Saturday, October 31, 2020

தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம். வைகோ அறிக்கை!


நவம்பர் 1 ஆம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’. 1956 நவம்பர் முதல் நாள் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது.


நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 இல் ‘தார்’ ஆணையம், அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது அவசியமில்லை என அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.


இந்தப் பரிந்துரை அறிக்கையை காங்கிரஸ் கட்சி சார்பில் வல்லபாய் படேல், பண்டித நேரு, பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட ‘ஜே.வி.பி’ குழு ஆய்வு செய்து, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதைக் கிடப்பில் போட்டுவிட்டது.


ஆந்திர மாநிலம் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வேன் என்று பொட்டி ஸ்ரீராமுலு  அறிவித்து, 1952 அக்டோபரில் போராட்டத்தைத் தொடங்கி, 58 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, 1952 டிசம்பர் 16 இல் உயிர் துறந்தார். இதனால் பற்றி எரிந்த மொழிக் கனல் பிரதமர் பண்டித நேரு அவர்களை உலுக்கியதால், ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலம் 1.10.1953 இல் மலர்ந்தது.


ஆந்திராவைப் போலவே பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்களாக உருவாகக் குரல் எழுப்பியவுடன், பசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை இந்திய அரசு அமைத்தது. இக்குழு 1955, செப்டம்பரில் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1ஆம் நாள் முதன் முதலில் 14 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.


சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன்  இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.


மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போதே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.


கேரளாவிடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளையும், கர்நாடகாவிடம் ‘வெங்காலூர்’ என்னும் பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்றவற்றையும் இழந்தோம்.


தமிழர்களின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு இணைத்துவிட்டதால், நதிநீர் சிக்கல்கள் அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடருகின்றன.


தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் அமைப்பதை எதிர்த்துக் குரல் எழுப்பியவர் தந்தை பெரியார். பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் பெரியாரின் கோரிக்கையை ஆதரித்தார்.


மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைப்பதற்குப் போராடிய தலைவர்கள் முறையே மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சென்னை மாகாண பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை தமிழ்நாடு நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.


1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்து ராஷ்டிரா எனும் ஒற்றை தேசமாக இந்த நாடு உருவாக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தொடக்கம் முதலே கூப்பாடு போட்டு வந்தன.


மத்தியில் பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைந்தவுடன் இந்தியாவை ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு முனைந்துள்ளது.


பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகாரங்களைப் பறித்து, இந்து ராஷ்டிரம் எனும் கனவை நனவாக்கத் துடிக்கும் இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்துவோம்.


நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்.


தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

31.10.2020

Friday, October 30, 2020

ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவித்திடுக! ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்கள், தொடரித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எழுதி இருக்கின்ற கடிதம்:


ரயில்வே வேலை வாய்ப்பு வாரியம் (சுயடைறயல சுநஉசரவைஅநவே க்ஷடியசன) 2018 ஆம் ஆண்டு, இணையவழியில் தேர்வு நடத்தி, துப்புரவுத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியது. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு, தொடர்ந்து அவர்கள் வேலை செய்து வருகின்றார்கள். 


கொரோனா தொற்றுக் காலத்தில், அவர்கள் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில், முழுநேரம் பணி ஆற்றி இருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவியாக இயங்கினார்கள். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உடை மாற்றுவது, கழிப்பு அறைகளுக்கு அழைத்துச் செல்வது, இறந்தவர்களின் உடல்களை வீடு கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளையும் செய்தார்கள். ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகள், அலுவலகங்களிலும் துப்புரவுப் பணி செய்து இருக்கின்றார்கள். மனைவி, பிள்ளைகளுக்குத் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவிய சூழலில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி ஆற்றி இருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பங்கள், தொடரித்துறையை நம்பித்தான் இருக்கின்றனர். அவர்களுடைய பணி, தொடரித்துறைக்கு முழுநேரமும் தேவைப்படுகின்றது.


எனவே, அவர்களை தொடரித்துறையின் முழுநேரப் பணியாளர்களாக அறிவித்திடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

30.10.2020

Thursday, October 29, 2020

மீலாது விழா - வைகோ வாழ்த்து!

மனித குல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கி, யுத்தகளத்திலும் வாள் ஏந்தி,  போற்றுதலுக்குரிய இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தில் நிலைநாட்டிய, நானிலம் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவை, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் உவகையுடன் கொண்டாடும் திருநாள்தான் மீலாது நாள் ஆகும். 


அண்ணலார் அவர்கள் ஏற்றுக்கொண்ட ஏக இறைக் கொள்கையைக் கைவிடக் கூறிய குறைஷிகள், நபிகளாரிடம் எது வேண்டுமானாலும் தருகிறோம்; அள்ளக் குறையாத செல்வங்கள், திராட்சைத் தோட்டங்கள், ஓங்கிய மலைகள், எண்ணற்ற ஒட்டகங்கள் அத்தனையும் தருகிறோம் என்றார்கள். 


எனது வலது கரத்தில் சூரியனையும், இடது கரத்தில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன்  என்ற இலட்சிய உறுதியுடன் போராடி, அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்ட மாமனிதர் நபிகள் நாயகம், மண்ணின் வரமாய், பொன்னின் மணியாய் உலகோருக்கு உன்னத மார்க்கத்தைப் போதித்தார். 


நாம் அனைவருமே சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று அரபாத் பெருவெளியில் முழங்கி, அழகிய முன்மாதிரி என அவனியோர் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளாம் இப்பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நெஞ்சினிக்கும் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை – 8

29.10.2020

Wednesday, October 28, 2020

எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்குக. வைகோ வேண்டுகோள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குழுவில், சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக, நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. 


இவர், கார் நிறுத்த இடப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டுச் சுவரில் மூத்திரம் பெய்து அடாவடி செய்ததாக, சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகின; 62 வயதுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர் மீது, காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


இவ்வாறு பண்பாடு அற்ற முறையில் நடந்துகொண்ட இவரை, இயக்குநர் குழுவில் இடம் பெறச் செய்து இருப்பது, எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கின்ற செயல் ஆகும்.


இவர், ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்; பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும், சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு வந்து திணித்து வருகின்றது. அவர்களும், முடிந்த அளவுக்கு அந்த அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றார்கள்.


மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்துகின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

28.10.2020

Tuesday, October 27, 2020

இலங்கைக் கடற்படைத் தாக்குதல் வைகோ கண்டனம்!

மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற இராமேÞவரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படைப் படகுகளில் இருந்து கற்களை வீசித் தாக்கி இருக்கின்றனர். ஒரு மீனவர் மண்டை உடைந்தது; பலர் இரத்தக் காயம் அடைந்துள்ளனர். மீன்பிடிப்பதற்காகத் தமிழக மீனவர்கள் விரித்து இருந்த நூற்றுக்கணக்கான மீன் வலைகளையும், இலங்கைக் கடற்படையினர் அறுத்து எறிந்து உள்ளனர்.


இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்; படகுகளைப் பறிமுதல் செய்தனர்;  பெருந்தொகையை தண்டமாக வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.


அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால்கூட, உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த்தாக்குதல் தொடுத்து விடும். ஆனால், தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது. இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்ததும் இல்லை.


இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை, இந்திய அரசு கண்டு கொள்வது இல்லை.  தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


 வைகோ

 பொதுச் செயலாளர்,

 மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

27.10.2020

Monday, October 26, 2020

இடஒதுக்கீடு பறிப்புக்கு வைகோ கண்டனம்!

மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். 


இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

26.10.2020

Saturday, October 24, 2020

மருது சகோதரர்கள் 219 நினைவுநாள் - வைகோ வீரவணக்கம்!

24.10.2020 மருது சகோதரர்களின் 219 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, தலைமைக் கழகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருது சகோதரர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.


துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், மா.வை.மகேந்திரன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், இலக்கிய அணி மாநிலப் பொருளாளர் கண்ணன், பகுதிச் செயலாளர்கள் தென்றல் நிசார், சு.செல்வபாண்டியன், ஜி.ஆர்.பி. ஞானம், வேலு, அழகேசன், ஜெகன், கிரி, சின்னவன், அ.சுரேஷ், இளவழகன், பீடா ரவி, காட்வின் அஜூ, முகவை இரா.சங்கர், ஜானகிராமன், வேதநாயகம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

திருமா வளவன் மீது வழக்கு; திரும்பப் பெறுங்கள்! வைகோ வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அருமைச் சகோதரர் திருமா வளவன் அவர்கள், பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார் அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர். 

உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. 


அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மீது, ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். 


திருமா வளவன் மீது பதிவு செய்த வழக்குகளை, காவல்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

24.10.2020

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை பாஜக அரசு திட்டவட்ட அறிவிப்பு - வைகோ கடும் கண்டனம்!

நடுவண் அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு  (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது; அடிப்படை வசதிகளைச் செய்கின்றது.


இதில், கணக்கர்கள், எழுத்தர்கள், கணிணிப் பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் 13000 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை, கடந்த அக்டோபர் 7 ஆம் நாள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.


விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 வரை என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஒரு தேதியைக் குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடு ஆகும்.


இந்தப் பணி இடங்களுக்குத் தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்தாக வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். வழக்கமாக நடுவண் அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். ஆனால், இந்த அறிவிப்பில், முதன்முறையாக, 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இந்தியில் மட்டுமே இருக்கும். அதற்கு இந்தியில்தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள்.


இந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என, வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள்.


இந்த அறிவிப்பின் பத்தாம் பக்கத்தில், பாரா 18 இல் குறிப்பிட்டுள்ளதாவது.


கணக்காளர், எழுத்தர்கள், கணினிப் பதிவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் 40 மதிப்பு பெண்கள் இந்தித் தேர்வு எழுத வேண்டும். பன்னோக்குப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநர்கள் இந்தித் தேர்வில் 25 மதிப்பு எண்கள் பெற வேண்டும். செவிலியர்கள் 10 மதிப்பு எண் பெற்றாக வேண்டும்.


அதாவது, எனவே, இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை; வேலைவாய்ப்பும் கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும், இந்திக்காரர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் தேர்வு.


இத்தகைய கேடுகெட்ட அறிவிப்பை, நடுவண் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

24.10.2020

Thursday, October 22, 2020

தலைமைக் கழகச் செய்திக் குறிப்பு!

தென்காசி மாவட்டம், மலையடிக்குறிச்சி மற்றும் களப்பாகுளம் கிராமங்களைச் சேர்ந்த கே.வீரபாண்டியன், பி.கருத்தப்பாண்டி, வி.முருகன் மற்றொரு கருத்தப்பாண்டி ஆகிய நான்கு பேரும் குடும்ப வறுமை காரணமாக பொருள் ஈட்டுவதற்காக கடந்த பிப்ரவரி 2020 இல் சௌதி அரேபியா நாட்டிற்குச் சென்றனர். 


தங்களைப் பணி அமர்த்திய நிறுவனம் முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே ஊதியம் கொடுத்தது; அடுத்த ஐந்தாறு மாதங்களாக ஊதியம் தரவில்லை; கொரோனா தொற்று காரணமாக ஊதியமோ, வேலைவாய்ப்போ, உணவு மற்றும் தங்கும் இட வசதியோ ஏற்படுத்தித் தர இயலாது என கைவிரித்து விட்டது; எனவே, தாங்கள் நாடு திரும்ப உதவுமாறு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்களுக்கு, கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.


வைகோ எம்.பி., அவர்கள், வளைகுடா கழகப் பொறுப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபுவைத் தொடர்புகொண்டு, நால்வரையும் பத்திரமாகப் பாதுகாத்து, அவர்கள் தாயகம் திரும்ப தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். 


வைகோ அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சௌதியில் இயங்கும் ஜெத்தா தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.எஸ். ஜாகீர் உசேன், சௌதி அல்-கோ பார் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர் ரஹமத்துல்லா ஆகியோர் விரைந்து செயல்பட்டு, அவர்கள் வேலை செய்த நிறுவனத்திற்கு இடைவிடாது கொடுத்த அழுத்தம் காரணமாக, வெளியேற்ற அனுமதி ஆணையை (நுஒவை ஏளைய) பெற்றுத் தந்தனர்.


அதைத் தொடர்ந்து, நான்கு பேரும் 19.10.2020 அன்று, திருவனந்தபுரம் வழியாக தங்கள் ஊருக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். தங்களை மீட்க உதவிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தென்காசி மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

22.10.2020

Wednesday, October 21, 2020

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகோ அறிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 01.12.2017 நள்ளிரவு இடிந்து விழுந்தது.

இப்பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் எழுந்த புகாரின் பேரில் அன்றைய திருநெல்வேலி புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் 02.12.2017 காலை பாலத்தைப் பார்வையிட்டார்.

ஏராளமான பொதுமக்கள் முறையிட்டதன் பேரில் அன்று மாலையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இப்பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தினார்.

*05.12.2017* அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் வழக்கு தாக்கல் செய்து, நடுவத்தின் ஆணைக்கு இணங்க 26.03.2018 அன்று நேரில் ஆஜராகி, பாலம் இடிந்ததற்கான காரணங்களை விளக்கி வாக்குமூலம் அளித்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் பல அலுவலர்கள் ஆணையத்தில் ஆஜராகி, அப்போது குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலால், நம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்தது என்று பதிலுரை தந்தனர்.

குமரி மாவட்டத்தைத் தாக்கிய புயல், நெல்லை மாவட்டத்தின் எந்தப் பகுதியையும் தாக்கவில்லை என்றும், நம்பி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படவில்லை என்றும், தரம் குறைவாகக் கட்டப்பட்டதன் விளைவாகவே இந்தப் பாலம் உடைந்து விழுந்தது என்றும், உண்மை நிலையை அறிய நேர்மையான உயர் தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறும் மனுதாரர் (தி.மு.இராசேந்திரன்) வலியுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட நடுவம், இது போன்ற நிகழ்வில் முதல் முறையாக கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டிடவியல் மற்றும் வடிவமைப்பு துறைத் தலைவர் டாக்டர் ஆர்.செந்தில், அதே துறையின் மண் வளம் மற்றும் அடித்தளம் கட்டுமானம் குறித்த பிரிவின் பேராசிரியர் டாக்டர் வி.கே.ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.

இக்குழுவினர் 21.09.2019 அன்று பாலம் இடிந்த பகுதியை நேரடியாகப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, 30.09.2019 அன்று தங்கள் ஆய்வு அறிக்கையை நடுவத்திற்கு வழங்கினார்கள்.

அந்த ஆய்வறிக்கையில், பாலத்தின் அடித்தள விபரமே தங்களிடம் இல்லை என்று பேரூராட்சி நிர்வாகம் மறைத்துவிட்டதாகவும், பாலத்தின் கட்டமைப்பு, வடிவமைப்பு விபரங்களை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது தரவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப ஆவணங்களின்படி பாலக் கண் அளவுகள் (Span) மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதும், பாலத்தைக் கட்டும்போது பக்கவாட்டில் ஏற்படும் உதைப்பு (Lateral thrust) கணக்கிடப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், பாலம் கட்டப்பட்ட இடமே சரியில்லை  என்றும், குறுகிய காலத்தில் சரியான முறையில் நனைப்பு (curing) செய்யப்படவில்லை என்றும், அதன் காரணமாக கான்கிரீட் சரியான உறுதித் தன்மையைப் பெற வாய்ப்பு இல்லை எனவும், இதுவே பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

அந்த ஆய்வு அறிக்கையின் மீது, மனுதாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் கருத்துகளை ஆணையம் மீண்டும் கோரியது. வல்லுனர் குழு ஆய்வு அறிக்கையின்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று 22.11.2019 அன்று தமது வாக்குமூலத்தில் மனுதாரர் கேட்டுக்கொண்டார். பேரூராட்சி நிர்வாகம், சொன்னதையே திரும்பச் சொன்னதே தவிர,  பாலம் இடிந்து விழுந்ததற்கு வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏற்கத்தக்க பதிலைத் தெரிவிக்கத் தவறிவிட்டதாக முறைமன்ற நடுவம் முடிவு செய்து, அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்பக் குழு தந்த அறிக்கையில் தெரிவித்துள்ள குறைபாடுகளே பாலம் இடிந்ததற்கான காரணமாகும் என்பதை உறுதி செய்ததோடு, இந்தக் குறைபாடுகளுக்குக் காரணமான அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பேரூராட்சிகளின் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

இடிந்து விழுந்த பாலத்திற்குப் பதிலாக மாற்றுப் பாலம் கட்டுவதாக அரசுத் தரப்புச் சொன்னதே தவிர, 55 இலட்ச ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம் 10 மாத காலத்தில் எப்படி இடிந்து விழுந்தது என்பதற்கு பதில் ஏதும் இல்லை. இது பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரசு கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவோர் விழிப்பாக இருந்து, கவனமாகக் கடமையாற்றிடவில்லை எனில் பாதிக்கப்பட நேரிடும் என்கிற எச்சரிக்கையையும் இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிதது தீர்ப்பு அளிக்க அரசியல் அமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம், நடுநிலை தவறாமல் நியாயத்தின் பக்கம் நின்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன்.

55 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து, பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்.

எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், பொதுநல நோக்கோடு வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற இன்றைய தென்காசி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் மற்றும் அவருடன் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்ட கழகக் கண்மணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.10.2020

தலைமைக் கழக செய்திக் குறிப்பு!

கோவில்பட்டி சிந்தலக்கரையைச் சேர்ந்த சுரேஷ் (த/பெ வேலப்பன்) சிங்கப்பூரில் இயற்கை எய்தினார். அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வந்து சேர்க்கக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின் அஞ்சல் எழுதியதுடன், அமைச்சரின் செயலகத்தைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இன்று அமைச்சம் அனுப்பி உள்ள விளக்க மின் அஞ்சலில், சுரேஷ் உடல் தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கின்றது; சிங்கப்பூரில் உள்ள அவரது உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேசினோம்; சுரேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்திடம் அவரது உடல் நாளை (21.10.2020) அளிக்கப்படும்; அதன்பிறகு, இந்தியா கொண்டு வருவதற்கான தடை இல்லாச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்து உள்ளனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
20.10.2020

தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்!

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக ஆளுநருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுதிய கடிதம் வருமாறு:-

மேதகு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு என்பது வேதனை அளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நீதியரசர் கலையரசன் ஆணையம் கடந்த 08.06.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. இதனையடுத்து தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவு எடுத்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் நலன், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர், மாற்றுத் திறனாளிகள் நலன், வனம், சமூகப் பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மற்றும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று, பின்னர் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும்,

மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும்,

மேலும் மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசு கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 8,41,251 மாணவர்களில் சுமார் 41 விழுக்காடு மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் பயில்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைக்கிறது. இது சமூக சமநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பு ஆண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது.

இதனைக் கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநராகிய தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

அன்புள்ள

(வைகோ)
ஒப்பம்
இந்திய நாடாளுமன்ற
மாநிலங்கள் அவை உறுப்பினர்

Tuesday, October 20, 2020

முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூறிய வைகோ எம்பி!

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சில தினங்களுக்கு முன் மறைந்தார்.

இன்று 20-10-2020 சென்னை ராஜ அண்ணாமலைப் புரம் கிரின்வேஷ் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் அரசு இல்லத்தில்  முதல்வரின் தாயார் நினைவில் வாழும் திருமதி தவுசயம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள்.
முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் இருந்தனர்.

Saturday, October 17, 2020

மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் மறைவு! வைகோ இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மா.சுப்பிரமணியன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, தனது துக்கத்தையும், வேதனையையும் தெரிவித்து இரங்கல் கூறினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
17.10.2020

Friday, October 16, 2020

அருணகிரி ‌அவர்களின் தாயார் மங்கையர்கரசி பழநிசாமி மறைவிற்கு மதிமுகவினர் மலர் மாலை மரியாதை!

1965 களில் திராவிட முன்னேற்ற கழகத்தை தென் பாண்டி மண்டலத்தில் வேரூன்ற வைத்த தலைவர் வைகோ அவர்களுக்கு நம்பிக்கையாகவும் வலது கரமாகவும்  சங்கரன்கோவில் நகர மன்றத்தின் தந்தையாகவும் இருந்து வந்த திரு பழனிச்சாமி பி.காம், அவர்களின் மனைவியும், எம் லட்சிய தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ M.P அவர்களுடைய தனி செயலர் அருணகிரி அவர்களின் தாயாரும் ஆகிய பெருவாழ்வு வாழ்ந்த திருமதி
மங்கையர்கரசி பழநிசாமி (86) அவர்கள் 15-10-2020 அன்று இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் நகரம், வடகாசி அம்மன் கோவில் தெருவில் உள்ள அன்னார் இல்லத்தில் வைத்து  15-10-2020 நடைபெற்றது.

மறைவு செய்தி கேட்டு தலைவர் வைகோ அவர்களுடைய சகோதரர் ரவிச்சந்திரன் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். 

உடன் மாநகர் மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணாச்சி உவரி டைமண்ட் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.ரமேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ப.கல்லத்தியான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், தலைவரின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சுதாபாலசுப்ரமணியன், உள்ளிட்ட நிர்வாகிகளும் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மாநில மாணவர் அணி துணை செயலாளர் முகவை.இரா.சங்கர், தலைவர் வைகோ அவர்களின் நிழற்படக் கலைஞர் போட்டோ ராஜா, கழகத்தின் வெளியீட்டு மாநில துணைச்செயலாளர் விக்டர் எபினேசர், கழகத்தின் குறுந்தட்டு விற்பனையாளர் அக்பர் அலி, மற்றும் நடுவை சொ. முருகன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று, தென்காசி மாவட்ட மறுமலர்ச்சி
 திமுக சார்பில் தி.மு.இராசேந்திரன்  அவர்கள் மாலை சூட்டி புகழ் வணக்கம் செலுத்தினார். அவருடன் நகரச்செயலாளர் ச.ஆறுமுகச்சாமி, இரத்னகுமார், அரங்கநாதன், பூக்கடை பொன்னுசாமி, ஆட்டோ தொழிற்சங்க தலைவர் நைனார் முகம்மது, ச.இலட்சுமி நாராயணன், முப்பிடாதி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளில் மதிமுகவினர் புகழஞ்சலி!

16.10.2020 இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள   மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில், வாழும் கட்டபொம்மன் மதிப்புமிகு மக்கள் தலைவர் வைகோ எம்பி  அவர்கள் சார்பில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.இரமேஷ், புதுக்கோட்டை செல்வம், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.கவினர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிருவாகிகள் உள்ளிட்ட மதிமுகவினர் நூற்றுக்கணக்கில் சீரான சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் விநாயக ராமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.

Thursday, October 15, 2020

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க. வைகோ அறிக்கை!

தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன எங்கள் இரத்த உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று தமிழ் ஈழத் தாய்மார்கள் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது, அதை நாடகம் என்று இகழ்ந்து பேசியவர்தான் முரளிதரன். பிறப்பால் தமிழனாகவும், வளர்ப்பால் சிங்களவன் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிப்போன முத்தையா முரளிதரன் வாழ்க்கையைத் திரைப்படமாக்க சிங்கள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் முயற்சி எடுத்து, அந்தப் படத்திற்கு ‘800’ என்று பெயர் சூட்டி இருக்கின்றது.

தமிழினத்தின் துரோகி என்று உலகத் தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் முரளிதரனாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த திரைக் கலைஞர் என்ற பெயரை எடுத்துள்ள விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது.

ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இரத்தத் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாகி கதறி அழுதபோது பரிகாசம் செய்த இனத் துரோகி முத்தையா முரளிதரனாக திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடக்கூடாது. எனவே ‘800’ திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
15.10.2020

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு: நடப்பு ஆண்டில் வழங்க மத்திய அரசு மறுப்பு! வைகோ கண்டனம்!

மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 42842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு சமூக நீதியைச் சவக் குழியில் தள்ளி விட்டது.

இந்நிலையில்தான் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுததப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற்த்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று காரணம் கூறி உள்ள பா.ஜ.க. அரசு, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்  சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது.

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பா.ஜ.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே நடப்பு ஆண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.10.2020

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு! வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார்.

இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். சகித்துக் கொள்ள முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நடுவண் அமைச்சர்கள்  இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதைக் காட்டுகின்றது. 

எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம்; நாங்கள் சொல்வதைத்தான் தமிழர்கள் கேட்க வேண்டும்; நாங்கள் எழுதுவதைத்தான் தமிழர்கள் படிக்க வேண்டும் என்கின்ற இந்தி ஆதிக்க வெறி மனப்பான்மை, இந்தியாவைக் கூறுபோட்டு விடும் என்பதை, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிச்சாமி, அமித் ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இல்லையேல், இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழக முதல் அமைச்சரின் கடமை.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.10.2020

Wednesday, October 14, 2020

நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பு வேண்டுகோளும், எச்சரிக்கையும்!

2009 ல்‌ தமிழீழம் மக்கள் சிங்கள வெறியர்களால் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டு இனப்படுகொலை செய்த  அன்று, இன்றைக்குதான் நான் நிம்மதியாக் தூங்குவேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான நாள் என்று துரோகம் உரைத்தவன் முரளிதரன்.

இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா என புகழ்ந்து, நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை கொச்சைப்படுத்தியவன் இந்த தமிழின துரோகி முரளிதரன்.

தமிழீழ இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்ட 20000 இளைஞர்களுக்காக அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களை மீட்க  போராடுகின்றவர்களை நாடகமாடுகிறார்கள் என கொச்சைப்படுத்தியவன் இந்த துரோகி முரளிதரன்.

லண்டனில் ஒரு நிகழ்வில், தமிழ் மக்களிடையே ஒருமுறை தமிழில் பேசுங்கள் என‌ கேட்டபோது தமிழ் தெரியாது என தாய்மொழிக்கு துரோகம் செய்தன் தமிழின‌ துரோகி முரளிதரன்.

அந்த தமிழின துரோகி முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க, சிங்களவன் கொடி பொறித்த ஆடை அணிந்து அவர்களுக்கு சேவகம் புரிவது போல, தமிழின பற்றாளனாக இருக்கும் சகோதரர் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்புடையதல்ல.

அந்த‌ படத்திலிருந்து விலகி, வருத்தம் தெரிவித்து, பச்சை தமிழனாக வலம் வர வேண்டுமென கேட்கிறேன்.

இனதுரோகிகளுடன் உறவாடி தமிழின துரோகி வரிசையில் இடம்பெற கூடாது எனவும் அன்பு வேண்டுகோள் வைப்பதோடு, சிங்களவனுடன் உறவு தொடருமானால் தமிழ் மக்கள் சினத்திற்கு சின்னாபின்னமாக நேரிடும் என்பதையும் எச்சரிக்கையோடு தெரிவித்துகொள்கிறேன்.


மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
14-10-2020
#VijaySethupathi

மருத்துவப் படிப்புக்கான ஓ.பி.சி. இடஒதுக்கீடு; தமிழக அரசின் அலட்சியப் போக்கு! வைகோ கண்டனம்!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக மறுத்து வருகின்றது. அதனைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரி தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 15 விழுக்காடு இடங்களையும், முதுகலைப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும்போது, அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்பலாம் என்று மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தொகுப்புகளிலிருந்து வழங்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீட்டை வழங்காததால், கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் 395 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 425 இடங்களும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குப் பறிபோயின.

இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதுபற்றிய சட்ட வரையறைகளை மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்கான சிறப்புக் குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரொஸ்தகி அமர்வில் காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர்கள் நடப்பு ஆண்டிலேயே 50 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர்.

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த இடஒதுக்கீடு தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு, கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஆலோசனை நடத்தியது. அதில், ஓ.பி.சி. மட்டுமின்றி, எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீடு பற்றியும் பேசப்பட்டது. இதில் தமிழக அரசின் பிரதிநிதியும் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில், இடஒதுக்கீட்டை 2021 ஆம் ஆண்டு செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டதே தவிர, நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்துவது பற்றி எதுவும் பேசவில்லை. தமிழக பிரதிநிதியும் எங்களிடம் இதுபற்றி ஆலோசிக்கவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழக அரசு ஒருபுறம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, மற்றொருபுறம் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நியிமித்த குழுவில் வலியுறுத்தாதது ஏன்? கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்த கருத்து உண்மை எனில், தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டது கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை படிப்புக்கு 3650 இடங்களும், மேற்படிப்புக்கு 1758 இடங்களும் உள்ளன. இவற்றிலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 50 விழுக்காடு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.10.2020

Tuesday, October 13, 2020

முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு வைகோ இரங்கல்!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் இயற்கை எய்திய செய்தி அறிந்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், முதலமைச்சர் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு, கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.10.2020

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக. வைகோ அறிக்கை!

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே, தமிழகத்தில் கல்வியாளர்கள் எவரும் துணைவேந்தர் பொறுப்புக்கு தகுதியானவர்கள் இல்லையா? என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

துணைவேந்தர் பொறுப்பை ஏற்ற பின்னர் சூரப்பாவின் செயல்பாடுகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. மத்திய அரசின் நேரடி முகவர் போன்றுதான் அவரது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் தத்துவவியல் படிப்பு சேர்க்கப்பட்டு, அதில் பகவத் கீதை, சமஸ்கிருதப் பாடங்கள் இடம்பெற துணைவேந்தர் சூரப்பா ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததும் பகவத் கீதை, சமஸ்கிருதம் கட்டாயம் அல்ல, விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என்று பின்வாங்கினார். பொறியியல் பட்டப் படிப்புக்கு பகவத் கீதையும் சமஸ்கிருதமும் எதற்கு? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பை அளிப்பதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வந்தது. இருப்பினும் ‘உயர் சிறப்பு நிறுவனம்’ என்ற சிறப்புரிமை பெறும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் வழங்கும் என்றும், மாநில அரசின் பங்காக 500 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு நிபந்தனை விதித்தது. தமிழக அரசு நிதித் தட்டுப்பாட்டில் இருப்பதால், இது குறித்து முடிவு எடுக்க முடியாமல் இருந்தபோது, கடந்த மே மாதம் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தமிழக முதல்வரைச் சந்தித்தார்.

அப்போது பல்கலைக் கழகம் நிதி அடிப்படையில் வலுவான நிலையில் இருப்பதாகவும், மாநில அரசை சார்ந்திராமல் 500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று முதல்வரிடம் கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்புரிமையைப் பெறுவது குறித்து முடிவு எடுக்க அமைச்சர் குழு ஒன்றை முதலமைச்சர் அமைத்திருந்தார். அக்குழு கொரோனா பேரிடர் காலத்தில் கூடி முடிவு எடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.

இச்சூழலில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு நேரடியாக எழுதி உள்ள கடிதத்தில், பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டணம், இணைப்புக் கட்டணம்உள்ளிட்ட உள்வளங்களில் இருந்து வரும் வருவாய் மூலம் மாநில அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைப் பெற முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே, தமிழக அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தையும், அதிகாரம் அளிக்கும் குழுவின் பரிந்துரையையும் சுட்டிக்காட்டி, நிதிநிலை உத்தரவாதத்தைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மாநில அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசின் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாகக் கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தர் சூரப்பாவிற்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற எடப்பாடி பழனிச்hமி அரசு திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்தால், அதன் உலகப் புகழ் பெற்ற தனித்தன்மை பறிபோய்விடும் என்று கல்வியாளர்கள், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் கருத்தை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக் கழகத்தின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கைக்குக் குந்தகம் நேர்ந்துவிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.10.2020

Monday, October 12, 2020

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்!

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் என்ற இளைஞர், இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவரது அடையாள எண் 2621258டு.

அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கின்ற ஒருவர், இரண்டு நாள்களுக்கு முன்பு, அலைபேசியில் தகவல் கூறி இருக்கின்றார். அதன்பிறகு, அந்த அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தியப் படையில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவரது தாயார் அழகாத்தாள், இதுகுறித்து எனக்கு எழுதி இருக்கின்ற கோரிக்கை விண்ணப்பத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.  

முல்லைராஜ் இருப்பு உடல்நிலை குறித்து விசாரித்து, உரிய தகவல் கிடைக்க உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ தமது மின் அஞ்சல் கடிதத்தில் கேட்டுக்கொண்டு இருக்கின்றார். பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
சென்னை - 8
‘தாயகம்’
12.10.2020

Saturday, October 10, 2020

விவசாயிகள் பயிர்க்கடன் பெற கூட்டுறவு சங்கங்கள் அலைக்கழிப்பதா? வைகோ கண்டனம்!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பயிர்க்கடன், நகைக் கடன், பண்ணை சாராக் கடன், சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், சிறு வணிகக் கடன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டுக் கடன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல பொருளாதார மேம்பாட்டுக் கழகக் கடன் போன்றவற்றை வழங்கி வருகின்றன.

மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து, நாடு முழுமையும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 16, 2020 அன்று வங்கி ஒழுங்குமுறை (திருத்தச்) சட்ட முன் வரைவு -2020 நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று சட்டம் ஆக்கப்பட்டது.

இதன்படி, இந்தியா முழுவதும் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிட்டன. தமிழகத்தில் மாநில அரசின் கூட்டுறவுப் பதிவாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த 128 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு விட்டன.

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் வளர்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதைத் தங்கள் அடிப்படைக் குறிக்கோளாகவும், முதன்மை வணிகமாகவும் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு, வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் பொருந்தாது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்றுவரும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கடன் பெறுவதற்கு, மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் இணையான கணக்கு (Parallal Account) தொடங்க வேண்டும், “மிர்ரர் அக்கவுண்ட” (Mirror Account) எனப்படும் இணையான கணக்கு மத்தியக் கூட்டுறவு வங்கி அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் இருந்தால்தான், பயிர்க்கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்டவற்றைப் பெற முடியும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் இதனை ஏற்று கடந்த ஆகஸ்ட் 1 இல் புதிய நடைமுறையைச் செயல்படுத்த அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.

பயிர்க்கடன் பெற்ற கூட்டுறவுச் சங்கங்களில் அவ்வப்போது விவசாயிகள் கடனைப் புதுப்பிப்பதும், நிலத்தின் சிட்டா, அடங்கல், தடையில்லாச் சான்று ஆகியவற்றை வழங்கி, கடனை முழுமையாகச் செலுத்தாமல், பகுதி அளவில் செலுத்திப் புதுப்பித்தும், கூடுதல் கடன் பெற்று வந்தனர்.

இதனால் கூட்டுறவுச் சங்கங்களில் தவணை கடந்த கடன்தொகைகுறைவாக இருந்து வந்தது.

தற்போது மத்திய அரசின் அறிவிப்பால், நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறையின்படி வாங்கிய முழுக் கடனையும் தங்கள் பகுதி கூட்டுறவு சங்கங்களில் செலுத்திவிட்டு, மீண்டும் கடன் வேண்டுவோர் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ‘மிர்ரர் அக்கவுண்ட்டில்’ பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது விவசாயிகளையும், கூட்டுறவுக் கடனை நம்பி உள்ள ஏழை, எளிய மக்களையும் கவலை அடையச் செய்து இருக்கின்றது.

புதிய நடைமுறையால் வாங்கிய முழுக் கடனையும் செலுத்த முடியாமலும், கூடுதல் கடன் பெற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கொரோனா பேரிடரால் நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தினால்தான், புதிய பயிர்க் கடன் பெற முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு இருப்பது விவசாயிகளை வேதனைப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

நகைக் கடன் வேண்டுவோர், கிராம கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து அதற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு போய் நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் விவசாயிகளை அலைக்கழிப்பது ஆகும்.

சம்பா பயிர் சாகுபடி தொடங்கி உள்ள நேரத்தில், விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமல் தவிப்பதும், நடைக்கடன் கூட உடனடியாகக் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதற்கு பழைய நடைமுறையையே பின்பற்ற, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.10.2020

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அக்டோபர் 10 - சூளுரை நாள்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியக் கனவுகளை நனவாக்க, தியாக நெருப்புக்குத் தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்த 
நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு,

பொதுச்செயலாளர் - மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில்

10.10.2020 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது.

எனவே, கழக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் 
கலந்துகொண்டு உயிர்க்கொடை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். வாரீர்! வாரீர்!!

கரும்பு விவசாயிகளுக்கு உதவிட திவால் சட்ட விதிமுறைகளைத் திருத்துக! வைகோ அறிக்கை!

கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1834 கோடி ஆகும். தமிழக அரசு இந்நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக்கோரி  கரும்பு விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு  இடங்களில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழக அரசு விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்காமல், அலட்சியப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் - கும்பகோணம் அருகே திருமண்டங்குடி மற்றும் கோட்டூரில் இயங்கி வந்த திருஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த ஆண்டு திவால் நோட்டீசு அளித்துவிட்டது. கடலூர், தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உற்பத்தியாகும் கரும்பை இந்த ஆலை கொள்முதல் செய்து வந்தது.

விவசாயிகளுக்கு தெரியாமல், அவர்கள் பெயரில் ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 350 கோடி ரூபாய் கடன் பெற்று, சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்ததாகவும், கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இந்நிலையில், ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் திவால் நோட்டீசு அளித்தது.

இதைப் போலவே அம்பிகா சர்க்கரை ஆலையும் திவால் நோட்டீசு அளித்துள்ளது.

இதனையடுத்து தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) திவால் நோட்டீசு அளித்துள்ள சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள திவால் சட்ட விதிமுறைகளின்படி (Insolvency and Bankraptcy Code -IBC) கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே திவால் சட்டத்திட்ட விதிமுறைகளில் (IBC) திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சென்னை வந்திருந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் கரும்பு விவசாயிகள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.

சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள் அளித்துள்ள கடன்களுக்காக நிறுவன சொத்துகளைக் கைப்பற்றும்போது, சர்க்கரை உற்பத்தி மூலப் பொருளான கரும்பை உற்பத்தி செய்து அளிக்கும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோருவது நியாயமானது ஆகும்.

எனவே திவால் நோட்டீசு அளித்துள்ள சர்க்கரை ஆலைகளிடமிருந்து கைப்பற்றப்படும் சொத்துகள் மூலம் பெறப்படும் நிதியை முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிட ஏதுவாக திவால் சட்டவிதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.10.2020

Thursday, October 8, 2020

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு! வைகோ இரங்கல்!

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள்  மறைந்துவிட்டார் என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

தலைசிறந்த நாடாளுமன்றவாதியான அவர், 1977 பொதுத் தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, தன் வாதங்கள் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். சமூக நீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்து, மைய மண்டபத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைப்பதற்கும் காரணமாக இருந்தார்.

ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்று, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினார். தனித் தமிழ் ஈழமே தீர்வு என்றும் கூறினார். சென்னை மெரினா கடற்கரையில் மே-17 இயக்கம் நடத்திய ஈழத்தமிழர்கள் புகழஞ்சலி நிகழ்ச்சியில் நான் அழைத்ததன்பேரில் வந்து கலந்துகொண்டார்.

நான் அவரிடம் உயர்ந்த நட்பு கொண்டிருந்தேன். அழகிய தோற்றமும், அறிவாற்றலும் கொண்ட அவர், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஆகிய உன்னத இலட்சியங்களுக்காகவே வாழ்ந்தார்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுக்கு அரிய சேவை செய்ய வேண்டிய அந்த உத்தமர் மறைந்த செய்தி மனதை வாள் கொண்டு பிளக்கிறது. அவரது மறைவினால் வேதனையில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், லோக் ஜனசக்தி கட்சியினருக்கும் என்னுடைய ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.10.2020

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தகாவலர்கள் இட மாற்றமா? வைகோ கடும் கண்டனம்!

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான 17.09.2020 அன்று கடலூர் புது நகரில் காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணியாற்றிய ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இருக்கிறார்கள்.

பெரியார் சிலையின் கீழ் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை இணையதளத்திலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனைச் சகித்துக்கொள்ள இயலாத காவல்துறை உயர் அதிகாரிகள், அவர்களை கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் பெருமளவில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுக்க போராடிய பெரியார் அவர்களின் சிலைக்கு நன்றி உணர்ச்சியோடு மாலை அணிவிப்பதும், மரியாதை செலுத்துவதும் சட்ட விரோதச் செயலா? ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய செயலா?

பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் நடைபெறுவது என்பது கண்டனத்துக்கு உரியது.

உடனடியாக அந்தக் காவலர்களின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் தவறான அணுகுமுறையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.10.2020

அ.மா. சாமி மறைவுக்கு வைகோ இரங்கல்!

தினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியர், அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில், ஒரு மிகச்சிறிய குக்கிராமமான குரும்பூரில் இருந்து, சிறிய வயதில் சென்னைக்கு வந்த சாமி அவர்கள், ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் பேரன்பைப் பெற்றார்; தினத்தந்தி குடும்பத்தோடு, இரண்டறக் கலந்து, இதழியலுக்காகவே தன் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டார். 

கற்பனையுடன் நகைச்சுவை கலந்து வழங்கிய மூத்த எழுத்தாளர்களுள் முன்னோடி அ.மா.சாமி அவர்கள் ஆவார்கள். இலக்கியம் எழுதலாம், பேசலாம்; ஆனால், நகைச்சுவை எழுத்தும், பேச்சும் எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடுவது இல்லை. 

அதிலும் குறிப்பாக, ஒருவரைப் பகடி செய்கின்றபொழுது, அவர் தன்னைத்தான் அப்படிப் பகடி செய்கின்றார் என்பது புரியாமலேயே, எடுத்த உடன் முதலில் சிரித்துவிட்டு, பிறகு சிந்திக்கின்ற பொழுது, அவர் தன்னுடைய குறைகளைத்தான் அப்படி அழகாகச் சுட்டிக் காட்டி இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொண்டு, நினைத்து நினைத்து மகிழச் செய்யும் கலை நகைச்சுவை ஆகும். அத்தகைய எழுத்து நடை வாய்க்கப் பெற்றவர் அ.மா. சாமி அவர்கள். ஏழை, எளிய பாமர மக்களுக்கு எளிதில் புரிகின்றவகையில் எழுதுவதில் அவருக்கு இணை சொல்ல முடியாது. 

பெர்னார்ட் ஷா போன்ற, மிகப் புகழ்பெற்ற அறிஞர்கள், தாங்கள் வாழ்ந்த காலத்தில், தங்கள் சமூகத்தைக் கேலி செய்து, சீர்திருத்தவாதிகளாகப் புகழ் பெற்றார்கள். அத்தகைய நிலையில் வைக்கத்தக்க ஓர் அரிய எழுத்தாளர்தான் அ.மா. சாமி அவர்கள் ஆவார்கள். சின்னச்சின்ன சொல்லோவியங்களை, மிக அழகாக வழங்கினார். அரிய ஆய்வு நூல்களையும் தந்தார்.  பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்து, அவர் எழுதிய பயணக் கட்டுரைகளில் புதிய செய்திகளைத் தந்தார்.

மிக்க தேர்ச்சியோடும், அருமையான அழகியலோடும் தமிழில் எழுதியவர்களுள் முதல் வரிசையில் வைத்து மெச்சத்தகுந்த சாமி அவர்களின் மறைவு, எழுத்து உலகுக்குப் பேரிழப்பு ஆகும். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்கொள்வதுடன், அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், தினத்தந்தி குழுமத்தினருக்கு, ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
08.10.2020

Wednesday, October 7, 2020

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு! வைகோ கண்டனம்!

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று ஏடுகளில் விளம்பரம் செய்து உள்ளது. 

இந்திய வரலாறு. தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கின்றது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் உயர்தனிச் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மத்திய தொல்லியல் துறையின் பட்டப் படிப்புக்கு மட்டும் அன்றி, அதன் பணி இடங்கள் நிரப்பப்படும் போதும் தமிழ் மொழி கல்வித் தகுதி புறக்கணிக்கப்பட்ட விபரம் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது வெட்டவெளிச்சம் ஆகியது.

ஆதிச்சநல்லூர் அகழ்வு ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு. கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் 11 ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் கிருபாகரன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசின் தொல்லியல் துறைப் பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும்” என்ற கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

“தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தனர்.

ஐ.நா. மன்றம் வரை தமிழ் மொழியின் சிறப்பைப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகின்றார்; சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டுகின்றார் என்று செய்யப்படுகின்ற வெற்று விளம்பரங்களை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். செம்மொழி தமிழுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தி மொழி திணிப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கல் என்பதைக் கொள்கையாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பன்முகத் தன்மை கொண்ட இந்நாட்டில், பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு உரிமையைப் பறித்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கின்ற கோட்பாட்டை வலிந்து செயல்படுத்துவது, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
07.10.2020

Sunday, October 4, 2020

மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு சீனி.கார்த்திகேயன் அவர்கள் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், திரு ப.உதயசங்கர் (முகவரி: 72, வ.உ.சி. தெரு, செங்கம் - 606701, திருவண்ணாமலை மாவட்டம். கைபேசி: 98942 67549) அவர்கள் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
04.10.2020

Saturday, October 3, 2020

மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் திரு. ஜெ. இராமலிங்கம் அவர்கள் தனது உடல்நிலை காரணமாக தொடர்ந்து மாவட்டப் பொறுப்பில் இயங்க இயலாத நிலையில் உள்ளதாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கோரிக்கையினை ஏற்று, அவர் கடலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக (முகவரி : எண். 119-சி, மெயின் ரோடு, நெல்லிக்குப்பம் - 607 105, கடலூர் மாவட்டம்; கைப்பேசி எண். 94437 - 90601) நியமிக்கப்படுகிறார்.

கடலூர் கிழக்கு - கடலூர் மேற்கு மாவட்டங்களில் உள்ளடக்கிய சட்டமன்றத்  தொகுதிகள் மாற்றம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதிகள் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகியவை ஆகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக திரு. என். இராமலிங்கம் அவர்கள் தொடர்ந்து கழகப் பணியாற்றுவார்.
கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்டமாக மாற்றப்படுகிறது.
கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதிகள் நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகியவை ஆகும். கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக திரு. எம். பிச்சை அவர்கள் (முகவரி : எண். 6/344, கடலூர் மெயின் ரோடு, நெய்வேலி - 607 802, கடலூர் மாவட்டம்; கைப்பேசி எண். 94433 - 62431) கழகப் பணியாற்றுவார்.
கடலூர் தெற்கு மாவட்டக் கழகம் ஏற்கனவே அறிவித்தபடி இயங்கும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
03.10.2020

Friday, October 2, 2020

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயலாற்றுக. வைகோ வலியுறுத்தல்!

காவிரி நடுவர் மன்றம் 1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் தமிழ்நாட்டிற்கு 137 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 2007 பிப்ரவரி 5இல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய போது, இதே காலகட்டத்தில் கர்நாடகம் 134 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து, 2018 பிப்ரவரியில் அளித்தத் தீர்ப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் 123.14 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று மேலும் குறைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு, சுமார் 3 டி.எம்.சி. குறைவாக 120.24 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்து இருக்கிறது என்பதை இந்து ஆங்கில நாளேடு (02.10.2020) சுட்டிக் காட்டி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நாளேடுகளில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களுக்கு திறந்துவிட வேண்டிய நீர் 86.38 டி.எம்.சி. என்றும், ஆனால் கர்நாடகம் 75.048 டி.எம்.சி. மட்டுமே திறந்துவிட்டது என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி திருவாரூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், உச்சநீதிமன்றம் வரையறுத்த அளவுப்படி கர்நாடகம் மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டுமென்று கேட்டு வருகிறோம். கர்நாகடமும் அதைத் தந்து வருகிறது” என்று தெரிவித்ததாக ஏடுகளில் செய்தி வந்தது. முதலமைச்சரின் கருத்து தமிழகத்திற்குப் பாதகத்தையே ஏற்படுத்தும்.

மத்திய அரசு பெயரளவுக்கு அமைத்த காவிரி ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வப்போது “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்” என்று கர்நாடகத்திற்கு உத்தரவு போடுவதும், அதனை கர்நாடக அரசு அலட்சியப் படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் உண்மை நிலையை மூடி மறைத்துத் தகவல்களை வெளியிடுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பலிகொடுத்துவிடுவது போல ஆகிவிடும்.

எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தண்ணீரைப் பெறுவதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
02.10.2020

உ.பி. மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை;நீதி கேட்கச் சென்ற ராகுல்காந்தி மீது தாக்குதல்! வைகோ கண்டனம்!

பா.ஜ.க. ஆட்சி நடத்துகின்ற உத்திரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில், ஊரில் வயல்வெளியில் வேலை பார்த்துவிட்டு தனது தாயுடன் சென்றுகொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் இது குறித்து வெளியே கூறிவிடக்வடாது என்பதற்காக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள், அந்தப் பெண்ணை துடிக்கத் துடிக்க நாக்கை அறுத்துள்ளனர். மேலும் கடுமையாகத் தாக்கி, முதுகெலும்பை உடைத்துவிட்டு, சாலை ஓரத்தில் விசி எறிந்துவிட்டுப் போய்விட்டனர்.

குற்றுயிரும் குலைஉயிருமாக மீட்கப்பட்ட அந்தப் பெண், அலிகாரில் உள்ள ஜே.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 28 ஆம் தேதி டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு வாரங்களாக உயிருக்குப் போராடிய அந்தப் பெண் செப்டம்பர் 30 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்காமல், உத்திரப்பிரதேச காவல்துறையினர் எடுத்துச் சென்று எரித்து இருக்கின்றனர்.

நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் இத்தகைய கொடூரத்தைச் செய்திருக்கின்ற வெறியர்களை சுதந்திரமாக உலவவிட்ட உ.பி. மாநில பா.ஜ.க. காவல்துறை கூடுதல் இயக்குநர் மூலம் அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்று அறிக்கைவிடச் செய்திருப்பது பாலியல் கொடுமையைவிடக் கொடியது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இக்கொடுமையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்க ஹத்ராஸ் பகுதிக்கு இன்று சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா இருவரும் சென்ற வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதனையடுத்து ராகுல்காந்தி காரிலிருந்து இறங்கி நடைப்பயணமாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அதனை மீறி புறப்பட்ட ராகுல்காந்தியை சீருடையில் இருந்த உத்திரப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கீழே தள்ளி உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சர்வாதிகார பாசிச ஆட்சி நடத்தி வருகிறார்.

இளம் பெண் பாலியல் வன்முறைக்கு நீதி கேட்கச் சென்ற ராகுல்காந்தி தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது.

அதற்குள் இன்னொரு கொடிய நிகழ்வாக 22 வயது மற்றொரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட துயச் செய்தி வந்திருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்திரப்பிரதேசம் மாறி வருகிறது என்பதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, சமூகத்தில் வாழத் தகுதியற்ற, கொடூர குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2020

பத்திரிகை செய்தி: தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகப் பணிகளுக்காக சில மாவட்டக் கழகங்கள் இரண்டாகவும், சில மாவட்டக் கழகங்கள் மூன்றாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகங்களின் விவரப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட அந்த மாவட்டக் கழகங்களின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் விவரங்களும் அந்தந்த மாவட்டக் கழகங்களுயடன் இணைத்து அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக கழக விவசாய அணிச் செயலாளராக புலவர் க. முருகேசன் அவர்களும், கழகத் தேர்தல் பணிச் செயலாளராக வழக்கறிஞர் ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களும். கழகத் தேர்தல் பணித் துணைச் செயலாளர்களில் மேலும் ஒருவராக வழக்கறிஞர் இரா. செந்தில்செல்வன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, தஞ்சாவூர்
2. திருவையாறு
3. ஒரத்தநாடு
4. பட்டுக்கோட்டை
5. பேராவூரணி
திரு. கோ. உதயகுமார் அவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகக் கழகப் பணியாற்றுவார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் 
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, கும்பகோணம்
2. திருவிடைமருதூர்
3. பாபநாசம்
மாநில விவசாய அணிச் செயலாளர் திரு. இரா. முருகன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, நாகப்பட்டினம்
2. கீழ்வேளூர்
3. வேதாரண்யம்
திரு. கீழ்வேளூர் ஸ்ரீதர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

மயிலாடுதுறை மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, மயிலாடுதுறை
2. சீர்காழி
3. பூம்புகார்
திரு. ஏ.எஸ். மோகன் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

கோவை புறநகர் மாவட்டம், கோவை புறநகர் தெற்கு மற்றும் கோவை புறநகர் வடக்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

கோவை புறநகர் தெற்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, பொள்ளாச்சி
2. வால்பாறை
3. கிணத்துக்கடவு
4. தொண்டாமுத்தூர்
திரு. குகன்மில் செந்தில் (எ) செந்தில்குமார் அவர்கள் தொடர்ந்து கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

கோவை புறநகர் வடக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, கவுண்டம்பாளையம்
2. மேட்டுப்பாளையம்
3. சூலூர்
திரு. பி.என். இராஜேந்திரன் அவர்கள் கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

திருச்சி புறநகர் மாவட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மற்றும் திருச்சி புறநகர் தெற்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, மண்ணச்சநல்லூர்
2. முசிறி
3. துறையூர்
4. இலால்குடி
திரு. டி.டி.சி. சேரன் அவர்கள் தொடர்ந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, திருவெறும்பூர்
2. திருவரங்கம்
3. மணப்பாறை
கழகத் தேர்தல் பணிச் செயலாளர் திரு. மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு மற்றும் விருதுநகர் வடக்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

விருதுநகர் தெற்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, விருதுநகர்
2. சாத்தூர்
3. அருப்புக்கோட்டை
4. திருச்சுழி
திரு. ஆர்.எம். சண்முகசுந்தரம் அவர்கள் தொடர்ந்து விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகக் கழகப் பணியாற்றுவார்.

விருதுநகர் வடக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, சிவகாசி
2. இராஜபாளையம்
3. திருவில்லிபுத்தூர்
மாநில மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை தெற்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, ஆரணி
2. வந்தவாசி
3. செய்யாறு
4. போளூர்
திரு. ஆரணி டி. இராஜா அவர்கள் தொடர்ந்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகக் கழகப் பணியாற்றுவார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, திருவண்ணாமலை
2. செங்கம்
3. கீழ்பெண்ணாத்தூர்
4. கலசப்பாக்கம்
திரு. சீனி. கார்த்திகேயன் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு மாவட்டம், கடலூர் கிழக்கு, கடலூர் தெற்கு மற்றும் கடலூர் வடக்கு என மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

கடலூர் கிழக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, கடலூர்
2. குறிஞ்சிப்பாடி
3. நெய்வேலி
திரு. என். இராமலிங்கம் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

கடலூர் தெற்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, சிதம்பரம்
2. புவனகிரி
3. காட்டுமன்னார்கோவில்
திரு. ஏ.என். குணசேகரன் அவர்கள் தொடர்ந்து கடலூர் தெற்கு  மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

கடலூர் வடக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, பண்ருட்டி
2. விருத்தாசலம்
3. திட்டக்குடி
திரு. ஜெ. இராமலிங்கம் அவர்கள் தொடர்ந்து கடலூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

வேலூர் மாநகர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு மாவட்டம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

வேலூர் மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, வேலூர்
2. காட்பாடி
3. அணைக்கட்டு
4. கே.வி. குப்பம்
5. குடியாத்தம்
திரு. வேலூர் என். சுப்பிரமணி அவர்கள் தொடர்ந்து வேலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

இராணிப்பேட்டை மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, இராணிப்பேட்டை
2. அரக்கோணம்
3. சோளிங்கர்
4, ஆற்காடு
திரு. ஆற்காடு பி.என். உதயகுமார் அவர்கள் தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளராகக் கழகப் பணியாற்றுவார்.

திருப்பத்தூர் மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, திருப்பத்தூர்
2. ஜோலார்பேட்டை
3. வாணியம்பாடி
4. ஆம்பூர்
திரு. வ. கண்ணதாசன் அவர்கள் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு  கிழக்கு என மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, காஞ்சிபுரம்
2. உத்திரமேரூர்
3. மதுராந்தகம்
திரு. இ. வளையாபதி அவர்கள் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, திருப்பெரும்புதூர்
2. தாம்பரம்
3. பல்லாவரம்
திரு. மா.வை. மகேந்திரன் அவர்கள் தொடர்ந்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்
1, திருப்போரூர்
2. செய்யூர்
3. செங்கல்பட்டு
திரு. ஊனை ஆர்.இ. பார்த்திபன் அவர்கள் தொடர்ந்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகக் கழகப் பணியாற்றுவார். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2020

கழகத் தேர்தல் பணிச் செயலாளர், துணைச் செயலாளர் நியமனம்
தலைமைக் கழக அறிவிப்பு

வழக்கறிஞர் ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்கள் (முகவரி : எண். 3, கோவிந்தராஜிலு தெரு, ஸ்ரீதேவி நகர், ஆவடி, சென்னை - 600 071; கைப்பேசி எண். 93822 - 56555) கழகத் தீர்மானக்குழுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தேர்தல் பணிச் செயலாளராகவும்,
வழக்கறிஞர் இரா. செந்தில்செல்வன் அவர்கள் (முகவரி : எண். 5/112, அகரபெருந்தோட்டம், பெருந்தோட்டம் (அஞ்சல்) சீர்காழி (வட்டம்), நாகை மாவட்டம் - 609 106; கைப்பேசி எண். 94455 - 25001) கழகத் தேர்தல் பணித் துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2020

கழக விவசாய அணிச் செயலாளர் நியமனம்
தலைமைக் கழக அறிவிப்பு

கழக விவசாய அணிச் செயலாளராக புலவர் க. முருகேசன் (முகவரி வேங்கூர், திருவெறும்பூர். திருச்சி - 620 013; தொலைபேசி எண். 0431 - 240 4481கைப்பேசி எண். 98424 - 99562) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2020