Monday, November 6, 2017

ஈழம் 87 ஓவிய நூல் வெளியீட்டில் வைகோ!

தமிழீழத்தின் வரலாற்று படங்களை நூலாக 4-11-2017 அன்று சென்னையில் வெளியிட்டார்கள். அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு நூலை பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய வைகோ அவர்கள், கேட்டலோனியா மக்களுக்கு இருந்த நம்பிக்கை, நமக்கு ஏன் இல்லாமல் போக வேண்டும்?

போராட்டம் வடிவங்கள் மாறினாலும், ஈழம் என்ற லட்சியம்தோற்காது. வெல்லும் என் உணர்ச்சி பொங்க பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, ஆரம்பத்திலிருந்தே நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் அவரது பாடல்கள் எல்லாம் பிடிக்கும்.

அதில் ஒரு பாடலில், மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று வரும். 

அந்த வரிகளுக்கு முழுதும் பொறுத்தமானவர் யார் என்றால் அது அண்ணன் வைகோ அவர்கள் தான்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான் வைத்திருந்த இரண்டு சயனைடு குப்பிகளில் ஒன்றை அண்ணன் வைகோ அவர்களுக்கு தந்தார் என்றால் இதை விட வேறு என்ன பெரிய விருது வேண்டும்.

ஈழக் கொள்கையால் அவர் அரசியலில் இழந்தது அதிகம். அவர் பாதை மாறியதாக சொல்கிறார்கள். தேர்தல் கூட்டணிகள் ஒரு தேர்தலுக்கான சமரசமே தவிர கொள்கைக்கானது அல்ல என நடிகர் திரு. சத்யராஜ் பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

1 comment:

  1. தங்களது பதிவுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete