேரடியாகவும், மறைமுகமாகவும் அங்கு பணியாற்றும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சேலம் உருக்காலையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறே என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, November 28, 2016

ஊக்கப்படுத்திய வைகோ உதவியாளர் அருணகிரி அவர்களுக்கு நன்றி!

கடந்த 25-11-2016 அன்று ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அல் ஹெயில் என்னும் இடத்தில் ராகேஷ் அப்பார்ட்மன்டில் நடந்தது. இதில் கழக தோழர்கள் அதிகமாக கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வை சங்கொலிக்கும் அனுப்பியிருந்தோம். அதை தலைவர் வைகோ அவர்களின் தனி உதவியாளர் அருணகிரி அவர்கள், தங்களுடைய முகநூல் பக்கத்திலும் பதிந்து, இமெயிலிலும் ஒற்றுமையே நம் வலிமை, தோழர்களுக்கு வாழ்த்துக்கள் என்று ஓமன் இணையதள அணி தோழர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அது அனைத்து ஓமன் இணையதள அணி உறுப்பினர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை தந்ததுடன் இன்னும் அதிகமாக இணையத்தில் கழக மக்கள் நலன் செய்திகளை பரப்புரை செய்யவும் தூண்டுகிறது.

கடந்த 27 வருடத்திற்கும் மேலாக தலைவர் வைகோவுடன் இருந்து, வைகோவின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிற அருணகிரி அவர்களுக்கு ஓமன் இணையதள அணி நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் மற்ற இணையதள தோழர்களும், ஓமன் இணையதள அணி நிகழ்வுகளை பதிந்து ஊக்கப்படுத்தியிருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கௌரிகுமார் இல்லத் திருமண விழாவில் வைகோ வாழ்த்துரை!

கௌரிகுமார் அவர்களின் இல்லத் திருமண விழா நேற்று 27-11-2016 சென்னையில் நடந்தது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு திருக்குறள் கொடுத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்த திருமண நிகழ்வில் குழந்தைகளும் வைகோ அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆசிபெற்றனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் மணமக்கள் பல்லாண்டு காலம் வள்ளுவன் வாசுகி போல வாழ்வாங்கு வாழ திருமண நல் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறோம்.

பட செய்தி: மதன் கோபால்

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, November 27, 2016

தமிழீழ மாவீரர் நாள் கூட்டம் மதிமுக தாயகத்தில்! தலைவர்கள் உரை!

தமிழீத்திற்காக தங்கள் உயிர்களை கொடையாக தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மறுமலர்ச்சி தி.மு,கழகத்தின் சார்பில் தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று 27.11.2016 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

தாயக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், திருமுருகன் காந்தி, ஓவியர் வீர சந்தானம், புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் தியாக தீபத்தை பற்ற வைத்து வீர வணக்க முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் தாயகத்தினுள் நிகழ்ச்சிகள் நடந்தன.

அதில் பேசிய வைகோ அவர்கள், எங்கள் இயக்க தோழர்கள் வடிகட்டப்பட்ட வார்ப்பிக்க பட்ட பிள்ளைகள் எங்கள் நிர்வாகிகள், சகோதரர்கள், சகோதரிகள். 

திலீபனுடைய மரணத்திற்கு பிறகு, திலீபன் உண்ணாவிரதம், காசி அனந்தன் கவிதைகள் கிளிப் எல்லாம் வீடியோ கேசட் போட்டு எடுத்துட்டு ஒவ்வொரு வட நாட்டு தலைவர்களுக்கும் ஒரு மணி நேர வீடியோ காமித்திருக்கிறேன்.

எம்ஜிஆர் மாதிரியே விபி சிங்க இருந்ததால் நான் பாராளுமன்றத்தில் அவரை பார்த்த போது எனக்கு பிடித்துபோய்விட்டது. அவர பாராளுமன்றத்தில் அட்டாக் செய்யும்போது எவரும் ஆதரவளிக்காமல் இருந்த போது ஒரே எம்பி நான் மட்டுமே ஆதரித்தேன்.

அவர் பிரதமர் ஆனதும் என்னை கேபினட் மினிஸ்டர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதை சங்கர் தயாள் சர்மாதான் சொன்னார். அவருக்கு என் மேல் ரொம்ப பிரியம். 

பார்லிமன்ட்டில் கூட்டம் தொடங்கும் மதல் கேள்விக்கு முன்னர் அனைவரும் அமர்ந்தனர். அப்போது நான் எழுந்தேன். கேள்வி நேரம் கூடாது. எங்க மக்கள் கொல்லப்படுகிறார்கள் இந்திய ராணுவத்தால். சங்கர் தயாள் சர்மா முதல் நாளாக வந்ததும் விடுவிடுத்து போனார். காங்கிரஸ் காரர்கள் கேள்வியை நேரம் என சொன்னார்கள். 

எங்கள் வாழ்வே கேள்விகுறியாகிவிட்டது. எதற்கு கேள்வி நேரம். பல எம்பிக்கள் வந்து சமாதானம் செய்தனர். 15 நிமிடம் சபையை நடத்தவிடவில்லை. பின்னர் சபையை விட்டு வெளியேற்றப்பட்டேன். என் 24 ஆண்டு கால நாடாளுமன்ற வாழ்க்கையில் அன்றுதான் நான் வெளியேற்றப்பட்டேன்.

முத்தமிழறிஞர் என்று நான்தான் எழுதி சங்கர்தயாள் சர்மாவிடம் கொடுத்தேன். அதைதான் பாராட்டு விழாவில் அதை பேசினார். விபி சிங், மந்திரி பதவிதான் என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அரசு பதவி தருகிறேன் என்றதற்கு அதை மறுத்தவன். உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றேன்.

பின்னர் ஈழத்தில் போர் நடந்துகொண்டிருந்த போது ஆயுத லிஸ்ட் கொடுத்தேன். அப்போது விபி சிங் என் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்னால் ஆயுதம் கொடுக்க இயலாது. அப்படியென்றால் மருந்து கொடுங்கள் என்றேன். கண்டிப்பாக செய்கிறேன் என்றார் விபி சிங்.

விபி சிங் ஆட்சியின் போது இலங்கைக்கு மருந்து உதவி செய்ய இருந்ததை தடுத்தது திமுக என்றார். ஆதாரம் என்னிடம் உள்ளது.


நான் விடுதலைபுலிகள் இயக்கத்தின் அங்கம் என சொல்லி எனக்கு எந்த நாட்டிற்கும் விசா கொடுப்பதில்லை.

ரோடு போடவும், பாலம் கட்டவும் மந்திரி என்றால் அதை அனைவரும் செய்யலாம். ஆனால் ஒரு இனத்திற்கு என் வாழ்வு பயன்படுமானால் அதற்கு நான் பயன்படுவேன்.

தமிழனுக்கு ஒரு தேசம் அமைய என் உழைப்பும், பேச்சும் பயன்படுமானால் அதற்கு நான் பாடுபடுவேன். அந்த உறுதியோடு வந்தவர்கள்தான் அத்தனை மாவட்ட செயலாளர்களும் தோழர்களும்.

நானும் சயனைடு குப்பியை கழுத்தில் அணிந்தவன்தான். வைகோ சாதாரணமானவனல்ல. அவனும் விடுதலை புலிதான்.

சோனியாகாந்தி எழுதிய கடிதம்தான் என் வாழ்நாளில் தலை சிறந்தது என்று சொன்னவர் கருணாநிதி. ஆனால் எனக்கு தலைவர் பிரபாகரன் எழுதிய பாராட்டுதான் சிறந்தது. தனி மனித ஒழுக்கம் பிரபாகரனிடம்தான் இருந்தது. வேறெந்த தலைவர்களுக்கும் இல்லை.

மாவீரர்கள் நாள் என்பது உறுதி எடுத்துக்கொள்வதற்காக. பிரபாகரன் மகன் ஆண்டனி, மனைவி மதிவதினி, மகள் துவாரகா யுத்த களத்திலே மடிந்தனர். பிரபாகரன் தன் குடும்பத்தையே தமிழினத்திற்காக தியாகம் செய்திருக்கிறார்.

நாம் ஒரு லட்சம் இளைஞர்கள் தயாரானால் போதும். இந்த பொதுவாக்கெடுப்பு யோசனை நான் ஆழ்ந்து யோசனையில் பிரசல்ஸில் வைத்து வந்தது. 

நான் 3 தடவை ஆபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன். இது சுதந்திர தமிழீழ தேசம் அமைத்து காட்டுவதற்கு ைஇயற்கை அன்னை என்னை உயிரோடு வைத்திருப்பதாக கருதுகிறேன். மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்று சிறப்புரையாற்றினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

கழக முன்னணி நிர்வாகிகளான, ஆ.வந்தியத்தேவன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். தலைமை -சு.ஜீவன், தொகுப்புரை -ஆவடி அந்திரிதாஸ், நன்றியுரை- தென்றல் நிசார் பங்கேற்றோர். ஜி.தேவதாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டி.சி.இராசேந்திரன், கே.கழகுமார், ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், இ.வளையாபதி, முராத் புகாரி, கோ.நன்மாறன், கோமகன், நவநீதகிருஷ்ணன், மல்லிகா தயாளன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, November 26, 2016

ஈரோட்டில் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டில் வைகோ!

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை 62 ஐ குறிக்கும் வகையில் கேக் தயார் செய்யப்பட்டு, சிறுவர்களுடன் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை, வைகோ, கோவை ராமகிருஷ்னன், புகழேந்தி தன்கராசு உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்நதனர்.

இந்த நிகழ்வானது ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில், இன்று 26-11-20016 சனி கிழமை மாலை சத்தி ரோட்டில் உள்ள கணேஷ் மஹாலில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில், புகழேந்தி தங்கராசு அவர்கள் எழுதிய "விடுதலை முகவரி", "நெருப்பு பூச்சாண்டி" ஆகிய புத்தகங்களும் வைகோ அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் கியூபா விடுதலைக்கு வித்திட்ட இன உணர்வாளன் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வைகோவும், இராமகிருட்டிணனும் பிரபாகரனை பயன்படுத்தியவர்கள் அல்ல.  பயன் பட்டவர்கள் என இயக்குநர் புகழேந்தி தங்கராசு புகழாரம் சூடினார்.

தலைவர் வைகோ அவர்களும், ஈழ பயணம், மாவீரர்களின் தியாகம், விடுதலி புலிகளின் வீறுகொண்ட போராட்டம், கோவை ராமகிருஷ்ணன் ஆயுதம் வழங்கியது உள்ளிட்டவற்றை விளக்கி உரையாற்றினார்.

இதில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் என கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மற்ற தமிழீழ உணர்வாளர்களும் கலந்துகொண்டார்கள்.


நிகழ்வு தொடங்கும் முன், இணையதள அணி செயல்வீரர், நாமக்கல் ஈஸ்வரன் அவர்கள், தனது திருமண அழைப்பிதழை தலைவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.


ஓமன் மதிமுக இணையதள அணி