Wednesday, June 3, 2020

தமிழர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள். வைகோவுக்கு, அயல்உறவுத் துறை விளக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு, இந்திய அயல் உறவுத் துறை அமை எழுதி உள்ள மின் அஞ்சல் விளக்கம்: 

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரக் கோரி. மே 31 அன்று, அயல்உறவுத்துறை அமைச்சருக்குத் தாங்கள் எழுதிய மின் அஞ்சல் கிடைக்கப் பெற்றோம். 

முதல் கட்டமாக இயக்கப்பட்ட வான் ஊர்திகளில், தமிழக அரசின் கோரிக்கையின் பேரில், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும் அழைத்து வரப்பட்டார்கள். ஆனால், இரண்டாவது கட்டத்தில், தமிழ்நாட்டுக்கு வான் ஊர்திகள் எதுவும் இல்லை. 

எனவே, தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு, கொழும்பு, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரைக்கு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஜூன் முதல் வாரத்தில் இருந்து அழைத்து வரப்படுவார்கள்.  

அத்துடன், கப்பல் மூலமாகவும் தமிழர்களை அழைத்து வருகின்றோம். அதன்படி, இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ஜலசவா என்ற கப்பலில், இலங்கையில் இருந்து 685 தமிழர்கள், நேற்று தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். 

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியத் தொழிலாளர்களைத் தமிழகம் அழைத்து வருவதற்காக, நடுவண் அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என் மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 03-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment